கனகவள்ளி - 6
கீழே விழுந்த ராஜாவின் பார்வை முழுவதும் படுக்கையின் மீதே இருந்தது. ஆம் இப்போது அதன் மீது யாரோ ஒருவர் போர்வை மூடி படுத்திருப்பது போல் இருந்ததால், பார்த்துக்கொண்டே இருந்தான்.
இவன் இருந்த அறையின் கதவின் வழியாக மெயின் ஹாலைப் பார்த்தபோது அங்குமட்டும் கும்மிருட்டு நிரம்பி இருந்தது அந்த இடத்தில். அந்த கும்மிருட்டும் குறுகலாகிக் கொண்டே ஒரு வித்தியமான ஆக்டோபஸ் உருவத்திற்கு தன்னை சுருக்கிக்கொண்டே வந்தது. சிறிது நேரத்தில் முழுவதும் சுருங்கி ஒரு மனித உருவமாக மாறி இருந்தது. ஆங்காங்கே எலும்புகள் தெரிந்தும் சதைகள் கிழிந்தும் புழுக்கள் ஊறுவதுமாக! முகம் முழுவதும் ஒருவித மஞ்சள் வெள்ளை நிறம் கலந்த புழுக்கள் நெளிந்து நகர்ந்து கொண்டே இருந்தன.
இரத்தமும் சீல் வடிந்த ஒரு வித திரவத்துடன் கலந்து உடலிலிருந்து வடிந்துகொண்டிருந்தது. நாற்றம் தன் அதிகபட்ச நிலையை எட்டியிருந்தது.
அது நின்று கொண்டிருந்த இடத்தில் புழுக்கள் குவிந்திருந்தன. அது தனது இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்திய போது அதன் கைகளிலிருந்து விழுந்த புழுக்கள் ஊர்ந்து ராஜா இருக்கும் அறையை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன.
அதைக்கண்ட ராஜா தன் கால்களைச் சுற்றியிருந்த துணிகளை அவிழ்க்க முற்படும் போது, படுக்கையில் இருந்த உருவம் மெதுவாக எழுந்தமர்ந்து மீண்டும் படுத்துக்கொண்டது.
ராஜாவோ," என்ன இது....?. ஏன் எழுந்துச்சு ....?. மறுபடியும் ஏன் படுத்துருச்சு...?" என யோசித்த நேரத்தில் , தன் கையில் ஏதோ ஊறுவதைக் கண்டு, கையை உதறியவன் அங்கு புழுக்கள் விழுந்ததைக் கண்டு், "ச்சை என்ன கருமம் இது.." என வலதுபுறம் பார்த்த போது அங்கு செல்வாவின் உயிரற்ற கண்கள் ராஜாவைப்பார்த்தவாறு இருந்தது படுக்கையின் கீழ். "ஆஆ..." என்று வாயைத்திறந்தவன்!
" கொன்னுடுச்சா அந்த பேயி....?. ஐயோ அப்போ என்னையும்......" என்று நினைத்து பயத்தில் எச்சிலை முழுங்கிக் கொண்டான்.
இப்போது அந்தப் புழுக்கள் ராஜாவை தாண்டிச் தாண்டிச் சென்று செல்வாவின் கண்களுக்குள் நுழைய ஆரம்பித்து மெதுவாக உடல்முழுவதும் பரவி இருந்தது.
ஒருவழியாக அந்த கட்டப்பட்ட துணிகளை அவிழ்த்தவன், அவனது பார்வை முழுவதும் இப்போது அந்த ஹாலில் மனித உருவெடுத்த பேயிலிருந்து செல்வாவின் புழுக்கள் நிறைந்த உடலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்று யோசித்தவாறு இருந்தான் அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டே..
ஆனால் அதே நேரம் அந்தப்படுக்கையில் இருந்த உருவம் இப்போது ராஜாவைப் பார்த்தவாறு இருந்தது. ராஜாவோ," என்ன நம்மள ஏதோ பார்க்குற மாதிரி இருக்கு " என்று பார்வையை படுக்கையின் மீது திருப்பிய போது, அதன் கோர உருவத்தைக் கண்டு," பயத்தில் 'ஈஈஈஈ' என வழிந்தவாறு, நான் ஒன்னும் செய்யலையே... பாரு அப்படியே நகராம இருக்கேன்.... பாரு... பாரு..." என்றவன் தன் உடலைப்பார்த்தபோது வேட்டி இல்லாமல் டவுசரோடு இருந்தான்.
