Posts

Showing posts from February, 2019

கனகவள்ளி - 3

                     "அம்மா ஆஆஆ அப்பா ஆஆஆ" என்று அழுதுகொண்டேயிருந்த அந்தக் குழந்தையைப் பார்த்த கர்பிணிப் பெண் அவளருகில் வந்து சிரித்துக்கொண்டே 'அவளை அணைத்தபோது'  இருவரும் மறைந்து போயினர் அவ்விடத்தை விட்டு.              அதேநேரம் குடுகுடுப்பைக்காரன் ராஜாவோ, 'செட்டியார் வீட்ல உள்ள குடும்பம் என்ன ஆனதோ ' என்று நினைத்துக்கொண்டே சென்றவன், " சே! இப்டி ஒரு பிரச்சனைல நாம விட்டுட்டு போனா நம்ம தொழிலுக்கே துரோகம் செய்ற மாதிரி. உயிர் போனா போகட்டும். நம்மளால முடிஞ்சத செய்வோம்" என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் செட்டியார் வீட்டுக்குத் திரும்பினான்.          காலை நேரம் என்றாலும் மறுபடியும் ஏதோ இருள் கவ்வியது போன்றே இருந்தது அந்நேரம்.           மேலே அந்நாந்து பார்த்தவன் 'கிளைமேட் கூட பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறதே' என்று முனங்கிக் கொண்டே சென்றான். சிறிதுநேரத்திலேயே வீடும் மாறுதலுக்கு உட்பட்டு ஏதோ விகாரமாக காட்சியளித்தது அப்போது. அது மேலும் பயத்தை அதிகப்படுத்தியிருந்தது அவனுக்கு.           சிறிது கலக்கத்தோடு 'ஆத்தா ஜக்கம்மா நீதான் தாயி காப்பா

கனகவள்ளி - 2

          கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்து சிலையாக நின்ற ராஜாவை, பின்புறமாக ஒரு கை அவனது தோள்பட்டையை தொட்டதும் சுயநினைவு வந்தவனாக திரும்பிப் பார்த்தவன்  " டேய் ராஜா ராஜா. என்னடா ?" என்று கேட்ட மாதவனைப் பார்த்ததும் மயங்கிச் சரிந்தான் கீழே.            பதறிய மாதவனோ சிறிது தண்ணீர் தெளித்து அவனை எழுப்ப, எழுந்தவன் "நீ ?.... , நீ ? ...செத்துட்டியே? எப்பிடி மறுபடியும் ...? பேய் .. பேய்...." என்று பயத்தில் உளர..            "டேய் ராஜா!  இந்தாடா! டேய்"என்று அழைத்துவிட்டு ஓங்கி ஒன்று கன்னத்தில் விட்டான் மாதவன் ராஜாவுக்கு..         " அந்தப்பேயி..பேயி....உன் உடம்பு மேல உக்காந்திருந்துச்சுடா...." என்று ராஜா மறுபடியும் கூற,         மாதவனோ, " டேய் நீ கத்தவும் தான்டா நான் இங்க வந்தேன். அவ்ளோ நேரம் தெருக்கடைசில இருந்தேன். நீ கத்துன சத்தம் கேட்டுதான் நான் இங்க வந்தேன். இல்லனா இன்னும் மூனு வீட்டுக்கு சொல்லிட்டு வந்திருப்பேன்" என்றான் ராஜாவிடம்.          ராஜாவோ , " டேய் மாதவா. என்ன நம்புடா. வேணும்னா வா, நா கூட்டிட்டு போரேன் அந்தப் பேய் வீட்டுக்கு. அந