ஆலமரமும் அரச பரம்பரையும்

பாஸ்கர் தன் மனைவி ரேஸ்மியுடன் புதுமனை புகுவிழா அழைப்பிதழை மன்னர் ஊரில் உள்ள தன் சொந்தங்களுக்கு கொடுப்பதற்காக திண்டுக்கல்லிலிருந்து கிளம்ப ஆயத்தமானான் காரில்.

"ரெடியா?. சீக்கிரம். டைம் ஆச்சு" என்றான் பாஸ்கர்.

"வந்துட்டேன். வந்துட்டேன். ஏன் இவ்வளவு அவசரம் என்று கடிந்து கொண்டாள் பாஸ்கரிடம்.

காரை ஸ்டார்ட் செய்தான் பாஸ்கர். அப்போது மனதில்  நினைத்துக்கொண்டான் "வெகு காலமாகிவிட்டது தன் சொந்தங்களை பார்த்து. தன் பெற்றோரின் இறப்பிற்கு அவர்கள் இங்கு வந்த போது பார்த்தது" என்று.

மன்னர் என்ற ஊரையும், அவ்வூருக்கு சொந்தம் ஒருவர் வழி சொன்னதையும் நியாபகப்படுத்திக்கொண்டான் இப்போது.

பழைய பாடல்களை ஒலிக்கவிட்டான்.

"பழைய பஞ்சாங்கமாவே இருக்கீகளே. கொஞ்சம் இளையராஜா சாங்ஸ் போட்டாதான் என்னவாம்" என்றாள் ரேஷ்மி.

"சரி சரி "என்று செண்பகமே செண்பகமே சாங்க பிளே செய்தான் பாஸ்கர்.

ரேஷ்மியும் பாஸ்கரை பார்த்து ஒரு சிறு புன்னகை பூத்தாள்.

காரில் வந்துகொண்டிருக்கும் பொழுது தன் சொந்தம் ஒருவர் மன்னர் ஊருக்கு வழி சொன்ன பிறகு "ஏதோ சொல்ல வந்தாரே, நாமதான் சரி சரி வந்துடுறேன்னு அவர் பேசி முடிக்குறதுக்குள்ள அவசரப்பட்டு கட்பண்ணிட்டமே. ச்சே என்ன சொல்லவந்தாரோ. சரி. அங்க போய் நேர்லயே கேட்டுகிட்டா போச்சு" என்று தனக்கே சொல்லிக்கொண்டான்.

"என்ன நீங்களே பேசிக்கிறீக. வழி கரெக்ட்தான என்று கேட்டுக்கொண்டே" வந்தாள் ரேஷ்மி.

"ஆமா.ஆமா. சிங்கம்புணரி வழியா போயி பிரான்மலை வழில கட்பண்ணனும்னு சொன்னாரு' என்றான் பாஸ்கர்

அப்போது அவன் தந்தை மன்னர் ஊரைப்பற்றி சொன்ன தகவல்கள் அவன் நினைவுக்கு வந்தன. ஆலமரமும் ஒரு மன்னர் பரம்பரையும் என்று. அவன் அவ்வாறு நினைத்தபோதே திடீரென்று  கார் தானாக ஆப்பாகி நின்றது.

மறுபடியும் ஸ்டார்ட் செய்து டிரைவ் செய்தான்.

"என்னாச்சு என்று கேட்டாள் " ரேஸ்மி

"ஒன்றும் இல்லையென்று" தலையை மட்டும் ஆட்டினான்.

"அந்த ஊருக்கு மட்டும் போய்டாத என்று தந்தை சொன்னதை, ஏன் அப்படி சொன்னார் ? என்று யோசித்துக்கொண்டே வந்தான்".

" சாபம் தான் அதான் அப்டி நடக்குது, அதான் ஊரைவிட்டு வந்துட்டேன்"  என்று தந்தை தனது சொந்தங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது  பாஸ்கரின் காதில் விழுந்தது.

அதை இப்போது நினைத்துக்கொண்டே வந்தான். சாபம் என்பதையும், மன்னர் ஊருக்கு போகக்கூடாது என்பதையும் கோர்த்து ஏதோ ஒரு ரகசியம் உள்ளது என்று தானே முடிவு எடுத்துக்கொண்டான்.

