ஆலமரமும் அரசபரம்பரையும் பாகம் : 2 (வேற ட்ராக்கில்.)
அகோரத்தின் பிடியில்:
______________________________
அகோர பேயும் காரை நோக்கியது.அவன் பார்த்தபோது காரின் எதிரில் அந்த உருவம் இல்லை. அரசனின் தலை மட்டுமே இருந்தது. அரசனின் கண்களும் அவனுக்கு பார்வையால் உணர்த்த ஆனால் உணராதவனாய், பயத்தில் கை கால்கள் உதர ஆரம்பித்தன. துர்நாற்றம் நாறியது காரினுள். அவனால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் காரிலிருந்து இரத்தம் வெளியேறியதை உணர்ந்த அவன், ரேஷ்மி ரேஷ்மி என்று மெதுவாக அழைத்தான். திரும்பி பார்த்த பொழுது ரேஷ்மியின் உடலில் தலை இல்லை. பதறிய அவன் திரும்புகையில் ஸ்டியரிங்கில் ரேஸ்மியின் தலை. ஐயோ என்று கதறியவன் கோவம் வந்தவனாக " ஏ பேயே தைரியம் இருந்தால் என் முன்னாடி வா என்று கத்தினான்" ..
காரின் மேல் ஏதோ வெய்ட் ஏறுவதை உணர்ந்தவன் கீழிறிந்து ஆலமரத்தின் வேர்கள் காரின் மீது படறத் தொடங்கியதையும் பார்த்தான்.. வேர்கள் படர்ந்து நெறிக்கையில் முன் பக்க, பின் பக்க கண்ணாடிகள் உடைந்து இவன் மீது குத்தின. அதில் சில பெரிய கண்ணாடித்துண்டுகள் இவன் இரு கண் முன்னும் குத்துவது போல் மிதந்து நின்றது தயாராக.
மேலிருந்து ஒரு உருவம் மிதந்து வந்தது . அது இரத்த நாளங்கள் நரம்புகள் பற்கள் எலும்புகள் தெரியும் வண்ணம் முழுவதும் அழுகிய நிலையுடன் ஆங்காங்கே புழுக்களுடன் மம்மி போல் இருந்தது. தன் நீண்ட கைகளால் அரசனின் தலையை கைகளால் எடுத்து நசுக்க, வாழைப்பழம்போல் பிதுங்கி வெளியில் வந்தது மூளையும் கண்களும் நாக்கும்.
கோவமுடன் பாஸ்கர் கத்த, அந்த இரண்டு கண்ணாடி துண்டுகளும் பாஸ்கரின் கண்களுக்குள் சொருகின. இரத்தம் பீரிட்டு வழிந்தது. வலியால் துடித்தான். ஏதும் செய்ய முடியாமல் துடித்த போது அகோரத்தின் வாய்மட்டும் பாஸ்கர் அருகில் வந்து அவன் முகத்தை கடிக்க ஆஆஆ என்று அலறியடித்து சுயநினைவக்கு வந்தபோது பாஸ்கருக்கு வியர்த்திருந்தது.
ரேஷ்மியோ என்னாச்சு என்னாச்சு என்று பதறியடித்து கேட்டாள். ஆம் பாஸ்கர் கிழிறங்கி டயரைத் தழுவிய வேர்களை நீக்க, அதை தொட்டபோது அவன் உடம்பிற்குள் ஒரு ஒளி பாய்ந்தது அவனை அறியாமல். ஆம் சிறிது நேரத்தில் நடக்கபோவதை அந்த அரசன் இவனுக்கு எச்சரிக்கும் விதமாக எதிர்காலத்தை உணரவைத்தான்.
முழு விவிப்புணர்வில் "ரேஸ்மி இனியும் இங்கு தாமதித்தால் நாம ரெண்டு பேருக்கும் சங்கு தான், கெளம்புவோம். எதுவும் கேட்காத இந்த இடத்தை தாண்டுற வரைக்கும்" என்றவனால் பேசாமல் இருக்கமுடியவில்லை.
