கனகவள்ளி - 7
ராஜாவுக்கும் ஏதேதோ நியாபங்கள் வந்து போனது மயிலம்பாறையைப் பற்றி இப்போது.
அதே சமயம் செல்வாவும் மொபைலில் பேசி முடித்த பிறகு ஆம்புலன்சில் இருந்த இருவரை நோக்கி," செல்வி! திவ்யா! ( இருவரும் ஆம்புலன்சில் இருக்கும் நர்சுகள்) ரெடியா இருங்க. நான் போயி ரகு வ பார்த்துட்டு வந்துடுறேன் ரெண்டு நிமிசத்துல" என்று கூறிவிட்டு வண்டியை விட்டு இறங்கி நேராக லாரியோடு காத்திருக்கும் ரகுவை நோக்கி விரைந்தான் விறு விறு என்று.
அருகிலேயே இருந்ததால் சில நிமிடங்களில் அவர்கள் இடத்தை அடைந்தவன்," டேய் ரகு. ரெடியா?, இன்னைக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் சரி, சரியான உருப்படி கிடைக்குறவரை வெய்ட் பண்ணுவோம். மெயின்ரோட்ல நிக்கிற முருகேசன், சுரேஸ்ட்டயும் சொல்லிட்டேன். சரியான உருப்படியா பாத்து சொல்லுங்கடானு. இளம் வயசா இருந்தா பரவாயில்லைனு பெரியவுக சொல்லியிருக்காங்க. சோ ரெடியா இருங்க" என்றவன் தொடர்ந்து "எங்க மினி ஆம்புலன்ஸ் நிக்கிது ரமேஸைக் காணோம்" என்று சொல்லிவிட்டு அங்குமிங்கும் பார்த்த போது, ரமேஷ் புதரிலிருந்து வெளிவந்து," டேய் செல்வா இங்கதாண்டா இருக்கேன். பயப்படாத பக்காவா பிளான் ரெடி. இல்லனா இருக்கவே இருக்கு "கல்" பிளான். சாமான்லாம் கரெக்ட்டா இருக்கு. நீ போயி மொத ரெடியா இரு " என்றவன் தன் வண்டியை நோக்கி சென்றான் செல்வாவிடமிருந்து பதில் பெறாமல்.
செல்வாவும்," சரிங்கடா. நான் கிளம்புறேன்" என்றவன் அவர்களிடத்தில் தம்ஸப் காட்டிவிட்டு தன் ஆம்புலன்சை நோக்கி நடந்த போது! இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ராஜா," அடப்பாவிகளா! " என்று வாயை கையால் மூடி அதிர்ச்சியை வெளிப்படுத்தினான்.
இப்போது ராஜாவுக்கு திட்டமும் புரிந்தது சரியாக. ஆம் திருப்பத்தூரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பைபாஸ் சாலைதான் இவர்களின் திட்டத்தை அரங்கேற்ற சரியான இடம். அதுதான் மயிலம்பாறை ஆபத்தான வளைவு சாலை. அந்த வளைவில் எப்போதும் விபத்துகள் அதிகமாக நடக்குமிடம். "U" போல் வளைந்திருந்ததால் அந்த இடத்தில் திடீரென்று வாகனம் வந்தால் எதிர்புறம் வரும் வாகனம் கட்டுப்பாடிழந்து விபத்து ஏற்படும். இதுவே இவர்களது திட்டம்.
அதற்காகவே 5 கிமீ தூரத்தில் இருக்கும் நால் ரோட்டின் பிரிவில் நல்ல வெளிச்சத்தில், ரிலாக்ஸ் பாய்ண்ட் கடைகளும் இருக்குமிடத்தில் முருகேசும் சுரேசும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் சரியான வாகனத்தை தேர்வு செய்து சரியான தகவல் தகவல் தர.
அவர்களது நேரமும் வந்தது. ஆம் மாருதி சிப்ட் Vdi silver நிறக் கார் KA பதிவு எண்ணில் , நால் ரோட்டில் இருந்த ஒரு பேக்கரி கடைக்கு வந்தது. அந்த காரில் இருந்த ஐந்து இளைஞர்களில் இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் என ஐவர் இறங்கியதைப் பார்த்த முருகேஷ், செல்வாவுக்கு கால் செய்து கான்பரன்ஸ் காலில் பேசினான் ," மச்சி ரெடியா இருங்க..அஞ்சு உருப்படி..செம..கிளம்பும்போது சொல்றேன்...கட்டிங் போட்டு ரெடியா இருங்க" என்று.
அதைக்கேட்ட செல்வா அணியும், ரகு அணியும் தயாராகியது நடக்கப்போகும் விபத்தை எதிர்நோக்கி. அங்கிருந்த ஆண் நண்பர்கள் நால்வரும் மதுவையும் அருந்தி இருந்தனர் இந்தக் குற்றத்தை செய்ய
சிறிது நேரத்தில் ஸ்விப்ட் கார் அங்கிருந்து புறப்பட, முருகேசும் தகவல் சொல்ல, அவர்களும் தயாராக இருந்தார்கள்.
