கனகவள்ளி - 4

     திவ்யாவின் உடலைப் பார்த்து  கதறி அழுதவண்ணமே இருந்தான் ரகு.

      "இனி யாருக்காக வாழப்போகிறேன், நீயே போய்ட்ட, இனி நான் இருந்து என்ன பண்ண. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னியே. ஆனா நானே உன்ன.... " என்று அழுதுகொண்டே முனங்கியவன் காதில், யாரோ பேசுவது போல் உணர்ந்ததால் கணநேரம் அழுகையை நிறுத்தியவன் மறுபடியும் கூர்ந்து கேட்ட போது, " ஐயோ! ஐயோ ! எங்களை விட்ருங்க. நாங்க போய்டுறோம். ஐயோ.. ப்ளீஸ். ண்ணா. ப்ளீஸ்.. ண்ணா ....." என்று வார்த்தைகள் காதில் விழுந்த போதும் தெரியவில்லை அவனுக்கு அது யார் என்று.

      மறுபடியும் அதே குரல் ஒலித்தது அவன் காதுகளில்  ," ஒன்னா .. ரெண்டா..நியாகப்படுத்த..ம்ம்.. இப்போ அழுகுற. அவுங்க அழுகுற சத்தம் உனக்கு கேட்காத போது உன் அழுகுரல் எனக்கு மட்டும் கேட்குமா.ஹா..ஹா "  என்றவாறு மறைந்து போனது.

     இதனால் பயத்தில் நடுங்கியவன் ஆம்புலன்சின் பின் கதவை மூடிக்கொண்டான். அதே நேரம் தன் மொபைலை எடுத்து குருஜிக்கு  call செய்தான்.

      ஆனால் குருஜியோ தியானத்திலும் மற்ற சீடர்கள் யாகத்தின் பணிகளிலும் இருந்ததால் இவனது அழைப்பை யாரும் கவனிக்கவில்லை.

      அந்த சமயம் அவனுக்கு ஏதோ இழுத்துச்செல்லப்படும் சத்தம் கேட்டு திருதிருவென முழிக்க, யாரோ ஆம்புலன்சின் பின் கதவை திறக்க முயற்சி செய்வதைக் கண்டான்.

   " பேயாக இருக்குமோ" என்று நினைத்துக்கொண்டிருந்த போது தலைசிதறி உயிரிழந்த ரமேஷ் ரத்தம் வடிய கதவைத் திறக்க அதைப்பார்த்த ரகு உறைநிலைக்கே சென்று ரமேஷையே உத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

      ஆனால் ரமேஸோ ரகுவைப் பார்க்காமல் தான் முன்னே படித்திருந்த இடத்திலயே மீண்டும் ஏறிப் படுத்துக் கொண்டான் இரத்தம் வடிய. பிறகு ரமேஸின் ஒரு கை மட்டும் உயிர் பெற்று ரகுவின் மடியிலிருந்த திவ்யாவின் உடலை முழுவதுமாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு மறுபடியும் உயிரற்றதாக மாறிப்போனது.

   ரகுவோ ,"இப்படி ஒரு நாள் என் வாழ்க்கைல வரும்னு.." என்று கண்ணீர் விட்டான்.

     "அடுத்து நான்தான் சாகப்போறேன்" எனப் பயத்தில் புலம்பியவாறே மறுபடியும் குருஜியை அழைத்தான் அவனது மொபைலில். "குருஜி! குருஜி!-ப்ளீஸ் எடுங்க எடுங்க" என மனதிற்கொள் வேண்டிக்கொண்டது வீண் போகவில்லை, அழைப்பை ஏற்றுக்கொண்ட குருஜி " ஹலோ ரகு எங்க இருக்க. எப்டி இருக்க" என கேட்டவாறு இருந்தார் ரகு பேசத்துவங்குதற்கு முன்பே பயத்தில்.

