அந்த ஒரு நொடி...
வழக்கம்போல ஒரு நாளிலிருந்து, காலை பொழுதில் மங்களகரமா பக்தி பாட்டுடன்.... நல்ல நேரத்தில் ...ரோலிங் சார்ர்ர்ர்...
கலா கல்லூரி மாணவி. அம்மா நேரமாச்சு சீக்கிரம் டிபன் எடுத்து வை மா. டெய்லி லேட் பண்ற நீ.
அம்மா: இருடி இந்தா அவ்ளோதான். கலா: பஸ் போய்டப்போகுது. சீக்கிரம்
அதற்கிடையில் அவள் தோழியிடமிருந்து call வருகிறது.
கலா: இவ வேற. தேன்மொழி இந்தா வந்துடுறேன் டி. என் ரெக்கார்டு புக் கொண்டு வந்துட்ட தான டி.
தேன்மொழி: இருக்குடி. வாடி சீக்கிரம். டெய்லி பஸ் டிரைவர் என்னத்தாண்டி திட்றான். லேட்டா வர்ரது நீ ,திட்டு வாங்குறது நான்.என் நேரம்.
கலாவின் அப்பா: ஏமா நேத்து நைட்டு கேட்டனே என்ன முடிவு கலா எடுத்திருக்க. மாப்ள ஓகே வா. இல்லனா சொல்லு வேற மாப்ள பார்ப்போம். உனக்கேத்த வரன்னு என் மனசுக்கு படுது. பாத்துக்கோ.
கலா: அப்பா நீங்க வேற. இப்ப போயி கேட்குறீகளே. டென்சன் டைம்ல. ரொம்ப முக்கியம். இருந்தாலும் மாப்ள ஓ.கே. தான்.
அம்மா: அடிப்பாவி.நான் நேத்து நைட்ல இருந்து கேட்கிறேன் சொல்லல. உங்கப்பா கேட்ட உடனே சொல்ற. ம்ம். என்னை யாரு மதிக்கிறா இந்த வீட்ல.
கலா: சரி சரிம்மா. லவ்யூ மா. நீ தான் பெஸ்ட் எப்பவும். டாடி செகண்ட் தான்.
அம்மா: போடி.
கலா: அப்பா எனக்கு ஓகே. பட் கலேஜ் முடிஞ்சவுடன்தான்.
அப்பா: ஓகே..
தன் வீட்டிலிருந்து விரைவாக கெளம்புகிறாள் எதிர்கால கணவனின் கற்பனை நினைவுகளுடன். பஸ் ஸ்டாப்பில் தேன்மொழி நிற்பதை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்கிறாள்.
தேன்மொழி: அதிசயம் டி சீக்கிரம் வன்ட்ட.
கலா: இல்லடி வீட்ல விசேசம். அதான்.
தேன்மொழி : மாப்ளதான.. அதையே எத்தனை நாள்தான் சொல்லுவ. உன் புருசன் அந்தாதான் நிக்கிறாரு உனக்காக. அக்கட சூடு பேபி.
கலா: அட ஆமா.
தேன்மொழி: உன்னவிட டைமுக்கு வந்துடுறாரு. பேசுடி. இல்லனா சிரிச்சாச்சும் வையுடி. வேலைவெட்டிய விட்டுட்டு உனக்காக நிக்கிறாப்ல.
கலா: அடி போடி. நிக்கட்டும். கொஞ்சநாளாவது நமக்கு அடிமையா இருக்கட்டும்.
ஒரு செல்ல கோவப் பார்வையை வீசுகிறாள் அவள் எதிர்கால கணவன் பாபு மீது. ஆம் பாபுவும் டெய்லி காலையில் கிளம்பி நேரம் தவறாமல் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடுவான். அவளோ அரக்கபறக்க வந்து பஸ் ஏறுகையில் ஒரு கடைப்பார்வை மட்டும் வீசி செல்வாள். அந்த கடைப்பார்வை போதுமல்லவா பசங்களுக்கு. நாய்குட்டி போல சுத்தியே வருவார்கள். அவனும் அதற்காகவே ஏங்கியது போல். ஏனென்றால் அவன் யாரையும் காதலிக்க வில்லை. இப்போது மேரேஜ்க்கு பொண்ணு ஓகேனு சொன்னவுடன அவ்ளோ சந்தோசம்.அதான் காலைல எப்பவும் ஆஜர். இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கையில்.....
