கனகவள்ளி 8

     அழுதுகொண்டிருந்தா ராஜா, அந்த இடத்தில் தன் குரல் போல் கேட்டதை அதிர்ந்து திரும்பினான்.

      ஆம் ராஜாவும் மாதவனும் மயிலம்பாறையை நோக்கி வந்துகொண்டிருந்தனர் சைக்கிளில் சத்தமாக பேசிச் சிரித்துக்கொண்டு அந்த நடு இரவிலும்.

   அப்போது விபத்தை பார்த்த ராஜாவும்,  மாதவனும் திகிலடைந்து இருந்தனர்.

        திகிலடைந்த ராஜா சில நொடிகள் நகராமல்அங்கேயே நிற்க, மாதவனோ,"விழுந்து கிடந்த பைக்கை நோக்கி நகர, ராஜாவோ ," இருடா நானும் வர்ரேன்..." என்றவன் சைக்கிளை போட்டுவிட்டு மாதவனை பின்தொடராமல் காரை நோக்கி ஓடினான் பதட்டத்தில்..அதுதான் ராஜாவின் காதில் விழுந்த வார்த்தைகள்.

    பிறகு மாதவனோ பைக்கை கடந்து, முனகல் வரும்  இடத்தை நோக்கி நகர்ந்து அங்கு பார்த்த போது கர்பிணிப் பெண் அலங்கோல நிலையில் கிடந்தாள்.

        ஆம் சிறிது நேரத்திற்கு முன்பு தான் செல்வா, ரகு, ரமேஸ் மற்றும் முருகேசன் என நான்கு பேரும் அவளை சித்ரவதை செய்த பிறகு அவளின் கழுத்தில் கிடந்த கனமான பத்து பவுன் தங்கச் செயின் தாலியை அறுக்க முற்பட்ட போது, செல்வியும் திவ்யாவும்," ஐயோ !, யாராவது வாங்க ..."  எனக்கத்தியதால் அங்கிருந்து வேகமாக ரகுவைத் தவிர்த்து மற்ற மூவரும் வேகமாக ஓடினர் கார் கிடந்த இடத்திற்கு.

   ரகு வராததைக் கண்ட செல்வா," டேய்! மொத இங்க வாடா. அவ அங்கதா தாண்ட கிடப்பா. அப்பறமா தூக்கிட்டு போய் வச்சுக்க.. இப்ப வந்த வேலைய பார்ரா..." எனக் கத்த, ரகுவோ," பேபி!, இரு இந்தா வந்துடுறேன்..." என்று வலியில் முனகிக் கொண்டிருந்த கர்பிணிப்பெண்ணை கன்னத்தில் தடவி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்...

       இவர்கள் போனபிறகு அங்கு வந்த மாதவனோ அவளின் நிலையைப் பார்த்து சிறிது வருந்தினாலும்  நகை ஆசை அவன் கண்களை மறைத்தது.

    சுற்றும் முற்றும் பார்த்து முக்கியமாக ராஜா எங்கென்று பார்த்தவன், "அவன் காருக்கு அருகில் தான் இருக்க வேண்டும்... " என்று யூகித்தவிட்டு இப்போது கர்பினிப்பெண்ணின் நகையை எடுக்க முயல, அவளோ மாதவனின் கையைப்பற்றி ," தண்ணி....தண்ணி..." என்று வலியில் கதற!, அதைக்கண்டு கொள்ளாதவன் அவளின் கையை தட்டிவிட்டு கழுத்திலிருந்த நகையை எடுத்தவன், காதிலிருந்த தோடுகளையும் கழட்ட முயன்று இரவில் தோடை கழட்ட முடியாததால் ," தோடை காதோடு சேர்ந்து அழுக்க, அவளோ "அம்மா...." எனக் அந்த வலியிலும் பலமாக கத்த, இதனால் பதறியவன் அவளின் வாயைப் பொத்தினான் பயத்தில்.

     இவள் கத்தியது அங்கு யார் காதிலும் விழவில்லை ஈனக்குரலில் கத்தியால். ராஜாவின் காதில் கூட விழவில்லை.

   கத்தியதால் கோபமடைந்த மாதவன் ,
" கத்துறியா..." என முனங்கியவன் வாயைப்பொற்றிவிட்டு காது இரண்டையும் கடித்து, தோடு  மாட்டியிருந்த பகுதியோடு கடித்து எடுத்தான்.

