Posts

Showing posts from August, 2018

அந்த ஒரு நொடி...

வழக்கம்போல ஒரு நாளிலிருந்து, காலை பொழுதில் மங்களகரமா பக்தி பாட்டுடன்.... நல்ல நேரத்தில் ...ரோலிங் சார்ர்ர்ர்... கலா கல்லூரி மாணவி. அம்மா நேரமாச்சு சீக்கிரம் டிபன் எடுத்து வை மா. டெய்லி லேட் பண்ற நீ. அம்மா: இருடி இந்தா அவ்ளோதான். கலா: பஸ் போய்டப்போகுது. சீக்கிரம் அதற்கிடையில் அவள் தோழியிடமிருந்து call வருகிறது. கலா: இவ வேற. தேன்மொழி இந்தா வந்துடுறேன் டி. என் ரெக்கார்டு புக் கொண்டு வந்துட்ட தான டி. தேன்மொழி: இருக்குடி. வாடி சீக்கிரம். டெய்லி பஸ் டிரைவர் என்னத்தாண்டி திட்றான். லேட்டா வர்ரது நீ ,திட்டு வாங்குறது நான்.என் நேரம். கலாவின் அப்பா: ஏமா நேத்து நைட்டு கேட்டனே என்ன முடிவு கலா எடுத்திருக்க. மாப்ள ஓகே வா. இல்லனா சொல்லு வேற மாப்ள பார்ப்போம். உனக்கேத்த வரன்னு என் மனசுக்கு படுது. பாத்துக்கோ. கலா: அப்பா நீங்க வேற. இப்ப போயி கேட்குறீகளே. டென்சன் டைம்ல. ரொம்ப முக்கியம். இருந்தாலும் மாப்ள ஓ.கே. தான். அம்மா: அடிப்பாவி.நான் நேத்து நைட்ல இருந்து கேட்கிறேன் சொல்லல. உங்கப்பா கேட்ட உடனே சொல்ற. ம்ம். என்னை யாரு மதிக்கிறா இந்த வீட்ல. கலா: சரி சரிம்மா. லவ்யூ மா. நீ தான் பெஸ்ட் எப்பவும். டாட