Posts

Showing posts from October, 2018

அறன்

Image
கடும் மழை அனைத்து வீடுகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது சில நொடிப்பொழுதை பகல் போல் காட்டும் மின்னலோடும் தொடர்ந்த இடி முழக்கத்தோடும். இரவு 9 மணி ஆனதாலும், மழையாலும்  பாரதி தெருவில் மனித நடமாற்றமற்று நடுஇரவைப்போல் அமைதியில் காட்சியளித்தது. அந்த மழையிலும் வண்டியிலிருந்து விறு விறு என்று இறங்கிய ஒருவன் நேராக விளக்கு அணையாமல் இருந்த சிறிய வீட்டை நோக்கி ஓடினான். சாத்தப்பட்டிருந்த கேட்டை திறந்து வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ஆக்டிவாவையும், அபாச்சி பைக்கையும்  நோட்டமிட்டபடி சென்று கதவை மூன்று முறை  தட்டினான். சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து வந்த 55 வயது மதிப்புடைய ஒருவர் கதவைத் திறந்ததும், வந்திருக்கிறவர் காவலர் என்று தெரிந்ததும் சிறிது படபடப்பில் "சார் நீங்க? " என்று கேட்க, வந்திருந்தவரோ "ராகவன் இருக்காரா?" என்று கேட்டுவிட்டு "நீங்கள் என்ன வேணும் ராகவனுக்கு?"என்று கேட்டார் காவலர். "நான் ராகவனின் அப்பா ராஜன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன சார்? ஏதும் பிரச்சனையா?" என்று காவலரிடம் கேட்டார். "ஒன்னுமில்லை. ஐயா

ஞாநி

Image
சென்னையின் அதிகாலை பரபரப்பில் கதிரவன் மனதில் எந்தவிதமான சலனமுமின்றி, காலை உடற்பயிற்சிக்காக தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். முப்பத்தைந்து வயதை எட்டியிருந்தவன் அவனது கட்டுக்கோப்பான உணவுப்பழக்கங்களால் இருபத்தைந்து இளைஞனாகவே காணப்பட்டான். இளங்காலையின் தென்றல்காற்றும், எழத் துடித்துக்கொண்டிருந்த கதிரவனின் இதமான வெப்பமும் அவனை தழுவிக் கொண்டிருந்தது. கதிரவன் நடைபயிற்சிக்கே உரிய நடையில் சென்று கொண்டிருந்தாலும் தன் கண்களை அங்குமிங்கும் மேயவிட்டான். ஆம், அன்று காலையில் அவன் தினமும் காணும் நண்பர்கள் இன்று காணவில்லை. ஒருவரல்ல இருவரல்ல ஆறு பேர். "ஒருத்தர் கூட காணவில்லையே, எங்கே?" என்று சுற்றி சுற்றி பார்த்தவன், தன்னை நோக்கி ஒருவர் வருவதைப் பார்த்தான். அவர் தெரிந்த முகமே... கமல் என்று கதிரவன் மனதுக்குள் நினைத்தான். ஏனெனில் கதிரவன் அதிக சொற்களை பயன்படுத்துவதில்லை. அவனது முக்கால்வாசி பதில்கள் ஓரிரு சொற்களில் முடிந்துவிடும். அதனாலேயே கதிரவனை நேசிக்கிறவர்கள் பலர் உண்டு. கதிரவனின் அருகில் வந்த கமல் "சார், நேத்து எல்லாரையும் புடிச்சிகிட்டு போய்டாங

விழா

Image
"பூவண்ணா ! பூவண்ணா!" "டேய் ! பூவண்ணா!" குரல் கேட்டபடி இருந்தது...   __×__ "என்ன மச்சான்... ஒரே தடபுடலா இருக்கு. திருவிழா விருந்தோ?" என்றான் பூவண்ணன். "வாப்பா பூவண்ணா! தங்கச்சியும் மச்சானும் வந்திருக்காக, திருவிழாக்கு. அதான் ஒரு சேவ, ஒரு கோழினு." கையில் இருந்த உயிர்க்கோழிகளைத் தூக்கிக் காட்டிய பாலு தொடர்ந்தான். "போன தவணை தான் மழையுமில்லை மண்ணுமில்லை. ஒன்னும் பண்ணமுடியாம போச்சு. இந்த வர்சம் கடவுள் கண்ண தொறந்திருக்காப்ல. அதான். அப்ப்ப சந்தோசத்தை அப்பப்ப அடைஞ்சிடனும்டா பூவண்ணா...!" "ஆமா... இந்த  முறை வானம் கொஞ்சம்  மனசு இறங்கிருக்கு.. இல்லனா. கஸ்டந்தான் மச்சான்." "இந்த வர்சம் கொஞ்ச மழைக்கே நல்லா பச்சப் பசேல்னு இருக்கு. அடுத்த முறையும் இதே மாதிரி பேஞ்சா களைகட்டிரும். பூவண்ணா! எல்லா நம்ம நேரந்தாண்டா. மழை வரும். துட்டு வரும். திருவிழாவ ஜெகஜோதியா கொண்டாடுவோம் அடுத்த வர்சமும்." கையில் இருந்த காசினை எண்ணியபடி வந்த ஊர்த்தலைவரைப் பார்த்த பூவண்ணன், "என்ன தலைவரே... கணக்குபுள்ளயா மாறிட்டீக போல...?" எனக் கூற, &qu

கடவுளடி சேர்ந்தார்க்கு துன்பம் ஏது!

"யோவ் பெரிசு வந்துட்டியா. மறுபடியும் எவ்ளோ திட்டினாலும் அசிங்கப்படுத்தி கஸ்டம் கொடுத்தாலும் கேட்க மாட்ட போல , நான் காசு கொடுத்து ரோட் காண்ட்ராக்ட் எடுக்கிறேன் அதுல எனக்கும் கமிசன் பார்க்கிறேன் உனக்கென்னயா" என்றான் அரசியல்வாதி பெரியவரைப் பார்த்து. "எனக்கு எவ்ளோ கஸ்டம் கொடுக்கிறேன்னு நீ தான் சொல்ற. அதெல்லாம் கஸ்டம்னு நான் நினைக்கலையே. எல்லாம் கடவுள் செயல்" என்றார் பெரியவர் நேரு. "ஒரு MLA ஆகுறது எவ்ளோ கஸ்டம். நான் 50-லட்ச ரூவா செலவு பண்ணி வந்தா, நீ அம்பது காசு செலவு பண்ணி பேப்பர வாங்கி எனக்கு வேட்டு வைக்கிறியா "என்று சொல்லிக்கொண்டே கோவத்தில் பெரியவரை தள்ளிவிட்டு, அடித்தான். "இதுவும் கடவுள் தான் கொடுக்கிறார் போ "என்று சொல்லி மேலும் அடித்தான். அரசியல்வாதி மேல் இருந்த பயத்தால் யாரும் தட்டி கேட்க முன்வரவில்லை. வலியுடனே எந்திரித்து, கீழே விழுந்த மூக்கு கண்ணாடியையும், பேப்பரையும் தூக்கிகொண்டு மறுபடியும் கோர்ட்டுக்கு சென்று கேஸ் போட்டார் பெரியவர் நேரு. வீட்டுக்கு அழுக்கு சட்டையோடு சென்றவரை பார்த்த அவர் மனைவி " என்னங்க ஏதாவது பிரச்சனை பண்ணிகிட்ட