சிங்கம்புணரியை கடந்து வந்ததும் பிரான்மலை என்று இடதுபுறம் போர்டில் எழுதி இருந்ததை பார்த்து இடப்பக்கமாக உள்ள ரோட்டில் காரை செலுத்தினான்.

"என்னங்க சரியாதான் போறோமா" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ரேஸ்மி.

காரில் அமைதியாக இளையராஜவின் இதமான இசையில் பயணித்தனர் ரேஷ்மியும் பாஸ்கரும்.

பாஸ்கரின் மனதில் அநேக கேள்விகள் மன்னர் ஊரைப்பற்றி. திடீர் திடீரேன கனவுகள் பயங்கரமாக வந்தது பற்றி யோசித்துக் கொண்டிருந்தது அவன் மனது.

அவன் மனது எங்கோ அலைய,
"ஏங்க ஆடு என்று " ரேஸ்மி கத்த, சுயநினைவு வந்தவனாய் காரை வலது பக்கம் திருப்பி பிரேக் பிடித்தான்.

"எந்த ஆபத்தும் இல்லை ஆட்டிற்கு" என்று மனதை தேற்றிக் கொண்டான்.

"இதுக்குதான் சொன்னேன். சொந்தமும் வேணாம் ஒன்னும் வேணாம்னு. இவ்வளவு தூரம் வரணுமானு. கேட்டாதான" என்று கடிந்து கொண்டாள்.

"இருடி. இப்ப என்ன ஆச்சு. ஒன்னும் ஆகலைல என்றான் பதிலுக்கு.

"கார்ல போகவே பயமா இருக்கு. மாமாவும் அந்த ஊருக்கு போகவேண்டாம்னு சொல்லி இருந்தார் எங்கிட்டயும் " என்றாள்.

"அவர் அப்படிதான் சொல்வார். எனக்கு சொந்தம்னு நாலு பேராவது வேணும். அவர் மாதிரி என்னால இருக்க முடியாது. நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும்டி" என்று கோவமாக பதிலளித்தான் பாஸ்கர்.

"உங்க சொந்தங்களை வச்சு நீங்களே அழுங்க. எனக்கென்ன?. என்னைய எல்லாம் எதுவும் கேட்க கூடாது " என்றாள் பாஸ்கரிடம்.

"சரி விடு டார்லிங். உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா. எனக்கும் என் சொந்தங்களை பார்க்க ஆசை இருக்கும்ல. சொந்த ஊரு வேற. பார்க்க ஆசை இருக்காதானு" கொஞ்சும் வார்த்தைகளில் கெஞ்சினான் ரேஷ்மியிடம்.

அவளும் பொய்க்கோவத்தை களைத்து , ஒரு சிரிப்பால் அனுமதி தந்தாள்.

காரில் சென்றுகொண்டிருக்கும்போது அன்றைய நாளிதழின் ஒரு பக்கத்தில் மன்னர் ஊரில் நடந்த கொலைகளுக்கு உண்மையான காரணம் என்ன? என்ற செய்தி அவன் கண்ணில் பட்டது. இது ரேஷ்மியின் கண்ணில் படாமல் இருக்க பேப்பரை எடுத்து டோர் சைடு பாக்ஸில் சொருகினான்.

அமைதியாக ஆள்அரவமே தென்படாத சாலையாக அது இருந்தது. பாதை சரியா என்று விசாரிக்க யாராவது தென்படுவார்களா என்று பார்த்துக்கொண்டே காரை ஓட்டினான்.

சிறிது தூரம் சென்றபோது, வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் கண்ணில் பட்டார்.

அவரைப்பார்த்ததும் அப்பாடா என்று நிம்மதி அடைந்தான்.

காரை ரோட்டின் சைடில் நிறுத்தி, "ஐயா ஐயா மன்னர் ஊருக்கு வழி " இதானா என்று கேட்டான் அந்த முதியவரிடம்.

