கனகவள்ளி - 9

     காவல்துறை வந்தடைந்த பிறகு உயிரோடிருந்தவர்களை ஆம்புலன்சிலும்,
உயிரற்ற உடல்களை அமரர்ஊர்தியிலும் ஏற்றி மற்ற விதிமுறைகளையும் முடித்திருந்தனர்.

      அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர்," சரி.  என்னப்பா! என்னாச்சு? எப்டி ஆச்சுனு யாராவது சொல்றீங்களா இல்ல..." என்று இழுக்க, அப்போது குறுக்கிட்ட செல்வா, " சார்! ஆம்புலன்ஸ அனுப்பிட்டம்னா பிரச்சனையில்லை..." எனக் கூற,

  இன்ஸ்பெக்ட்டரோ," அட செல்வாவா!  சரி! சரி!.. ஏய் ஆம்புலன்சு நீ கெளம்பு. கருப்பு வண்டி நீயும் கெளம்பு.. " என்ற போது ரகு குறுக்கிட்டு," சார் இன்னும் மூனு உடல் இருக்கு.." என்றான்.

     இன்ஸ்பெக்ட்டரோ," இன்னும் 3 உடலா? டவுட்டா இருக்கு. போச்சா 3 ம்?. சரி. எல்லா பாடியையும் ஏத்து. வண்டி டீடெய்ல எழுதிக்கோ.. மத்த வண்டிகளை கிளியர் பண்ணு டிராபிக் சரி ஆகட்டும்" என்ற போதுதொலைதூர பேருந்து ஒன்று கடந்து சென்றது அந்த இரவில் அவர்களை.

      இப்போது  கர்பிணியின் கணவனின் உடலையும், குழந்தையின் உடலையும் ஏற்றியவர்கள், அவளின் உடலருகில் சென்றபோது ஒரு வித நிசப்தம் உருவாகியது. காற்றும் பலமாக வீசத்தொடங்கியது. இதனால் அவளது உடலை நெருங்க முடியவில்லை அவர்களால்.

    ராஜாவின் ஆன்மா இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தது, அங்கிருந்த ராஜாவும் தான்.

     செல்வாவும் திவ்யாவும் செல்வியும் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டு அந்த உயிரோடிருந்தவர்களோடு மயிலம்பாறையில் இருக்கின்ற அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றது அவர்களது ஆம்புலன்ஸ்.

    இன்பெக்டரோ," என்னப்பா ரகு. அந்த அம்மாவ பார்த்தா ஆக்சிடெண்ட்ல இறந்த மாதிரி தெரிலயே...." என சொல்ல அப்போது மரங்கள் தனது மரக்கிளைகளை பலமாக ஆட்டி "ஆம்" என்று சொல்வது போல் இருந்தது.

      அதே நேரம் அங்கு நின்றிருந்த மாதவனையும் ராஜாவையும் பார்த்த இன்ஸ்பெக்டர்," என்னப்பா நீங்க யாரு" எனக் கேட்க, ராஜாவோ, " சார்!, நாங்க குடுகுடுப்பைகாரங்க. தொழில முடிச்சிட்டு இந்த வழியா வந்த போது இந்த ஆக்சிடென்ட்ட பார்த்தோம். அதான் உதவி செய்ய வந்தோம்யா..." என்றான்.

      அதற்கு இன்ஸ்பெக்டரோ," யாரு நீஙக! ஏன்டா நைட் போயி வீட்ட நோட்டம் பார்த்து திருடுற கூட்டம் தானடா நீங்க!" எனச் சொல்ல,

      கோபமடைந்த ராஜாவோ," சார்! அப்டிலாம் சொல்லாதீங்க சார்.  நாங்கலாம் இந்த தொழில குலத்தொழிலா செய்றவங்க சார். திருடுறது எல்லாம் யாரோ புதுசா திட்டம் தீட்ற திருட்டுக் கும்பல்தான் சார். எல்லாரும் இல்ல சார். நாங்க மக்களோட கஸ்ட நஸ்டங்கள சொல்லி சரிப்படுத்த முயற்சி செய்கிறோம் சார்.." என்று சொல்லி முடிக்கவும்

          ராஜாவின் கன்னத்தில் அரை விழுவதற்கும் சரியாக இருந்தது.