    ரகுவோ,  "குருஜி!என்ன எப்டியாவது காப்பாத்துங்க . "குருஜி! ரமேஸும், திவ்யாவும் இறந்துட்டாங்க" என அழுதவாறே சொன்னபிறகு மேலும் தொடர்ந்தான் ," குருஜி ! நான் ஆம்புலன்ஸ் உள்ள மாட்டிகிட்டு இருக்கேன். என்ன காப்பாத்துங்க" என்று கெஞ்சினான் அவரிடம்.

      குருஜியோ," பயப்படாத. பயப்படாத " என்றபோது ஆம்புலன்சில் பெட்ரோல் ஸ்மெல் வருவதை லேசாக உணர்ந்த போது மறு நொடி கருகும் ஸ்மெல்லும் வர பதறியவன் " சாமி. ஆம்புலன்ஸ் எரியுது.. அய்யய்யோ.. அய்யய்யோ .. காப்பாத்துங்க.. யாராச்சும். " என்று கத்தினான் கதவை திறக்க முற்பட்டுக் கொண்டே..........

 
         அதே நேரம் வீட்டை அடைந்திருந்த குடுகுடுப்பைக்காரன் ராஜாவும், தன் பூஜை அறையில் வைத்திருந்த மிச்சமிருந்த யந்திர தகடுகளையும் தாயத்துகளையும் எலுமிச்சம் பழங்களையும்  எடுத்துப் பைக்குள் போட்டுக்கொண்டவன், பல கோவிலிலிருந்து கொண்டுவந்திருந்து ஒன்றாக சேர்த்து கலக்கப்பட்ட திருநீரை எடுத்து நெற்றியில் பட்டையாக பூசியவாறு ," ஆத்தா நீதான் காப்பத்தனும் " என்று அமர்ந்த கோலத்தில் இருந்த ஜக்கம்மாவின் திருவுருவப் படத்தை வணங்கிக்கொண்டு, குருஜியின் ஆசிரமத்துக்குக் கிளம்பினான் தனது மிதிவண்டியில்.

        சக குடுகுடுப்பைக்காரன் மாதவன் இறந்ததை எப்படி அவனது குடும்பத்திற்கு சொல்வது என்று யோசனையிலே கண்களிலிருந்து நீர் வழிய, அதை துடைத்துக்கொண்டு பயணித்தான் அவனது மிதிவண்டியில்.

      ஆசிரமத்திற்குச் செல்வதற்குக் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்திருந்தான் அந்த இரவிலும் விரைவாகச் செல்வதற்கு.

      ஆனாலும் மயிலம்பாறையை கடந்துதான் அந்தக் காட்டுவழி குறுக்குப்பாதையே ஆரம்பிக்கும் அதனால் தன் சைக்கிளில் இருந்த டைனமோ லைட்டையும் சரி செய்து கொண்டுவிட்டான் முன்பே.

      இரவு 11 மணியை நெருங்கியதால் மக்கள் நடமாட்டமே காணப்படவில்லை. குழப்பம் ! பதட்டம்!  விரக்தி! பயம்! என சகலமும் கலந்த கலவையுடனே ஒரு முரட்டு தைரியத்துடனேயே அவன் பயணத்தை மேற்கொண்டிருந்தான்.

      மயிலம்பாறையை நெருங்கியதும் ஒரு வித பதட்டம் தொற்றிக்கொள்ள, மாதவனின் நினைவுகள் வந்தோடின அவன் நினைவுகளில். அந்த டைனமோ லைட்டும் அந்த இரவிலும் அதன் வெளிச்சம் ' இறங்க! ஏற! இறங்க! ஏற!' என சூழ்நிலையை மேலும் பயமாக்கியிருந்தது அவனுக்கு.

             மயிலம்பாறையின் பிரிவை அடைந்ததும், மெதுவாக தான் வந்த திசையைத் திரும்பி நோக்கினான், ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை தொந்தரவு செய்ததால்.

        பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன் மிதிவண்டியை நிறுத்திவிட்டுத் தன் பையிலிருந்த ஒன்பது முத்துகளை எடுத்து ( இறந்த கடல் நத்தையின் ஓடுகள் , சோழி போடுவதற்கு) உருட்டிவிட்டுச் சகுனத்தை ஆராய்ந்தான் 'குறுக்கு வழியே போகலாமா வேண்டாமா' என்று.

