Posts

Showing posts from March, 2019

கனகவள்ளி - 4

     திவ்யாவின் உடலைப் பார்த்து  கதறி அழுதவண்ணமே இருந்தான் ரகு.       "இனி யாருக்காக வாழப்போகிறேன், நீயே போய்ட்ட, இனி நான் இருந்து என்ன பண்ண. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னியே. ஆனா நானே உன்ன.... " என்று அழுதுகொண்டே முனங்கியவன் காதில், யாரோ பேசுவது போல் உணர்ந்ததால் கணநேரம் அழுகையை நிறுத்தியவன் மறுபடியும் கூர்ந்து கேட்ட போது, " ஐயோ! ஐயோ ! எங்களை விட்ருங்க. நாங்க போய்டுறோம். ஐயோ.. ப்ளீஸ். ண்ணா. ப்ளீஸ்.. ண்ணா ....." என்று வார்த்தைகள் காதில் விழுந்த போதும் தெரியவில்லை அவனுக்கு அது யார் என்று.       மறுபடியும் அதே குரல் ஒலித்தது அவன் காதுகளில்  ," ஒன்னா .. ரெண்டா..நியாகப்படுத்த..ம்ம்.. இப்போ அழுகுற. அவுங்க அழுகுற சத்தம் உனக்கு கேட்காத போது உன் அழுகுரல் எனக்கு மட்டும் கேட்குமா.ஹா..ஹா "  என்றவாறு மறைந்து போனது.      இதனால் பயத்தில் நடுங்கியவன் ஆம்புலன்சின் பின் கதவை மூடிக்கொண்டான். அதே நேரம் தன் மொபைலை எடுத்து குருஜிக்கு  call செய்தான்.       ஆனால் குருஜியோ தியானத்திலும் மற்ற சீடர்கள் யாகத்தின் பணிகளிலும் இருந்ததால் இவனது அழைப்பை யாரும் கவனிக்கவில்லை