முதியவரோ "இருங்க இருங்க. மேல வர்ரேன் என்று காரை நோக்கி ஒரு வித மரியாதையுடன் அருகில் வந்தார் முதியவர்.

"மன்னர் ஊருக்கா ராசா. இப்டியே ஒரு மைல் தூரம் போனீகனா, ஒரு டீக்கடை வரும். அங்க ரெண்டு ரோடு பிரியும். இடக்கை பக்கமா போனீகனா குறுக்குபாதை. ஆனா வழி மோசமா இருக்கும்னு நெனைக்குறேன். வலக்கை பக்கமா போனீகனா அஞ்சு மைல் ஜாஸ்தியாகும். அந்த வழியாதான் எல்லாரும் போவாக. " என்றார் முதியவர்.

"குறுக்குவழில போக வேணா ராசா. அந்திசாய்ஞ்சுருச்சு. நீ சுத்தியே போ ராசா. " என்று பலமான யோசனையிலே அந்த முதியவர் பாஸ்கரிடம் இருந்து பதிலேதும் பெறாமல் நகர்ந்தார்.

பாஸ்கரும் " ஐயா ரொம்ப தேங்க்ஸ் " என்றான்.

ஆனால் அவர் அதை காலில் வாங்கிக்கொண்டது போல் தெரியவில்லை.

பாஸ்கரும் ஏன் விசித்திரமாக இருக்கின்றனர் மன்னர் ஊரை கேட்டால் என்று மறுபடியும் தனது சிந்தனை உலகத்திற்குள் காரை ஓட்டியபடியே சென்றான்.

முதியவர் சொன்னபடியே டீக்கடையும் வந்தது.

"ஏங்க. தலை வலிக்குறமாதிரி இருக்கு. காபி குடிச்சி்ட்டு போவோம். அப்டியே வழியும் கேட்டுகோங்க" என்றாள் ரேஷ்மி.

பாஸ்கரும் " நீ சொன்னா செய்யாமலயா" என்று கண்ணடித்து விட்டு காரை நிறுத்தி இறங்கினான் .

நீயும் இறங்கி வா என்றான் பாஸ்கர் அவளை.

"அண்ணே ரெண்டு காபி போடுங்க. ஏங்க மன்னர் ஊருக்கு லெப்ட்ல போகலாம்னு பெரிசு ஒருத்தர் சொன்னாரு வர்ர வழில. ஆனா ரோடு சரியிருக்காதுன்றார். எப்டி போனா சீக்கிரம் போலாம் " என்று கேட்டான் பாஸ்கர்

"மன்னர் ஊருக்கு லெப்ட்லயா " என்றவுடன் திகைத்தார் கடைக்காரர்.

"ராத்திரி ஆகப்போது. அந்த ரோடு ரொம்ப பழைய ரோடு வேற. சரி இருக்காது. மாட்டுவண்டி பாதை மாதிரி இருக்கும். அந்த ஊர்க்காரனுகளே இந்த பாதைய மறந்து பல வர்சம் ஆகுது. நீங்க வலக்கை ரோட்லயே போங்க. ரோடு நல்லா இருக்கும். "என்றார் பாஸ்கரிடம்.

ஏன் போககூடாது?. கார் போகுற அளவுக்கு வழி இருக்கும்ல என்றான் பாஸ்கர்.

அதுவா. அது ஒரு பெரிய கதை .

கதையா? என்ன கதை  என்று ஆர்வமானான் பாஸ்கர்.

இந்த வழில போனா ஆலமரம்னு ஒரு இடம் வரும். அங்க பெரிய ஆலமரம் இருக்குறதுனால அப்டி பேரு. அந்த இடத்துல பேய் இருக்குறதாக ஒரு பேச்சு. அந்த காலத்துல ஆலமரம் இருந்த இடத்துல ஒரு ஊர் இருந்ததாகவும். அங்கு இருந்த மக்கள் ஏதோ மர்மமான முறைல ஒரே நாள்ள  செத்ததாகவும் இப்போ அந்த இடத்துல அவுக வச்ச ஆலமரம் மட்டுமே இருக்குறதாகவும். அதுக்குள்ள அந்த மக்கள் ஆவி எல்லாம் சேர்ந்து , ஒரு அகோர உருவமா இருக்குறதாகவும் ஒரு பேச்சு.