மீண்டும் பயத்தில் சிரித்தவாறே," கவர்ச்சியாவா இருக்கேன்ல.." என்றவன் மேலும் " அது ஒன்னும் கவர்ச்சி இல்லையே...எங்கயோ வேட்டி கழண்டு விழுந்துடுச்சு... உயிர் போற பயத்துல இருக்கும் போது மானமாவது மயிராவது... அய்யோ... மயிர்னு தப்பா சொல்லிட்டனோ.. இல்ல இல்ல மயிர் தப்பான வார்த்தை இல்லனு...." என்று சொன்னபோது அவனது கால்கள் இரண்டும் இழுபடுவது போல் உணர்ந்தபோது மறுகணம் அவனது உடல் சுவற்றில் மோதியதில் பலமாக கத்தினான் "அம்மா ..." என்று....
" பேய்கிட்ட வாய மூடிட்டு இருக்கணும்றது... இப்போதான் புரிஞ்சிச்சி..." என்றவன், "பக்கத்தில் ஏதோ உரசுதே.." எனப் பார்த்தபோது அது செல்வியின் உடல் என்பதை அறிந்தவன், " மொத்த குடும்பத்தையும் போட்டு தள்ளிடுச்சு போலயே" என்ற நினைத்து அமைதியானான் சிறிது நேரம்.
இப்போது அந்த புழுக்கள் செல்வியின் உடலை நோக்கி வந்ததது. " அதை கூர்ந்து நோக்கியவன் "ஏதோ ஒரு படையே வர்ரது போல வருது.." என்று நினைத்துக்கொண்டவன் தன் தலையின் பின்பகுதியில் இருந்து இரத்தம் வருவதை உணர்ந்தான் அப்போது.
அதே நேரம் அந்தப்புழுக்கள் ராஜாவை நோக்கி நெருங்கி வர! , நகர முயன்றவன் முடியாமல் திணற, அந்தப்புழுக்கள் இப்போது தரையில் வடிந்து பரவியிருந்த ராஜாவின் இரத்தத்தை நெருங்கி அதில் நெளிந்தபோது, " ஆஆஆஆ.." என்று வலியில் கத்தியவன் கண்கள் முழித்த போது அவன் இருந்த இடம் அவனை திகிலடைய வைத்தது.
" இங்கயா!...எப்படி?....இது!.." என்று வியப்பில் நின்றான் ராஜா....!
அதே நேரம் ஆசிரமத்தில் மெழுகுவர்த்தியால் வெளிச்சம் வரவைத்து குருஜியை பார்த்தபோது அவரது சீடர்கள் பயத்தின் உச்சிக்கே சென்றனர்.
ஆம் குருஜியின்கால்கள் கயிறு போல் முறுக்கப்பட்டு ,இடுப்பின் கீழ்பகுதி முழுபகுதி முழுவதும் பின்புறமாகவும், கைகள் பிய்த்தெறியப்பட்டும், வாய் கண்கள் திறந்தநிலையில் புழுக்கள் நிறைந்தும் மூக்கு காதின் வழியேயும் புழுக்கள் நிறைந்தவாரும் இருந்ததைக் கண்டு "குருஜி....!" என்று சீடர்கள் கத்திய போது , குருஜியின் அசரீரி ஒலித்தது.
" கவலை வேண்டாம்.. என் சரீரத்தை மட்டுமே அதனால் அழிக்க முடியும் என் ஆத்மா வை அல்ல.. ஆகவே உங்களைச் சுற்றியே நான் இருப்பேன். நீங்கள் யாகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செய்யுங்கள்.. நான் உடல் கிடைத்ததும் உங்கள் முன் தெரிவேன். அதற்கு உங்களில் ஒருவரோ அல்லது வேறொருவரோ உதவ வேண்டும்" என்றார்.
அதைக்கேட்ட தலைமைச் சீடன், வாசகன்! " குருஜி! நான் சித்தமாக இருக்கிறேன்.." என்ற போது குருஜியோ,"நல்லது... யாகத்தை தொடருங்கள். எக்காரணம் கொண்டும் நிறுத்தாதீர். உங்களுக்கு எந்த தொந்தரவும் வரலாம். எதிர்த்து போராடுங்கள்" என்று கூறிவிட்டு மறைந்தது அவரது அசரீரி.