    ஆனால் அது வெறொன்றை உணர்த்தியது அவனுக்கு. அந்த முத்துக்கள் தானாகவே மாறிக்கொண்டே இருந்தன நிலையாக ஓரிடத்தில் இல்லாமல். ராஜாவோ," இதென்ன " என வியப்படைந்தான். அப்போதுதான் அவனுக்கு அவன் தந்தை சொன்னது நியாபகத்திற்கு வந்தது.

     "முத்துக்கள் ஓரிடத்தில் நிற்காமல் உருண்டு கொண்டே இருந்தால், நாம் கணிக்க முற்படுவதை  அங்குள்ள ஒரு சக்தி விரும்பவில்லை அதை கோபமாக வெளிப்படுத்துகிறது என்று அர்த்தம்" என்பதாக.

      சுற்றும் முற்றும் பார்த்தவன் 'அப்படி ஏதும் பயம் அளிக்கக்கூடிய சம்பவங்கள் நடக்கவில்லை ' என்று தன்னை உறுதிபடுத்திக்கொண்டவன், இப்போது முத்துக்கள் ஓரிடத்தில் இருந்ததைப்பார்த்துச் சிரித்துக்கொண்டே "சரி. சரி. காத்து போல " என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டவன்,  அந்த முத்துக்கள் அளித்தப் பதிலை கண்டுகொள்ளாமல் அதை அள்ளி பைக்குள் போட்டுக்கொண்டான்..

       இதனால் குறுக்குப்பாதையை முழுமனதாக தேர்ந்தெடுத்து அதன் வழியே பயணிக்கத் தொடங்கினான் குடுகுடுப்பைக்காரன் ராஜா.

        தூரம் செல்லச் செல்ல ஒரு வித நிசப்தம் உருவானது அந்தக் காட்டின் ஆரம்பத்தில்.  வலதுபுறம் யூக்கலிப்ட்டஸ் மரங்கள் வானுயர்ந்து காணப்பட்டாலும் ஒன்றோடொன்று உரசி பேரிரைச்சலை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

        இடது புறம் ஒரு வேலி போல் முட்செடிகள் புதர்போல் மண்டியிருந்தன. காட்டின் ஓரத்தில் ஒத்தையடி பாதையில் மிதிவண்டியை சரியாக மிதிக்க முடியாமல் திணறினான், ஏனெனில் மணலாகவும் குழியாகவும் முட்களாகவும் இருந்த பாதையும் , அந்த டைனமோ லைட்டின் மங்கலான ஒளியும் மிகுந்த சிரமப்படுத்தின அவனை.

        மனதில் திக் திக் பயத்துடன் கடவுள் பெயர்களை அவனே ஒரு பாடலாக பாடிக்கொண்டு பயணித்தான். வழியைமட்டுமே பார்த்துக்கொண்டு இருபுறமும் பார்க்காமல் இதுவரை பயணித்தவன் யதார்த்தமாக வலது புறம் திரும்ப ஒரு கருமையான உருவம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்ததை கண்டதும் ஒரு கணம் திகைத்தவன் மறுபடியும் உத்து பார்த்தபோது அது அந்த இரவில் ' சாதாரணமாக கண்களுக்கு புலப்படும் ஒரு மாய உருவம் ' என நினைத்துக் கொண்டான். ஆனாலும் கை கால்கள் நடுங்கவே செய்தது அவனுக்கு.

      மேற்கொண்டு மிதிவண்டியை மிதிக்க இயலாததால் இறங்கி உருட்டிக்கொண்டு பயணத்தை தொடர மறுபடியும் வலது புறம் சந்தேகத்தோடு பார்க்க அதே உருவம் தெரிந்தது அவனுக்கு. மீண்டும் தலையை நேராக திருப்பிப் பயணத்தை தொடரந்தவன் கேரியரில் இருந்த  தனது துண்டு எதிலோ சிக்கிக் கொண்டதை உணர்ந்தான்.

