Posts

Showing posts from January, 2019

தெரு நாய் - மறுபதிப்பு.

Image
        அன்று  கனமழை சென்னையில். அதனால் சென்னையே மிதந்தது அந்த கொடூர மழையில். அந்த  மழையிலும் தன் குட்டிகளை ஈன்றது ஒரு தெரு நாய். விடாத மழையிலும் வேறு வழி இல்லை ஈன்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அழகான ஐந்துக் குட்டிகளை ஈன்றது அது. தான் ஈன்ற குட்டிகளை வலியையும் பொருட்படுத்தாமல், தன் நாக்கால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது, சிறிது நேரத்தில் ஒரு பேராபத்து வரப்போவதை உணராமல். குட்டிகளின் ஈனக்குரல்களும் அதற்கு ஒரு சுகத்தை கொடுத்திருக்க வேண்டும் அந்த கனமழையிலும் வலியைத் தாங்க. தெரு நாயின் கடந்தகாலம்:            சென்னை பிரதான நகரில் அது பிறந்தது, தனது 4 சகோதர சகோதரிகளுடன் தன் தாயான ஒரு தெரு நாய்க்கு. பிரதான நகரில் வசித்ததால் உணவுக்கோ தங்குமிடத்துக்கோ பஞ்சமில்லை. அந்தக் குட்டிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பகுதி மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏனெனில் அவைகளுக்குள் விளையாடுக்கொள்ளும் விதம் அவர்களின் மனதைக் கவரந்திருந்தது.           அவர்களில் சிலர் அவைகளுக்கு பிஸ்கெட், பால், சாப்பாடு என்று சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரும் அன்போடு கொடுப்பது வாடிக்கை.  அவைகளின் தாயும் தன் பங்குக்கு கறிக்கடைகளில்

அய்யாவு

Image
வடுகபட்டியின் அதிகாலை மார்கழி மாத குளிர் "ஊட்டிக்கு நான் சளைத்ததில்லை" என்று போட்டி போட்டுக்கொண்டு  இருந்ததோ என்னவோ அப்படியொரு குளிர். எவ்வளவு குளிர் என்றாலும் அய்யாவு ஐயாவின் அதிகாலை விழிப்பை த் தோற்கடிக்க முடியாது குளிரால். அதிகாலை 3 மணி ஆனதும் அய்யாவுவின் முழிப்பு , அலாரத்திற்கே போட்டிபோடும். சோம்பல் முறிப்பதற்குக் கூட விரும்பாத உடல் அது. படுக்கையில் இருந்து எழுந்தவுடன் "எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே" என்று வேண்டிக்கொண்ட பிறகு விறு விறு என்று எழுந்து பால் கறக்கச் சென்றுவிடுவார் தொழுவத்திற்கு. அய்யாவுவின் மனைவி அமராவதியும் அவருக்குச் சமமாக எழுந்து வாசலை பெருக்கி சாணம் தெளித்து கோலம் போட்டு அதன் நடுவில் ஒரு பரங்கிப்பூவையும் வைத்து விட்டுத்தான் மறு வேலை. இவர்கள் இருவருக்கும் வேலையில் அவ்வளவு போட்டி அத்தனை வயதிலும். பால் கறந்து முடித்த அய்யாவு அமராவதியிடம், "சரி, நான் போயி பால் பண்ணைல பால ஊத்திட்டு அப்டியே கடைய தெறக்குறேன், நீங்க மத்த சோலிய முடிச்சிட்டு வந்துடுங்க" என்று மதிப்போடு கூறிவிட்டு வேகவேகமாக பால்பண்ணை நோக்கி சென்றார். ஏனெனில் அய்யாவு சின்ன