ஆம் இவை எல்லாம் 12 மணிக்கு நடக்கப் போகும் சம்பவங்கள். மணியோ இரவு 11.57 ஆக இருந்தது. இப்போது உணர்ந்தான் ஆலமரத்தை அடைந்திருந்தால் 12 மணி ஆகியிருக்கும். இதெல்லாம் நடந்திருக்கும்.
"நல்ல வேளை நம்ம சாமிதான் ,வேரை கார்ல மாட்ட வச்சு நம்மள காப்பாத்திருக்கு ரேஷ்மி "
என்று பேசிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க, ஐந்தாவது வது முறை ஸ்டார்ட் ஆக காரை யூ டர்ன் போட முடியாததால் ரிவர்ஸ்லேயே எல்லைய கடந்தாக வேண்டும் என்று முடிவுக்கு வந்தவனாக சர்ரென்று ரிவர்ஸ்ஸில் கிளப்பினான் காரை.
ரேஷ்மியோ கணவனின் பயத்தை உணர்ந்தவளாக, மாமனார் சொன்னதும் நியாபகத்துக்கு வர,
" நான் அப்பவே சொன்னனே போக வேண்டாம்னு சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க "என்றாள்.
அடியேய் பயமுறுத்தாதடி என்று போய்க்கொண்டே இருக்க நேரமும் 11.59 மணியாக காற்று பலமாக வீசியது. மரங்கள் பேயாட்டம் ஆட ஆரம்பித்தன. காரும் அந்த பாதையில் மரங்களில் மோதப்போக, குழிகளில் ஏறி இறங்க. ரேஷ்மியோ பின் சீட்டில் மேலயும் கீழையும் பறந்து கொண்டிருந்தாள். தீடீரென்று ஒரு மரம் டமால் என்ற சத்தத்துடன் ஒடிந்ததை கேட்டவனாக இன்னும் ஸ்பீடாக மிதித்தான் ஆக்சிலரேட்டரை. அவன் கிராஸ் செய்வதற்கும் மரம் விழுவதற்கும் சரியாக இருந்தாலும் காரின் முன் பம்பர் விழுந்ததில், முன் பக்க கார் ,மேலே எழுந்து விழுந்தது தரையில். ஆம் மரம் காரின் மேல்தான் விழவேண்டியது அவன் தந்தை காரில் வைத்திருந்த மந்திர தகடுகள் அவனை இதிலிருந்து காப்பாற்றியது. அப்போது தூரமாக ஒரு உருவம் காற்றில் பறந்து வருவதை உணர்ந்தவன் இன்னும் வேகம் கொடுக்க பம்பர் புடுங்கி கொண்டது. ஹெட்லைட், பேக் லைட் அனைத்தும் ஆப் ஆனது. இதில் வழி தெரியாமல் சைடில் இருந்த பாறை மீது மோதியது. மறுபடியும் வளைத்து அதே வேகத்தில் கார் இரண்டு ரோடு பிரிவை அடைய, மிதந்த உருவம் தூரமாக மிகப்பெரியதாக ஒருவிதமான கொடுமையான ஒலியை எழுப்ப இதுவரை அவ்வாறான ஒலியை அவன் கேட்டதே இல்லை. ஏன் கன்ஜூரிங் பேய் கூட அப்படிகத்தியது இல்லை. அவ்வளவு கொடூரமாக இருந்தது. காதில் இரத்தம் வரும் அளவில்.
வீட்டில் படுத்திருந்த டீகடை காரரனும் அவன் மனைவியும் அலறியடுத்து எழுந்து " சும்மா இருந்த பேய சுரண்டிட்டு போயிருக்கானுகளே "என்று சொல்லிக்கொண்டே தன் வீட்டிலிருந்த சாமியறைக்கு ஓடினார்கள். அவர்கள் நாயும் கொடூரமாக குரைத்துக்கொண்டே முதல் ஆளாக ஓடி பெட்டுக்கு கீழ் படுத்துகொண்டது.