அதேநேரம் சீடரில் ஒருவன்,
"ஐயோ..எனக்கு உடம்புல ஏதோ ஊறுது. என்னால முடியல.. வலிக்குது.." என்று கத்தியவனைப் பார்த்த வாசகன், அவன் உடம்பினுள் புழுக்கள் நெளிவதைக் கண்டு, " ஒன்னுமில்லை சரியாய்டும்.. தைரியமாக இரு.. இந்தா இந்த துளசி தீர்த்தத்தை குடி.." என்று கூறிவிட்டு தீர்த்தத்தைக் கொடுத்தவன்," நீ போய் ரெஸ்ட் எடு" என்றவன் மற்றவர்களைப் பார்த்து," சரி. சரி..யாகத்தை தொடருங்கள்" என்றவன் மனதினுள்
' கடினமே. அவன் பிழைப்பது. எத்தனை பேரை இழந்தாலும், செய்து முடிப்போம்..குருஜி கூறியதை செய்வோம்!" என்று சபதமெடுத்துக் கொண்டான்.
அப்போது வாசகனும், தன் உடலுக்குள் ஏதோ ஊறுவதை உணர்ந்தவன், குனிந்து வயிற்றைப் பார்த்த போது அங்கு புழுக்கள் நெளிவதைக் கண்டான் வயிற்றுப்பகுதியில்............
அதேநேரம் ராஜா அந்த இடம் மயிலம்பாறையின் ஆபத்தான வளைவு சாலை என்பதை அறிந்தான்.
'இங்க எப்படி வந்தோம் ' என்று நினைத்தவன் காதில் ஒருவன் பேசுவது கேட்டு திரும்பிய போது ஆம்புலன்ஸ் ஒன்று இருப்பதைக் கண்டவன் அதனுள் இருப்பது 'இறந்த செட்டியார் வீடு' செல்வா என்பதை அறிந்தான்.
"அட இவரா" என்று நினைத்தவன் "செல்வா சார்! செல்வா சார்" என்று அழைத்துக்கொண்டே பெரிய ஆலமரத்தின் அருகில் நின்றிருந்த ஆம்புலன்சிக்கு சென்று மறுபடியும் அழைத்த போது, 'என்ன நம்மள அவன் கண்டுக்கவே மாட்டிக்கிறான்' என்று கோபமடைந்தவன் "சார்.. சார்...டேய்....இங்கேர்ரா.." என்ற செல்வாவின் தலையை தட்டிய போது தெரிந்தது ராஜாவுக்கு ," அப்போ நாம இங்க உயிரோட இல்லையா... இது ... ஓஓஓ.. ஆத்மாவா... ஐயோ உடல் இல்லாம திரியுறமா....செத்துட்டமா.... அப்போ இவன்... " என்று யோசித்தபோது அவனுக்கு கர்பிணியின் புழுக்கள் நிறைந்த உருவம் தன்னைப் பார்த்தது நியாபகத்திற்கு வந்தது அந்த வீட்டில்.
" ஓஓஓ. அப்போ... அந்த பேயி வேலையா....இது.." என்று நினைத்தவன் "ஆனா ஏன்... என்னை..." என்று நினைத்துக்கொண்டிருந்த போது, செல்வாவின் வார்த்தைகள் ராஜாவின் காதில் விழுந்தன.
" சார்... இன்னைக்கு எப்படியும் கொண்டு வந்துடுறோம்... நம்புங்க சார்.. இங்க மூனு பேர் இருக்கோம் சார். அந்த வண்டியில ரெண்டு பேர் இருக்காங்க சார்... தகவல் சொல்ல ரெண்டு பேர் மொக்கு ரோட்ல நிக்கிறாங்க சார்..." என்ற செல்வாவைப் பாரத்து, " என்ன பண்றான் இவன்.... இவ்ளோ பயமா பேசுறான்.... அங்க யார் இருக்கானுக... எதுக்கு..." என்று யோசித்தவனுக்கு புரிந்து," ஆஆஆஆ...." என்று வாயைப் பிளந்தவாறு நின்றான் ராஜா.......
தொடரும்.......
Comments
Post a Comment