Posts

Showing posts from April, 2019

கனகவள்ளி - 9

     காவல்துறை வந்தடைந்த பிறகு உயிரோடிருந்தவர்களை ஆம்புலன்சிலும், உயிரற்ற உடல்களை அமரர்ஊர்தியிலும் ஏற்றி மற்ற விதிமுறைகளையும் முடித்திருந்தனர்.       அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர்," சரி.  என்னப்பா! என்னாச்சு? எப்டி ஆச்சுனு யாராவது சொல்றீங்களா இல்ல..." என்று இழுக்க, அப்போது குறுக்கிட்ட செல்வா, " சார்! ஆம்புலன்ஸ அனுப்பிட்டம்னா பிரச்சனையில்லை..." எனக் கூற,   இன்ஸ்பெக்ட்டரோ," அட செல்வாவா!  சரி! சரி!.. ஏய் ஆம்புலன்சு நீ கெளம்பு. கருப்பு வண்டி நீயும் கெளம்பு.. " என்ற போது ரகு குறுக்கிட்டு," சார் இன்னும் மூனு உடல் இருக்கு.." என்றான்.      இன்ஸ்பெக்ட்டரோ," இன்னும் 3 உடலா? டவுட்டா இருக்கு. போச்சா 3 ம்?. சரி. எல்லா பாடியையும் ஏத்து. வண்டி டீடெய்ல எழுதிக்கோ.. மத்த வண்டிகளை கிளியர் பண்ணு டிராபிக் சரி ஆகட்டும்" என்ற போதுதொலைதூர பேருந்து ஒன்று கடந்து சென்றது அந்த இரவில் அவர்களை.       இப்போது  கர்பிணியின் கணவனின் உடலையும், குழந்தையின் உடலையும் ஏற்றியவர்கள், அவளின் உடலருகில் சென்றபோது ஒரு வித நிசப்தம் உருவாகியது. காற்றும் பலமாக வீசத்தொடங்கியது. இதன

கனகவள்ளி 8

     அழுதுகொண்டிருந்தா ராஜா, அந்த இடத்தில் தன் குரல் போல் கேட்டதை அதிர்ந்து திரும்பினான்.       ஆம் ராஜாவும் மாதவனும் மயிலம்பாறையை நோக்கி வந்துகொண்டிருந்தனர் சைக்கிளில் சத்தமாக பேசிச் சிரித்துக்கொண்டு அந்த நடு இரவிலும்.    அப்போது விபத்தை பார்த்த ராஜாவும்,  மாதவனும் திகிலடைந்து இருந்தனர்.         திகிலடைந்த ராஜா சில நொடிகள் நகராமல்அங்கேயே நிற்க, மாதவனோ,"விழுந்து கிடந்த பைக்கை நோக்கி நகர, ராஜாவோ ," இருடா நானும் வர்ரேன்..." என்றவன் சைக்கிளை போட்டுவிட்டு மாதவனை பின்தொடராமல் காரை நோக்கி ஓடினான் பதட்டத்தில்..அதுதான் ராஜாவின் காதில் விழுந்த வார்த்தைகள்.     பிறகு மாதவனோ பைக்கை கடந்து, முனகல் வரும்  இடத்தை நோக்கி நகர்ந்து அங்கு பார்த்த போது கர்பிணிப் பெண் அலங்கோல நிலையில் கிடந்தாள்.         ஆம் சிறிது நேரத்திற்கு முன்பு தான் செல்வா, ரகு, ரமேஸ் மற்றும் முருகேசன் என நான்கு பேரும் அவளை சித்ரவதை செய்த பிறகு அவளின் கழுத்தில் கிடந்த கனமான பத்து பவுன் தங்கச் செயின் தாலியை அறுக்க முற்பட்ட போது, செல்வியும் திவ்யாவும்," ஐயோ !, யாராவது வாங்க ..."  எனக்கத்தியதால் அங்கிருந்து

கனகவள்ளி - 7

      ராஜாவுக்கும் ஏதேதோ நியாபங்கள் வந்து போனது மயிலம்பாறையைப் பற்றி இப்போது.     அதே சமயம் செல்வாவும் மொபைலில் பேசி முடித்த பிறகு ஆம்புலன்சில் இருந்த இருவரை நோக்கி," செல்வி! திவ்யா! ( இருவரும் ஆம்புலன்சில் இருக்கும் நர்சுகள்) ரெடியா இருங்க. நான் போயி ரகு வ பார்த்துட்டு வந்துடுறேன் ரெண்டு நிமிசத்துல" என்று கூறிவிட்டு வண்டியை விட்டு இறங்கி நேராக லாரியோடு காத்திருக்கும் ரகுவை நோக்கி விரைந்தான் விறு விறு என்று.       அருகிலேயே இருந்ததால் சில நிமிடங்களில் அவர்கள் இடத்தை அடைந்தவன்," டேய் ரகு. ரெடியா?, இன்னைக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் சரி, சரியான உருப்படி கிடைக்குறவரை வெய்ட் பண்ணுவோம். மெயின்ரோட்ல நிக்கிற முருகேசன், சுரேஸ்ட்டயும் சொல்லிட்டேன். சரியான உருப்படியா பாத்து சொல்லுங்கடானு. இளம் வயசா இருந்தா பரவாயில்லைனு பெரியவுக சொல்லியிருக்காங்க. சோ ரெடியா இருங்க" என்றவன் தொடர்ந்து "எங்க மினி ஆம்புலன்ஸ் நிக்கிது ரமேஸைக் காணோம்" என்று சொல்லிவிட்டு அங்குமிங்கும் பார்த்த போது, ரமேஷ் புதரிலிருந்து வெளிவந்து," டேய் செல்வா இங்கதாண்டா இருக்கேன். பயப்படாத பக்காவா பிளான் ர