   தோடை எடுத்தவுடன் மேலே எந்திரிக்க முயன்ற மாதவனின் கைகளை அவள் புடிக்க, மாதவனோ மீண்டும் பலமாக உதறிவிட்டு," நீ உயிரோட இருந்தா காட்டிக் கொடுத்துடுவ..." என்று அவளிடம் சொன்னவன், தன் வலது காலால் ஓங்கி ஓங்கி மிதித்தான் கர்பிணிப்பெண்ணின் கழுத்திலும் வயிற்றிழும் ..

   அப்போது மாதவனைத்தேடி ராஜாவோ,"மாதவா..மாதவா.." என்று வர, மிதித்திக்கொண்டிருந்த மாதவனின் காதில் பட, அய்யோ! இவன் வேற வர்ரானே இப்ப. இவ வாயத்தெறந்திட்டா..." என்று யோசித்தவன் இப்போது பலமாக ஓங்கி அவளின் குரல்வளையில் மிதிக்க, இரத்தமாக வெளிவந்தது அவளின் வாயிலிருந்து..

       ராஜா அருகில் வரும் சத்தம் கேட்டதும், மெதுவாக பதுங்கி நடந்து லாரியின் பக்கம் சென்றுவிட்டான் மாதவன்.

     டார்ச் லைட் அடித்துக்கொண்டே பைக் இடத்திற்கு வந்தவன் அங்கு கிடந்த ஆண் உடலை பார்த்ததும், வேகமாக அருகில் ஓடியவன்,"அண்ணே!, அண்ணே! " என எழுப்ப முயன்றான் முகத்தை தட்டி.

    " ஒரு வேள மயக்கமோ..." என யோசித்தவன் வேகமாக தன் சைக்கிளை நோக்கி ஓடி வாட்டர் பாட்டிலை கொண்டுவந்து தண்ணீரை முகத்தில் தெளிக்க, அந்த இடம் முழுவதும் ரத்தம் சிந்தியிருந்ததைக் கண்டவன்,"செத்துட்டார் போல" என்று முடிவுக்கு வந்து பின்புறம் திரும்பி பார்த்து, அங்கு குழந்தையின் உடல் இருந்ததைக் கண்டவன் அதற்கும் இதே மாதிரி செய்து முயன்று காப்பாற்ற முடியாமல் போக வருத்த மடைந்தான்.

     மேலும் வேறு யாரும் இருக்கின்றனரா என டார்ச் லைட்டை சுற்றி அடித்தவன் இப்போது கர்பிணிப் பெண்ணை கண்டான் ஓரத்தில்.

   "அய்யோ...." என கதறிக்கொண்டு அவளருகில் ஓடி ஆடையை சரி செய்து! தலையை சிறிது நிமிர்த்தி,  தண்ணீரால் முகத்தை கழுவி வாயை துடைத்தபோது அவளின் பார்வை ராஜாவின் மீது முழுமையாக பதிந்து இருந்தது.

     அவனோ வாழ்வின் இறுதிநொடியில் இருந்த அவளைப்பார்த்து,"அம்மா! ஒன்னுமில்லமா.. கொஞ்சூண்டு தண்ணி குடிங்கமா. எல்லாம் சரி ஆய்டும்..." என்று கண்களில் நீருடன் கூறியவனைப் பார்த்த கர்பிணிப்பெண்,' கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருக்க கூடாது ' என்பதை கேட்கும் விதமாக இருந்தது அவளது ஏக்கப் பார்வை.

   ஆனால் ராஜாவோ அந்தப் பார்வையின் அர்தத்தைப் புரிந்து கொள்ளாதவனாக, "அம்மா.. அவரும் பாப்பாவும் நல்லா இருக்காங்க... நீங்க கொஞ்சம் தண்ணி குடிங்க சரியாய்டும்" என்று பொய்யாக சொன்னவனைப்பார்த்து இறுதியாக உண்மையாக சிரித்துவிட்டு, சிரித்தவாறே விடைபெற்றாள் அவ்வுடலை விட்டு.

      அப்போது திடீரென்று நிசப்தம் உருவாகியது. காற்று வீசும் சத்தம் கூட கேட்கவில்லை. வெற்றிடம்போல் இருந்தது கணநேரம். கருமேகங்கள் அவசர அவசரமாக தங்களது ராணியை காப்பாற்றுவது போல் நிலவை மறைத்தன.....

