Posts

Showing posts from November, 2018

மனையாள்

Image
தொடர்ந்து பெய்த மழையால் வீரனூர் தன் பொலிவை மீட்டுக்கொண்டிருந்தது. வற்றிப் போயிருந்த மயிலை ஆறும் பொன்னி நதியைப்போல் மின்னிக்கொண்டிருந்தது. மலையின் அடிவாரத்தில் தென்னந்தோப்புடனும் , சுற்றி வயல்களுடனும் , மாடுகள்,  ஆடுகள் கோழிகள் என பூமயிலும் ராஜசேகரனும் ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் தோப்பில் சில வேலையாட்களும் தங்கியிருந்து விவசாய வேலைபார்த்து கொண்டிருந்தனர். வேலையாட்களுக்கும் வீரனூர் மக்களுக்கும் பூமயில் மீதும் ராஜசேகரன் மீதும் அளவிட முடியாத அன்பு, மரியாதை. பூமயிலும் கணவனுக்கு நிகராக குணத்திலும் திறமையிலும் சமமானவள். உழுவது முதல் ஏர் பிடிப்பது வரை ஆணுக்கு நிகர் அவள். தைரியத்திலும் சரி ஆனால் பார்ப்பதற்கு அமைதியான முகபாவம் உடையவள். ஊரில் நடுவே பெரிய வீட்டில் இருந்தவர்கள் அமைதியை நாடி ஊருக்கு ஒதுக்குப்புறம் மலையடிவாரத்தில் வீட்டைக்கட்டி தங்கிவிட்டனர். ஊரின்தலைவராக ராஜசேகரன் இருந்தபோது சமுதாய கூட்டங்களில் தனது நேர்மையான தீர்ப்பினால் சொந்தங்களுக்குள் எதிர்ப்பையும் சம்பாரித்திருந்தாலும் அவரின் மீது மரியாதை அளவுக்கதிமாக இருந்தது. அவர்களது இரு மகள்கள் கீர்த்தனா, நிவே