மயிலம்பாறை சாலையின் இடது புறம் இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டும், வலது புறம் வரிசையாக மரங்களும் இருந்தன. அந்த ரோட்டின் இருபுறமும் பெருங்கம்மாய் ஒன்று 15 அடி ஆழத்துடன் இருந்தது.
ராஜாவோ நடக்கும் அனைத்தையும் அதிர்ச்சியுடனே பார்த்துக்கொண்டிருந்தான்.
அதேநேரம் காரினுள் இளைஞர்களும் அதிகபட்ச சத்தத்துடன் ஆங்கில பாடல்களை கேட்டுக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டே வந்தனர். காரை ஓட்டியவனோ ரேஸில் போகிறமாதிரி ஆக்ஸிலரேட்டரை அழுத்த, காரும் தன் பங்குக்கு சீரிப்பாய்ந்து வர, ரகுவோ வாகன வெளிச்சத்தை கண்டவுடன் வலப்புறமிருந்த லாரியை ஸ்டார்ட் செய்து ஹெட் லைட் இரண்டும், பேக் லைட் இரண்டையும் அணைத்துவிட்டு தயாராக, அதேசமயம் இராமேஸ்வரம் போகும் பக்கத்திலிருந்து ஒரு ஸ்பிலெண்டர் வண்டியில் கணவன் கர்பிணிமனைவி ஒரு பெண்குழந்தை என ஒரு குடும்பமே வந்து கொண்டிருந்தது.
மயிலம்பாறையை நெருங்கியதும் காரை ஓட்டியவனோ, பின் பக்கம் திரும்பி பேசிக்கொண்டே வந்தபோது, திட்டமிட்டபடி வலப்பக்கம் இருந்த லாரி அந்த வளைவில் இடது புறம் திரும்ப, இதை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டியவன் பிரேக் பிடிக்க, அந்த காரோ கட்டுப்பாடு இழந்து லாரியின் முன்பக்க இடதுபக்கத்தில் மோதி நொறுங்கி சுழன்று எதிர்புறம் வந்த பைக்கில் மோதி அதனையும் தூக்கி எரிந்தது ரோட்டில். காரினுள் உள்ளவர்களில் ஐவரில் முன் இருக்கையில் இருந்த இருவர் அந்த இடத்திலே பலியாக, மற்ற மூவரும் படுகாயமாடைந்திருந்தனர்.
பைக்கில் இருந்தவர்களில் குழந்தை அங்கயே நசுக்கப்பட்டு இறக்க, கணவனோ தலையில் அடிபட்டு சுயநினைவு இழக்க, நான்கு மாத கர்பிணி பெண்ணோ தூக்கிஎறியப்பட்டு ரோட்டின் ஓரத்தில் கிடந்தாள் சுயநினைவு இழந்து.
இதைப்பார்த்த ராஜாவுக்கு கண்களில் அருவி போல் கண்ணீர் வந்தது இந்தக் கொடுமையைக் கண்டு.
அதே நேரம் சிறிது நேரத்தில் செல்வா ஆம்புலன்சைக் கொண்டுவர , ரகுவும் ரமேஸும் காரினுள் உள்ளவர்களை சோதனை செய்ய அப்போது ரகுவின் கண்களில் ஸ்பிலெண்டர் பைக் கண்ணில் பட ," டேய்! இங்க பாருங்கடா ஆஃபர் மாதிரி இன்னும் ரெண்டு பேர்..." என்று சொல்லிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவன் பார்வையில் பட்டாள் கர்பிணிப்பெண் அழகுப் பதுமையாய் அலங்கோலத்தில்.
விறுவிறுவென்று சென்றவன் அவளைப்பார்த்ததும் குடிபோதையில் வெறிகொண்டு அவளை வண்புணர்வு செய்துவிட்டு, மேற்கொண்டு மற்ற மூவர்களிடமும் சொல்லி இச்சையைத்தூண்ட அவர்களும் கர்ப்பிணிப்பெண்ணை வன்புணர்வு செய்தபோது அவளோ வலியில் கதற, ஆயினும் காதில்வாங்காமல் கற்பழித்தனர்.
செல்வியும் திவ்யாவும் காரில் உள்ளவர்களின் நிலைமையை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது.
இதை பார்த்த ராஜா , அவர்களை தடுக்க முயன்று இயலாமல் போக அழுதுகொண்டே திரும்பிக்கொண்டான் அங்கிருந்து.
அப்போது ராஜாவின் காதில் அவன் குரலே கேட்டது அந்த இடத்தில். இதை சற்றும் எதிர்பாராத ராஜா,"நானா.....!, இங்கயா...!" என்று அதிர்ச்சியடைந்து நின்றான்.
Comments
Post a Comment