அந்த அகோர உருவம்  சூரியன் மறைஞ்சு இரவாய்ட்டா  இந்த வழியா மன்னர் ஊருக்கு போற மக்களை கொடூரமா கொலை பண்றதாகவும் செய்தி பரவ. அப்போ மன்னர் ஊர்ல கோட்டை அமைச்சு ஆட்சிசெஞ்ச அரசபரம்பறை இந்த  பேய்க்கு முடிவுகட்ட பல மந்திர தந்திரவாதிக எல்லாரையும் வரவச்சு யாகம் நடத்த , அதுவரை அரண்மனை பக்கமே வராத அந்த பேய் ,ராஜாவோட செய்கையால கோபமாகி அரச பரம்பரைய சேர்ந்த ஒவ்வொருவரையும் இரவு நேரத்தில் 12 மணிக்கு கோட்டையிலேயே ஒவ்வொருவராக கொன்று ,அவர்களது இரத்தத்தில் குளித்து, குடல்களை மாலையாக அணிவித்துகொண்டு திரும்பி செல்லுமாம். இவ்வாறு கொடூர கொலைகளும் அதிகரிக்க அரச வம்சமும் நசிய இறுதியாக ஒரு மந்திரவாதியால் கோட்டைக்கு வராதவாரு மட்டும் தடுக்கப்பட்டது

         ஆனாலும் காலங்கள் ஆக ஆக அரச வம்சமே அழிந்து போனது. கோட்டையும் மண்ணாகி போனது. ஊர் மட்டுமே மிச்சம். ஆனால் சாபம் மட்டும் தொடர்வதாக இன்றளவும் நம்புகிறார்கள் அந்த ஊரு மக்கள். அந்த ஆலமர பாதை ஒரு காலத்தில் ராஜபாட்டையாக இருந்த பாதை அது. ஆனால் இந்த பேயின் தொந்தரவால் அரச குடும்பத்தின் சிலர் மக்களின் பாதுகாப்புக்காக இருபுறமும் மந்திரங்கள் செய்து பேயை அந்த ஆலமர பகுதியில் மட்டுமே நடமாட விட்டனர். இன்றும் அந்த பேய் அந்த மரத்தில் இருப்பதாகவும். எந்த உயிரினங்களும் பறவைகளும் அந்த ஆலமரத்தில் தங்குவதே இல்லை. இலைகள் இல்லாமலயே கருத்த நிறத்தில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது அந்த மரம். இரவு 12 மணி ஆனால் பட்சிகளின் சத்தமும், நாய் ஓநாய்களின் சத்தமும் மன்னர் ஊரையே பிளக்கும் அளவுக்கு கேட்குமாம். ஆலமரமும் பெரிதாக வளருமாம் இரவு நேரத்தில் மட்டும்.  அதன் வேர்ப்பகுதி கோட்டைபோல் இருக்கும் என்று சொல்வார்கள். பகலில் நார்மலாகிவிடும் என்பார்கள்.

பல வருடங்கள் ஆனாலும் அந்த இடத்தில் கொலைகள் மட்டும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் நகைக்காக கொல்லப்பட்டார்கள் என்று போலீஸ் நம்புகிறார்கள். ஆனால் மக்களோ இதற்கு பேய்தான் காரணம் என்று சாமியார் சொன்னதை நம்பினார்கள்.

       ஆனால் போலீசோ தகுந்த ஆதாரங்களுடன் கொலைகளை செய்தவர்கள் மன்னர் ஊர்க்காரனுகதான் நகைக்காக அந்த வழியாக சென்றவர்களை இரவு நேரத்தில் கொன்றனர் என்றார்கள். விசிரணை செய்ததில் கொலை செய்தவர்கள் மன்னர் ஊர்க்காரர்களே என்பது தெரிந்தவுடன் அவ்வூர் மக்களே கொலையாளியை பிடித்து போலிசிடம் ஒப்படைத்தனர். ஆவ்வூர் வழக்கப்படி அவர்களது நியாய தர்மங்களுக்கு உட்பட்டு சட்டத்தையும் மதித்து நடந்தகொண்டனர்.