       கடவுள் பெயரை சத்தமாக முனுமுனுத்தவன் மெதுவாகத் திரும்பி அதைப்பார்த்த போது, அந்த துண்டு காற்றில் பறந்து போவதைக்கண்டு திகைத்தான், ஏனெனில் காற்றும் அப்போது பலமாக இல்லை.

      துண்டு பறப்பதையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தவன் தனது மிதிவண்டியின் பெல்லிலிருந்து 'டிரிங் டிரிங்" என்ற சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சியுற்றவன்  மெதுவாகத் திரும்பிய போது அவன் கண் முன் எந்த உருவமும் இல்லை.

         பயத்தில் வெளிரிக்காணப்பட்டவன் மீண்டும் நகர்ந்த போது இடது புறம் ஒரு பெரிய தோப்பு இருப்பதைக் கண்டவன் அங்கிருந்து ஒரு அழுகுரல் வருவதையும் கேட்டான். மறுபடியும் கூர்மையாக கேட்ட ராஜா மிதிவண்டியை நிறுத்திவிட்டு, அந்த சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே அவன் கண்டது ஒரு பெண் குழந்தையை அதன் உடையை வைத்து.

      குழந்தையின் அருகே சென்றவன் மெதுவாக தயங்கித் தயங்கி" பாப்பா.. பாப்பா.."  என்று அழைத்தவன் மேலும் தன் கையிலிருந்த மொபைல் டார்ச் லைட்டால் முகத்தில் அடித்த போது திகைத்தவன்  ,"பாப்பா நீ யா. இங்க..எப்பிடி... எப்பிடி மா வந்த " எனக் கேட்க! அந்தக் குழந்தை அப்பா.... அம்மா ... என தோப்பின் உட்புறம் கையை காட்டி அழ ஆரம்பித்தாள்...

     அதீத பயத்தோடு கை காட்டிய திசையை நோக்கியவன் அது செட்டியார் வீட்டின் பின்புறம் உள்ள தோப்பு என்பதை அறிந்து கொண்டான். மேலும் அந்தக் குழந்தை பேபிமாவிடம் ," சரி வாம்மா.. நா அப்பா அம்மாகிட்ட கூட்டிப்போறேன். அவுங்க எங்க இருக்காங்கனு காமிக்கிறியா" என குடுகுடுப்பைக்காரன் ராஜா கேட்க, பேபிமாவோ அழுதுகொண்டே அதே திசையை மட்டுமே காண்பித்தாள் மீண்டும்.

        " சரி" என்று முடிவு செய்துவிட்டு பேபிமாவை தூக்க முற்பட பேபிமாவோ நடக்க ஆரம்பித்திருந்தாள் அவள் காட்டிய திசை நோக்கி. "பார்ரா .." என்று முனங்கியவன் , "சைக்கிள் இங்கயே இருக்கட்டும். போயி விட்டுட்டு வந்துடுவோம் இந்த பாப்பாவை"என நினைத்து பேபிமாவை பின்தொடர ஆரம்பித்தான்.

        மாம்பழங்களின் நறுமணம் அவனது மூக்கை துழைக்க, சருகுகளின் மீது நடர்ந்ததால் நடைசத்தமும் "சரக் புரக்" என்று கேட்டது அவனுக்கு.

.       சிறிது நேரம் அப்படியே சென்றவனுக்கு ஒரு சந்தேகம் வர ," என்ன பாப்பாவோட காலடிச் சத்தம் கேட்கல ' என யோசித்தபோது அவன் செட்டியார் வீட்டின் பின்புறக் கேட்டை அடைந்திருந்தான். அதே நேரம் பேபிமாவோ வீட்டின் பின்புற வாசல் கதவை அடைந்திருந்தாள்.

        ராஜாவும் கேட்டை திறந்து உள்ளே சென்று கதவை திறக்க முற்பட்ட போது, அப்போதுதான் அவனுக்கு உறைத்தது "இந்த பாப்பா கதவு திறக்காம எப்படி உள்ள போச்சு|" என்று நினைத்து திகிலில் நின்றான் சிலையாக.....