     அதே நேரம் நால்வரும் திவ்யாவின் குரலைக் கேட்டு ஓடியவர்கள் என்னவென்று திவ்யாவிடம் விசாரித்தபோது, திவ்யாவோ ," நானும் செல்வியும் இந்த ஆக்சிடெண்ட் பத்தி பேசுனத இந்த முன் சீட்ல உள்ளவன் கேட்டுட்டான் போல, அதான் பாதி உடல் போயும் துப்பாக்கியோட எங்கள சுட வந்ததால நா கத்திட்டேன் பயத்துல. ஆனா செல்வி பயப்படமா கத்தரிக்கோலால அவன் கழுத்தை கீரிவிட்டுட்டா..." என்றாள்..

      இதைக்கேட்ட செல்வாவோ," சரி! சரி! நேரமாச்சு... பாடி எல்லாம் ஏத்துங்க.. முடிஞ்சத விட்ருங்க. உள்ளத பர்ஸ்ட் எய்ட் கொடுத்து காப்பாத்தி வைங்க.. ஆஸ்பத்திரில முடிச்சிடலாம்... " என்றான் நக்கலாக.

    அப்போது குறுக்கிட்ட ரகுவோ," டேய் என் ஆளு..." என்று இழுக்க...

   அதைக்கேட்ட மூவரும், " போடா..." என்று சிரிக்க...

  அதில் முருகேசனோ," டேய் நீ அண்ணனாடா.. " என ரகுவை பார்த்து சொல்லிவிட்டு கொடூரமாக சிரித்தான்...

       ஆம் கர்பிணிப்பெண் ரகுவிடம் "அண்ணா ... என்னை விட்ருங்க..ப்ளீஸ்... என் குழந்தைக்காகவாவது எனை வாழவிடுங்க... " என கெஞ்சியது ரகுவிற்கு இப்போது நியாபகம் வந்தது.

      ரகுவோ," போங்கடா...." என்று அடிக்க போக அப்போது அவன் பார்வையில் மாதவன் பட," டேய் யார்ரா அது... " என கேட்க...

        மாதவனோ," சொல்லுங்க அண்ணே! சத்தம் கேட்டுச்சு அதான் என்ன ஏதுன்னு வந்து பார்த்தா இங்க நீங்க செஞ்சத எல்லாம்..... தெரிஞ்சது..." என இழுத்தான்...

  இதனால் உசாரடைந்த சொல்வா," சரி!.. விடு.. உனக்கு பணம் தர்ரோம்... வாங்கிட்டு ஓடிரு.. வேற எங்கயாவது லீக் ஆச்சு... உனக்கும் இதே மாதிரி ஆக ரொம்ப நாள் ஆகாது..."  என்று மிரட்டிவிட்டு தன் கையிலிருந்த பத்தாயிரத்தை எடுத்து கொடுத்து விட்டு , கொஞ்ச நாள் கழிச்சி இந்த ஆம்புலன்ஸ்ல உள்ள நம்பருக்கு கால் பண்ணு.." என்றான்.

   மாதவனோ பணத்தை வாங்கிக்கொண்டு நகர முற்பட்டபோது,
" டேய்! இன்னொருத்தன் நிக்கிறான்..அவன் உன் ஆளா ?" என்று செல்வா கேட்க ,

     மாதவனோ," ஆமாண்ண. ஆனா அவனுக்கு இது தெரியாது விட்டுடுங்க. நான் பார்த்துக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு " ராஜ!, ராஜா!" என தேடிக்கொண்டே சென்றான் அவ்விடத்தைவிட்டு...

       இறந்த இருவரது உடல்களோடு, காயப்பட்ட மூவருக்கும் மயக்கமருந்து அதிகமாக கொடுத்து கோமா நிவையில் உள்ளது போல் மாற்றியிருந்தனர் அவர்களை செல்வியும் திவ்யாவும்.

      அதேநேரம் காவல்துறையும் காவல்துறையும் வந்து சேர்ந்தது அந்த இடத்திற்கு.....

  இதையெல்லாம் பார்த்து அழுதுகொண்டே இருந்தான் ஆத்மாவாக இருக்கிற ராஜா.....

     

    

  

   

     

  

     
 

      

      

Comments

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்