   ஆனால் கொலையாளிகளோ. நான் கொலை செய்யல. இரத்தம் சட்டைல எப்படி வந்தது, நகை எப்படி வந்தது, நான் ஏன் அங்க போனேன்னு தெரியல என்று கொலை செய்தவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை யாரும் நம்ப தயாரில்லை. குற்றவாளிகளும் ஒவ்வொருவராக உடல்நிலை சரி இல்லாமல் ஜெயிலுக்குள்ளயே இறந்தாகனு சொல்றாக" என்றார் கடைக்காரர்.

     "ரீசெண்ட்டா இப்ப கூட ரெண்டு வர்சத்துக்கு முன்னாடி அந்த வழில போன அஞ்சு பேர்ல நாலு பேர் கொடூரமா கொல்லப்பட்டாக. அதுல ஒருத்தன் தப்பிச்சவன் பைத்தியமா திரியுரான் மன்னர் ஊர்ல. அவன் , தான் பேய பார்த்ததாகவும், அகோரமா பசியோட இருந்ததாகவும். இரத்தம் பூசி இருந்ததாகவும் தன்னை மட்டும் விட்டுடுச்சுனு சொல்லிகிட்டு திரியுரான்.

அந்த நாலு பேர கொன்னவனும் மன்னர் ஊர்க்காரன்தான்னு போலீஸ் கண்டுபிடிச்சு அவனும் அதே மாதிரி நான் பண்ணல எனக்கு என்ன நடந்ததுனு தெரிலனு இப்பவும் முனுமுனுத்துகிட்டு இருக்கானாம் ஜெயில்ல. அந்த வழில போகாதீங்கனு சொல்றானாம். போலீஸ் என்னதான் பேயில்லை னு சொன்னாலும் அவுகளும் அந்த ஆலமர வழியில போறதில்ல. மக்களும் குழப்பத்துடனயே சாமிய பயபக்தியா கும்பிடுறாங்க. சாமியாரும் பரம்பரை பரம்பரையா செய்ற மந்திர யாகங்களை செஞ்சுகிட்டு வர்ராரு மக்களை காப்பாத்த. "

   இன்னொரு விசயமும் சொல்றாக 12 மணிக்கு இந்த வழியா போற மக்களை காப்பாத்த இப்பவும் அந்த அரச குடும்பத்து ராசா ஒருத்தர் குதிரைல வர்ரதாகவும், திரும்பி செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு இவர்களை காப்பாற்ற குதிரையில் முன்னோக்கி செல்வதாகவும் , ஆலமரத்திலிருந்து அகோர உருவம் வந்து இவருடன் சண்டையிட்டு அவரை கொடூரமாக கொன்று இரத்தத்தில் குளித்து உடல் உறுப்புகளை  தன்மேல் போட்டுக்கொள்வதாகவும், அந்த மக்களும் அவ்வாறே கொல்லப்படுவதாகவும் பேச்சு இருக்கிறது.

ஆனா உண்மையா பொய்யானு யாருக்குமே தெரில. நகைகள் காணாம போறதால மனிதனே செய்கிறான் என்று அரசும் நம்புகிறது. ஆனா பேய்தான் காரணம்னு சிலர், திருடர்கள் தான் காரணம்னு சிலர்.
ஆக பேய் இருக்கா இல்லையா?
அதுவும் ஏன் இரவு மட்டும்?
அதுவும் அந்த சத்தம் ஏன்?
ஏன் 12 மணிக்கு?
விடை தெரியா கேள்விகள் இப்பவும்.

இப்போ என்ன சொல்ரீக.
பேய் இருக்கா? இல்லையா?
இந்த வழில இன்னுமா போக நினைக்குறீக.. என்று கேட்டார் பாஸ்கரிடம்.

பாஸ்கரோ "திருட்டு கொலைனு சொல்லுங்க ஒத்துகிறோம் அதுக்காக பேய் பிசாசுனு பீலா விடாதீக" என்றான்.

அதுக்கு மேல உங்க இஸ்டம் என்றார் கடைக்காரர்.

