Posts

Showing posts from April, 2018

துரோகமா! சாபமா!

அழகான கிராமம் மழை பொழிந்தால் ராணி தேவசேனா மாதிரி. இல்லையேல் சிறிது பஞ்சம் வந்தது போல் கைதி தேவசேனா மாதிரி. தனித்தனியாக கூரை வீடுகளும் சிலர் வயல்வெளிகளில் பனை ஓலை வீட்டை அமைத்தும் இருந்தனர். இங்கு வீடுகளில் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் சண்டை சேவல்களுக்கும் நாய்களுக்கும் பஞ்சம் இருக்காது. அதே மாதிரி பனை ஒலைக்குடிசையில் வாழும் நம்ம ஜமீன்தார் கருப்பு தன் மனைவியோடவும் மேற்கூரிய இதற படைபலத்தோட  வாழ்ந்து வந்தார். சமீபத்தில்தான் தன் இரண்டாவது மகளை மணம் செய்து கொடுத்தி்ருந்தார். அற்கு தான் வளர்த்த  வெள்ளாடுகளும், 2 பசு மாடு ஒரு வயலையும் விற்று மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருந்தார். ஜமீன்தார் தனக்கு செல்லமான தன் சண்டச் சேவலையும் மிகுந்த அன்போடு வளர்த்து வந்தார். அவர் பெயர் தான் காளி. அந்த ஏரியாவில் மன்மதக்குஞ்சு இவர் தான். எந்த வீட்டுக்கு சென்றாலும் ஏகப்பட்ட மரியாதை. மற்ற சேவல்களை கேப்டன்  மாதிரி பைட்ல தெறிக்கவிடுவார்.  எல்லா கோழிகளும் காளியை அமரேந்திர பாகுபலி லெவல்ல சைட் அடிச்சிகிட்டு இருக்கும். காலைல ஊரையே  எழுப்புறது நம்மாளுதான் தன் கனீர் குரலில் கொக்கரக்கோ என்று.  பிறகு