டீ கடைகாரன் மனைவியோ " நான் சொன்னத கேட்டியா யா நீ, ஊருக்குள்ள கடை வைனு சொன்னதுக்கு மோட்டல் மாதிரி ரோட்ல வச்சாதான் பால் டீ அதிகமா விக்கும்னு சொல்லி இப்டி நமக்கே பால் ஊத்த வைக்கப்போறியே யா' அந்த பேய, இவனுக வேற கார்ல போயி எழுப்பி இருக்கானுகளேனு " பொலம்பினாள்.
இந்தா பாரு நீ வளர்த்த நாய்! உன்னவிட பலசாலியா இருக்குயா. பாரு எங்க போய் இருக்குனு என்றாள்.
ஒரு பெரிய நிழல் உருவம் ஜன்னோலரம் வந்தபோது சுவரில் உரசிக்கொண்டே வந்தது. அதன் ஒலியும் இவர்களை பயமுறுத்தியது. திடீரென்று கதவு தட்டும் சத்தமும் கேட்டது. கதவே உடைந்து விழும் அளவுக்கு கேட்டது. அண்ணே அண்ணே என்று.
யோவ் போகாதய்யா! என்று மனைவி தடுக்க, டீ கடைகாரரோ "இருடி அவுகளா இருந்தா என்ன பண்றது" என்று சொல்லிவிட்டு சாமி போட்டாவை கையில் எடுத்து கொண்டு பயத்துடன் நகர்ந்தான் கதவுக்கு.
கதவுக்கு அருகில் சென்று குனிந்து ஓட்டையில் பார்க்கும் போது " இவர்களா" என்று கதவை திறக்கும்போது அதிர்ச்சியடைந்தான்.
அது அவர்கள் இல்லை. ஃப்பே என்று முழித்தான். ஆம் ஒரு வயதான உருவத்தில் ஒரு ஆள். "புதிய ஆட்கள் வந்தால் தங்கவிடாதே மீறினால்" என்று கூறி ஒரு சாக்குபையை வைத்துவிட்டு நடந்து செல்கிறான்.
கடைகாரனும் "யோவ் யாருயா நீ "என்று தடுமாறி கேட்க, அவனோ இருட்டில் மறைகிறான்".
இவர்களோ அதை திறக்க முற்படவில்லை. பயத்தில் மீண்டும் சாமி அறைக்கே ஓடினார்கள்.
இம்முறை பாஸ்கரும் ரேஷ்மியும் கடையை வந்தடைய, அவர்களும் கதவை தட்ட "கடைகாரனோ மறுபடியுமா? என்று பயந்தான்".
இப்போது மெதுவாக எழுந்து கதவருகில் செல்கையில் நாயும் வந்தது அவனுடன்.
கடைகாரனோ நாயை பார்த்து " ஆமா இப்ப வா. நான் பாடைக்கு போன பிறகு. நீ எனக்கு பாதுகாப்பா? இல்லை உனக்கு பாதுகாப்பா ? நாளைக்கு லெக் பீஸ் கேளு வாய்லயே குத்துறேன்" என்றான் நாயிடம்.
கதவை திறக்கையில் பாஸ்கரும் ரேஷ்மியும் நடுங்கி நின்றார்கள் பயத்தில்.
" அண்ணே நைட்டு இங்க தங்கிட்டு காலைல போரோம் "என்றான் பாஸ்கர்.
கடைகாரனும் இவர்களின் நிலையை பார்த்து பரிதாபப்பட, உள்ளே அனுமதித்தான் .