ரேஷ்மியும் தன் பங்குக்கு அண்ணா காபியும் சூப்பர், கதையும் சூப்பர் என்று டீகடைகாரரை பார்த்து சிரித்துவிட்டு காரில் ஏறினாள்.

பாஸ்கரும் காரை ஸ்டார்ட் செய்ய ,சிறிது நேரம் இருவரும் டீ கடைகாரர் சொன்னதை இமிடேட் செய்து நக்கல் செய்துவந்தனர். கார் நெருங்கி செல்ல செல்ல இருபுறமும் மரங்கள் அடர்ந்த காடாக காட்சி அளித்தது. திடீரென்று கார் வேகம் தானாக குறைந்து அதிக பளுவை இழுப்பது போல் திணறியது. ஒரு மரக்கிளையும் டமால் என்று  என்று காரின் பேனட்டின் மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத பாஸ்கர் பயத்தில் காரை பிரேக் போட்டு நிறுத்தினான். பின்னாடி ரேஸ்மி என்று அழைத்துக்கொண்டே திரும்புகையில். ரேஷ்மி காணவில்லை. ரேஷ்மி ரேஷ்மி என்று கத்தினான்.

என்னங்க இப்டியா பிரேக் போடுவீக. எங்கயும் போல இங்கதான் இருக்கேன். நீங்க போட்ட பிரேக்ல மொபைல் விடுந்துடுச்சு. பேய் பயம் ஆரம்பமோ என்றாள்

பிறகு பாஸ்கரும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தபோது ஒரு வாது ஒரு கொடியில் சிக்கிகொண்டு வீலில் சிக்கியிருந்தது. பிறகு அதை நீக்கியபிறகு காரில் ஏறி அமர்ந்து மனைவியிடம் பேச முற்பட்டான். கண்ணாடியை திருப்பி அதில் ரேஷ்மியின் முகத்தை பார்த்தபோது அதிர்ந்தான்.  

ஆம் ரேஸ்மி அந்த டீக்கடைக்காரர் சொன்ன அரசனாக கையில் வாளோடும் ராஜ உடையோடும் வீற்றிருந்தாள் ஒரு ஆண்மகனாக மாறி.

அவள் சங்கத் தமிழில் ஏதோ சொல்ல பாஸ்கரிடம், பாஸ்கருக்கோ "திரும்பிச் செல்" என்றது மட்டுமே புரிந்தது.  அதை கேட்டு அவன் விக்கித்து இருக்க. ரேஷ்மியோ மூர்ச்சையாகிறாள்.

அடுத்த நொடி அரசனோ கம்பீரமாக குதிரையின் மீதேறியபிறகு " பாஸ்கரை பார்த்து, ம்ம் விரைவில் என்று சொல்லிக்கொண்டே குதிரையில் பறந்தான்.

பாஸ்கரும் காரில் அவனை தொடர நெருங்கினான் விருட்சமாக வளர்ந்திருந்த ஆலமரத்தை. அப்போது  திடீரென்று அகோர உருவம் ஆலமரத்திலிருந்து இறங்கி அரசனுடன் சண்டையிட்டது. சில நொடிகளில் அரசனின் உடல்பிய்த்தெறியப்பட. தன் சுண்டுவிரலால் அசனின் தலையை சுண்ட அது பாஸ்கரின் காரின் மீது வந்து விழுந்து. அரசனின் கண்கள் இரண்டும் பாஸ்கரை நோக்கி "திரும்பிச்செல் என்று சொன்னேனல்லவா" என்று கேட்பது போல் இருந்தது.

   அகோர உருவமோ அரசனின் இரத்தத்தை தன்மேல் பூசிக்கொண்டு குடலை மாலையாக போட்டுக்கொண்டு காரை நோக்கி நகர்ந்தது. பாஸ்கரோ கல்லாகி இருந்தான். மூர்ச்சையில் இருந்து எழுந்த ரேஷ்மி மறுபடியும் கோமா நிலைக்கு சென்றால் வெட்டப்பட்ட தலையை பார்த்ததும்...

தொடரும்...

  

Comments

Post a Comment

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்