      "இதுவும் பேயா.." எனப் பீதியடைந்து...

     

         அதேநேரம் பலத்த காயமடைந்திருந்தாலும் அதைப்பொருட்படுத்தாமல் தன் சீடர்களை அழைத்தவர், "விரைவாக யாகத்திற்குத் தயார் செய்யுங்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறோம். சிலரை  காப்பாற்ற வேண்டும் முதலில். சீக்கிரம்  "என்று ஆணையிட்டவர் தன் கண்களை மூடி  தியானம் செய்ய ஆரம்பித்தார்.

          ஆழ்ந்த தியானத்தை அடைந்தவர், தன் ஞான சக்தியால் அந்த துர் சக்தி யார் என்பதை அறிய முயன்றார். ஆனால் எவ்வளவு முயன்றும் மிகக் கரிய இருள் ஒன்றே அவர் கண் முன் தெரிந்தது. இன்னும் தேடத் தேட  ஒரு கருமை நிழல் அவரது ஆன்மாவை அடைய முயன்றது, இன்னும் முயன்றிருந்தால் அவரது உயிருக்கே ஆபத்தான ஒரு அசம்பாவிதம் நடைபெற இருந்த கணத்தில் தன் தியானத்தை கைவிட்டவரின் உடல் மேலும் கீழும் மூச்சு வாங்கியது, ஏனெனில் அதன் சக்தியை அவர் ஆன்மா உணர முடிந்ததால் அவர் உடல் கட்டுப்பாடிழந்து, வியர்வையும் ஆறாக வடிந்தோடியது அவரது உடலிலிருந்து.

       பயந்த சீடர்களோ, அவரை ஆசுவாசப்படுத்தி  குடிக்க சிறிது நீரைக் கொடுத்தனர். அதைப்பருகிய குருஜி, சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டுத் தொடர்ந்தார்,
"மாணவர்களே! நீங்கள் அனைவரும் இந்த யாகம் முடிந்தவுடன் ஒவ்வொரு குழுவாக புன்னிய ஸ்தலங்களுங்க்கு சென்று, துஸ்டசக்திகளை கட்டுப்படுத்தும் பூஜைகளை செய்துவிட்டு வாருங்கள். நான் மட்டும் இங்கு இருக்கிறேன். மேற்கொண்டு எதுவும் கேட்கவேண்டும். இன்று நடுநிசியே கிளம்புங்கள். யாகம் தொடங்கியதும் நான் என் உடலைவிட்டு ஆத்மாவாகச் செல்கிறேன் சில நாழிகைகள் "என்று கூறிவிட்டு அமைதியானார்.

         சீடர்களும் மும்முரமாக தயாராகினர் யாகத்திற்கான வேலையில்.

     குருஜியோ ," தன் ஞான சக்தியால் ஆத்மாவாக வெளியேறி மருத்துவமனையில் எரிந்துகொண்டிருந்த ஆம்புலன்சின் அருகில் சென்றவர், அதன் கதவை தனது சக்தியால் திறந்த போது ரகுவின் உயிரற்ற  எரிந்து கொண்டிருந்த உடல் கீழே பொத்தென்று விழுந்தது. இப்போது ஆம்புலன்ஸை தீ முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டது மற்ற இருவரது உடல்களோடு.

        குருஜியின் ஆத்மா சில நிமிடங்கள் அமைதியாகி் சில மந்திரங்களை உதிர்த்து அவர்களின் ஆத்மாவை சாந்திப்படுத்தினார். ஆனால் முழுமையாக முடிக்காமல் விட்டுவிட்டார். இப்போது அவரது ஆத்மா மறுபடியும் தேடலில் இறங்க, அந்த கருமை நிற உருவம் இப்போது மங்கலாக ஒரு காட்டின் மூலையில் இருப்பதை உணர்ந்தவர் ! மேலும் முயல,  அது ஒரு பழங்காலக் கோவிலை  கண்டு அதிசயத்து நின்றது.

"இங்கா..." என!

தொடரும்....

       

     

Comments

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்