அதே நேரம் அந்த பஸ் ஸ்டாப்பில் தேன்மொழி தன் காதலனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள். கலா அந்த பக்கம் பிசி. தேன்மொழி இந்த பக்கம் பிசி. தேன்மொழியின் காதலன் இவளை பார்க்க பைக்கில் வேகமாக வந்துகோண்டிருக்கிறான் இவளை காண. அவளோ பஸ் வரப்போகுது. மெதுவா வா. அவசரம் வேணாம். சாய்ங்காலம் கூட உன்ன பாத்துட்டு வர்ரேன் இப்போ மெதுவா வா னு சொல்லி முடிப்பதற்குள் பாஸ்கர் அவள் முன்னாடி சடன் பிரேக் போட்டு நிக்க. தேனு கோவமாக திட்டுகிறாள். எருமை மாடு மாடு. இவ்ளோ வேகமாவா வர்ரதுனு.
பாஸ்கர்: சரி இந்தா. கிப்ட். இத கொடுக்கதான் இவ்ளோ வேகம். சர்ப்ரைஸ் த்ரில் இருக்கனும் பேபி. லைப்ல. உனக்காக எதுவேனாலும் மாமன் செய்வான். சரி இரு பைக் ஓரமா நிறுத்திட்டு வந்துடுறேன்.
பாஸ்கர்: சரிடி பேபி எங்க உன் தோழி கலா. என் தங்கை. காணோம். ஓ ஓ..அந்தா.மச்சானோட படம் ஓடுது போல. சரி சரி என்று தேனுவின் முகம் அருகில் சென்று கண்ணத்தில் இதழ் பதிப்பது போல் சென்று காதில் ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டு மெதுவாக பைக்கை நகட்டுகிறான்.
அதே நேரம் வயதான ஒரு தம்பதியினர் தன் மகனிடம் ஒரு 15 நாள் தங்கிவிட்டு. இப்போது அடுத்த 15 நாள் மகளிடம் தங்க ஊருக்கு செல்ல பஸ்ஸ்டாப் வந்து சேர்ந்தனர். முதியவருக்கு மனைவிதான் பெரிய பலம். அவருக்கும் தன் கணவன்தான். மனைவியோ, ஏங்க தவிக்குது வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வாங்க. அப்டியோ டாப் அப் போடுங்க. நேத்தோட முடிஞ்சிச்சனு நெனைக்குறேன். அதான் இன்னும் கால் எதுவும் வரலனு சொல்கிறாள். அவரோ , சரி சரி போறேன் என்று நகர்கிறார்...
அதே சமயம், ஆட்டோ வந்து நிற்கிறது கலா தேன்மொழி முதியவரின் மனைவி முன்பு. ஆட்டோவில் இருந்து இரு குழந்தைகள் மற்றும் ஓட்டுனரின் மனைவியும் இறங்க.ஏங்க வரும்போது அரிசி வாங்கிட்டு வாங்க. தீர்ந்துபோச்சு. மறக்காம என்று. அதற்குள் இரண்டு குழந்தைகளும் அப்பா நீயும் வாப்பா போவோம் ஊருக்கு. திருவிழாக்கு கூட வரமாட்டிகுறப்பா. நாங்கலாம் லீவு போடுறோம். நீங்க மட்டும் லீவே போட மாட்டிகிறீங்க. போங்கப்பா நீங்க பேட் னு சொல்ல. அவனோ , இல்லடா செல்லாம். அப்பா வேலை பாத்துட்டு நைட்டு வர்ரேன். நீங்க சமத்தா இருக்கனும். அம்மா கூடவே இருக்கனும். சரியா. சரிடி குழந்தைதைகள பாத்துக்க. இந்தா இன்னும் ஒரு 500₹ வச்சிக்கோ. அவளோ வேணாம்ங்க உங்களுக்கு என்று மறுக்க. அவனோ, இல்லடி என்கிட்ட இருந்தா நைட் வலில டிரிங்ஸ் அடிச்சிடுவேன். அதான் வாங்கிக்கோனு கொடுக்க. பரவாயில்ல. கொஞ்சமா அடிங்க. திருவிழாக்குதான வரப்போறீக. குடிச்சிட்டு ஓட்டாதீக என்று அன்பா சொல்ல. சரி இரு வர்ரேன்னு ஆட்டோவ கொஞ்சம் பின்னாடி இழுத்தி வச்சுட்டு கடைக்கு பிஸ்கெட் வாங்க கிளம்பினான்.
அதே சமயம் ஒருவர் தன் நாயுடன் வாக்கிங் வந்து கொண்டிருந்தார் பஸ் ஸ்டாப்பை நோக்கி. அந்த நாயும் அவரோடு ஜாலியா நடந்து வர. வருகிறவழியில் மத்த நாயை பார்த்து உர்ரென்று குரைக்க ..பஸ் ஸ்டாப் அருகில் பெண் நாயை பார்த்த வுடன் இழுத்து கொண்டு ஓட , அவரிடமிருந்து பெண் நாயிடம் சென்றது. அவரோ தூரத்தில் ஒரு கார் வருவதை பார்த்து பஸ் ஸ்டாப்பை கடக்காமல் நிக்க.