        "ஏன்டா பிச்சை எடுக்குற நாயி நீங்க போலீஸ்காரன் எனக்கே பாடம் சொல்றியா " எனக் கூறிவிட்டு பூட்ஸ் காலால் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தபோது நிலைதடுமாறி விழுந்தான் ராஜா. மாதவனோ அந்த இடத்தில் இருந்து மெதுவாக நகர்ந்து மறைந்து கொண்டான் அந்த இருட்டில் அப்போது.

         ஆனால் ராஜாவோ மேலும் கோபமடைந்தவனாக,"சார்! ஏன் சார் அடிக்கிறீங்க, நீங்க கூடதான் காசு வாங்குறீங்க. செத்த பொணத்த எடுக்குறதுல இருந்து, லைசன்ஸ் வரைக்கும்...." எனச்சொல்ல,

        இதனால் மூர்க்கமான இன்ஸ்பெக்ட்டரோ தனது துப்பாக்கியை எடுத்து," ஏன்டா..பிச்சக்கார நாயே! என்னயவா சீண்டுற.." எனச் சொல்லி சுடப்போக, அப்போது ஒரு அசரீரி ஒலித்தது," சுடுடா...சுடு...ஏன் நிறுத்திட்ட...சுடு.." என்ற போது அடித்த காற்றில் அங்கிருந்த ரமேஸ், ரகு, முருகேஸ், சுரேஸ், இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்ஸ், மாதவன் உட்பட அனைவரும் தடுமாறி விழுந்தனர்.

      அப்போது முருகேசனோ," ஏதோ இங்க இருக்கு.. அந்த பொம்பளையோட உடல மொத ஏத்திட்டு கிளம்புவோம் சார் . இவனுங்கள அப்பறமா வச்சி செய்ங்க சார் " என்ற சொல்லி முடிப்பதற்கும் மேலிருந்து ஆலமர பெரும் வாது ஒன்று அடித்த காற்றில் ஒடிந்து முருகேசன் மேல் விழுவதற்கும் சரியாக இருந்தது. 

     ஆம் முருகேசன் அந்த இடத்திலேயே பலமான வாதினால் உடல் நசுங்கி உயிரிழந்தான்.

  இதைக்கண்ட ராஜாவும் மாதவனும் தெரித்து அந்தப்பக்கம் ஓட, இன்ஸ்பெக்டரும் அவரது கான்ஸ்டபிள்களும் தலைகால் தெரியாமல் ஓடி ஜீப்பில் ஏறிச் செல்ல..

   மினி ஆம்புலன்சை ஓட்டி வந்த ரகு,ரமேஷ்  அதில் ஏற சுரேசும் அவர்களோட தொற்றிக்கொண்டான் பயத்தில்.

   அதைக்கண்ட ரகுவோ," டேய்!, சுரேஸ் பொண வண்டிய எடுடா" எனச் சொல்ல, அதைக்கேட்ட சுரேஸோ,"ஏன்? நீ எடேன். தில் இருந்தா..." எனக்கூறியவன் மறுபடியும்," டேய்! எட்றா.. வண்டிய. நீயும் சாக ஆசப்படுறியா..." எனக் கேட்க, மறுமொழி பேசாமல் ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தான் ரகு...

       அதே நேரத்தில் "டோ " வெகிக்கிளும், காரையும் லாரியையும் இழுத்து ஓரமாக கடத்தியிருந்தது. அதை ஓட்டியவர்களும் வண்டியோடு அதிவேகத்தில் மறைந்து போயிருந்தனர் அப்போது.

     மினி ஆம்புலன்சும், காவல் துறை ஜீப்பும் அதி வேகமாக ," நான் முந்தி, நீ முந்தி" என மாறி மாறி பறக்க,

  அப்போது ரகுவோ இன்ஸ்பெக்டரைப் பார்த்து," சார்! அமரர் ஊர்தி வண்டிய எடுக்கலயே சார்" எனச் சொல்ல,

    அதற்கு இன்ஸ்பெக்ட்டரோ," போங்கடா! அத அப்பறம் எடுத்துக்கலாம். மொதல்ல உயிர காப்பாத்திக்கணும்டா விசாரணை செய்ய.. அந்த குடுகுடுப்ப காரணுகள சும்மா விடமாட்டேன்..." என்ற போது அவரது ஜீப்பின் டிரைவரோ,
" சார்..சார்..ஏதோ ஒரு வண்டி..ரொம்ப வேகமா வருது சார் நமக்கு பின்னாடி..." என்று சொல்லி முடிப்பதற்கும் அந்த வண்டி இவர்களை ஓவர் டேக் செய்து முந்தியதற்கும் சரியாக இருந்தது.

    இன்ஸ்பெக்ட்டரோ," எங்கயா? பின்னாடி ஏதோ வண்டின்ன.." எனக் கேட்க, அதற்கு டிரைவரோ," சார்! முன்னாடி பாருங்க சார்..."  என்ற போது..

  இன்பெக்ட்டரும் பார்த்தபோது,'அமரர் ஊர்தியின் பின்புறக் கதவு மெதுவாக திறக்க, அதில் முருகேசனது உடம்பின் மீது கம்பீரமாக அமர்ந்திருந்தாள் கர்பிணிப்பெண்...'.

    இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் பயத்தில் மூச்சிறைக்க மயங்கி விழுந்தார் தன் இருக்கையிலேயே........

   மினி ஆம்புலன்சில் சென்ற ரகுவும்," என்ன ஜீப்ப காணோம். வேற ஒரு வண்டி ஓவர் டேக் செய்து..." என்றவன் மேலும் வேகத்தை அதிகரிக்க முயல , ஆனால் ஓவர் டேக் செய்ய முயன்ற வண்டி எளிதாக இவர்களை கடக்க..

     ரகுவோ," என்ன இது நம்ம வண்டி..." என இழுக்க ..."எப்படி.."  என அந்த வண்டியின் டிரைவர் சீட்டை பார்த்தபோது அங்கு முருகேசன் ரகுவை பார்த்துச் சிரித்துக்கொண்டே ஓவர்டேக் செய்த போது, அதிர்ந்தான்," முருகேசனா?... அப்போ....  சாகலையா.." என்று யோசித்தபோது, அமரர் ஊர்தியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த  கர்பிணிப்பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான்...

    அதே நேரம் அங்கிருந்து தப்பித்துச் சென்று, ராஜாவும் மாதவனும் சைக்கிளில் வேகமாக சென்றபோது மாதவனின் பையிலிருந்து தாலிச்செயின் தவறி விழ, மாதவனோ," இருடா...ஏதோ விழுந்துடுச்சி...நில்றா .." என சைக்கிளை நிறுத்தி தேடிச்செல்ல..."

      " டேய் ! என்னடா தொலைச்ச..இந்த நைட்ல... இப்படி ஒரு டைம்ல... " என ராஜா கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் தேடலில் மாதவன் மும்முரமாகியபோது ,

       அந்த வழியாக அதிவேகமாக வந்தகொண்டிருந்த வாகனங்களை பார்த்த ராஜா, " டேய் மாதவா! வண்டி வருதுடா.." எனச் சொல்லிக்கொண்டே ஓடி அவனை இழுப்பதற்கும் , மாதவன் தாலிச்செயினை எடுப்பதற்கும், அந்த வாகனங்கள் அவனை கடப்பதற்கும் சரியாக இருந்தது.

      ஆனால் மாதவன் அந்த செயினை எடுத்ததும்," அப்பாடா..." என்று நிம்மதி மூச்சு விட்டபோது ,  வாகனம் ஒன்று அவனை கடக்க, அதே நேரம் செயினும் அவன் கையில் இருந்து இழுபட்டு காணாமல் போக, அதைக் கண்டதும், அதிர்ச்சியில் நிமிர்ந்து பார்த்தவன், அந்த வாகனத்தின் பின்புறத்தில் இரவிலும் அந்த தாலி ஜொலித்தது தங்கக்கலரில் ஒரு இடத்தில். "எப்படி.." என்று அந்த வாகனத்தை மாதவன் பார்த்தபோது!  கர்பிணிப்பெண் தாலியோடு  காட்சியளித்தாள் சிரித்துக்கொண்டே அவனுக்கு.

    
   இதை எதையும் கண்டிராத ராஜா,  அதிர்ச்சியில் நின்ற மாதவனைப் பார்த்து , " டேய்! மாதவா! வாடா போயிடலாம்... பேயி வந்துற போது ...." என்றவனைப் பார்த்து ",நீ அத பார்க்கலயா...?" என்று கேட்டுவிட்டு அதிர்ச்சியில் நின்றான் மாதவன்...

   இதை அனைத்தையும் கண்டுகொண்டிருந்த ராஜாவின் ஆன்மா ," இவ்ளோ நடந்திருக்கா..." என பெருமூச்சு விட்டவாறு நினைத்துக் கொண்டிருந்தான்...
  

  

    

Comments

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்