அவரருகில் கலா தன் எதிர்கால கணவனிடம் கண்களில் பேசிக்கொண்டிருக்க, பாபுவோ 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக வழிய
தேன்மொழி பாஸ்கரை பார்த்து காதல் பூ மலர..
முதியவரின் மனைவியோ கணவனை நோக்க.
ஆட்டோடிரைவரின் மனைவி தன் கணவனை நோக்க. குழந்தைகளோ அப்பா சிப்ஸ் என்று சத்தமாக அவனிடம் கத்திக்கொண்டிருக்கையில்....
இரவில் விடிய விடிய பணக்கார வீட்டில் நடந்த பங்சனில் சரக்கை அடித்துவிட்டு காரை அரைத்தூக்கத்தோடு டிரைவர் எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு தனியாக கெத்தாக செம ஸ்பீடாக டர்னிங்கில் வளைய ...
கார் கண்ட்ரோல் இல்லாமல் பஸ் ஸ்டாப்பில் பாய , சிரிப்பு காதல் ஆசை ஏக்கம் என நாடகங்கள் நடத்திகொண்டிருந்த கலா தேன்மொழி ,முதியவரின் மனைவி , ஆட்டோ டிரைவரின்ஸமனைவி குழந்தைகள் , நாயின் ஓனர் ஆட்டோ என மோத, மோதிய வேகத்தில் கலாவும் தேன்மொழியும் உடல் நசுங்க அவர்களின் காதலர்கள் அய்யோ என்று பதற , மோதப்பட்ட ஆட்டோவோ பறந்து குழந்தைகள் அவர்கள் அம்மா கிழவி மீது விழ ...
முதியவரும் ஆட்டோ டிரைவரும் ஒரு கணம் கல்லாக நிற்க. நாயின் ஓனரோ காரின் அடியில் உடல் நசுங்கி இறந்து கிடக்க. சத்தத்தில் தெறித்து ஓடிய நாய், தன் எஜமானனை தேடி வர.. மோப்ப சக்தியால் காரின் அடியில் கிடக்கும் அவரை குரைத்து எழுப்ப முயல. பிறகு அவர் டிசர்ட்டை புடித்து இழுக்க. முடியவில்லை அதனால். குரைத்து குரைத்து பார்த்தது. அவரின் காலை நாக்கால் நக்கி நக்கி எழுப்ப முயல..மற்றவர்களையும் நெருங்க விடவில்லை எஜமானனின் அருகில்.....
பாபு கலாவின் உடலைப்பார்த்து கதறி அழ, பாஸ்கரோ தேன்மொழியின் சிதைவடைந்த உடலை மடியில் அள்ளி கதற, ஆட்டோ டிரைவரோ தன் மனைவி குழந்தைகளை அள்ளி அணைக்க பிணமாக, முதியவர் அங்கயே மயக்கத்தில் விழ உயிர் பிரிய, நாயோ லொள் லொள் என குரைக்க......உயிர்கள் காற்றில் கரைந்து போனதை யாரும் நம்பமுடியவில்லை. இப்பதானங்க வந்தாரு , குழந்தைங்க சிரிச்சிகிட்டு, பொண்ணுங்க கலர்புல்லா காலேஜ்க்கு, பெரியவரு டாப் அப்போட வந்தாரு என ச்ச்ச் கொட்ட. பாஸ்கரோ தேன்மொழிக்கு கொடுத்த கிப்ட் அவள் கையின் பிடிக்குள் கையோட நசுங்கிபோயிருந்ததை பார்த்த அவனுக்கு பித்து பிடித்தது போல் இருந்தது... பாபுவோ தன் மனைவியாகவே நினைத்து தரையில் புரண்டு கதறினான்...
தவறு....யார் மீது....உங்களின் கற்பனைக்கு... ஆனால் இவர்களது வாழ்க்கை...????? அவர்களை சார்ந்து இருந்தவர்களின் இழப்பு வலிக்கு பதில்????? ஏது பதில்... ஆம் உண்டு பதில்.. பொறுத்துக்கொள்ளுங்கள் விதி என்று சமூகம் சொல்லும்...கடந்து போகும் கொடூர சாவுகளை..அடுத்த சாவிற்கும் இதே பதிலே... தொடர்ந்து கொண்டுதானிருக்கும். தடுக்க வழி ஏது...????
Comments
Post a Comment