விரிந்த விழிகளோடு
"என்னதான் ஆச்சு? என்று வினவினான். பயங்கர சத்தம். ஏதோ நடக்கப் போகுதுனு தெரியுது. காலைல சீக்கிரமே கிளம்பிடுங்க. நாங்களும் கடைய காலி பண்ணிட்டு கிளம்புறோம் என்றான். இனியும் இங்க இருக்கமுடியாது என்று " அப்போது மூட்டையை பார்த்த கடைகாரன் அதை விரிக்க அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஆம் உள்ளே இருந்தது மூன்று தலைகள். ரத்தத்துடன் இருந்ததால் அதை அவன் அதற்கு மேல் உற்றுப்பார்க்கவில்லை.
நால்வருக்கும் தூக்கிவாரிப்போட்டது. கடைகாரனின் மனைவி மயக்கமுற்றாள் ஆஆஆ என்று கத்திக்கொண்டே.
ரேஷ்மியோ அதிர்ச்சியில்!.
பாஸ்கர் திகிலடைந்தான்.
டீ கடைகாரனோ ஒப்பாரி வைத்தான் " எனக்கு நானே ஒப்பாரி வச்சிக்கிறேன். எப்படியும் அநாத பொணமாத்தான் போகபோறேன்னு".
அவன் நாயோ சாக்குக்குள் இருந்த தலையை நுகர்ந்து பார்த்தது. "லொள் லொள்"என்று வெளியில் சென்று குரைத்தது. இருட்டில் ஒரு இரத்தம்படிந்த ஈட்டி ஒன்று நாயின் மேல் பாய! வலியில் கதற! ஈட்டியோ நாயோடு இழுத்துக்கொண்டு சென்றது....
இதைப்பார்த்து மிரண்டவர்கள் தடாரென்று கதவை சாத்தி பூஜை அறைக்குள் ஓடினர். டீ கடைகாரன் மனைவியையும் இழுத்து கொண்டு சென்றான் கணவன் சாமி அறைக்கு.
"இவ வேற நேரங்காலம் தெரியாம இப்டி செய்றாலே, கொஞ்சமா தின்றினா கேக்குராளா? தூக்கிட்டு போக கூட முடியலயே.
என் டோனி வேற காணோம். எவ்ளோ அடிச்சாலும் பக்கத்துல வருமே. இப்டி அநியாயமா கொன்னுட்டீங்களே" என்று இவர்களை பார்த்து கத்தினான்.
" நீங்கதான் எல்லாத்துக்கு காரணம். நீங்க வெளில போங்க. எல்லாம் சரிஆய்டும். உங்களத்தான் கொல்ல வருது. தயவுசெய்து கிளம்புங்க என்றான். போங்க போங்க. நிக்காதீங்க என்று கத்தினான்.
பாஸ்கரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயல ஆனால் முடியவில்லை. அதே சமயத்தில் வீட்டின் மற்ற அறைகளில் உறுமும் சத்தங்கள் கேட்டன. ஒரு பெரிய மரம் வீட்டின் கொட்டகையின் மேல் விழுந்ததில் டீ கடை கிளாஸ்கள் பாத்திரங்கள் அனைத்தும் நொருங்கின, நெளிந்தன"
திடீரென்று அவன் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அவனை அன்பால் அழைக்கும் ஒரு வித கெஞ்சல் குரைப்பு அது.
கடைகாரனோ " நாய் வந்திருச்சி. நீங்க கெளம்புங்க" என்று சொல்ல.
பார்த்து மருந்து போடுங்க. பயத்துல கடிச்சிடாம என்றான் பாஸ்கர்.
"என் நாயைப் பற்றி உனக்கென்ன தெரியும். வெளிய போங்க என்று கத்தினான். எல்லா பிரச்சனையும் உங்களால்தான். சும்மா ஆலமரத்துல மட்டும் இருந்த பேய வரவச்சது நீங்க தான். நீங்கதான் பிரச்ஙனைய சால்வ் பண்ணனும் போங்க "என்றான்.
பாஸ்கரும் ரேஸ்மியும் வேறு வழியில்லாமல் கிளம்பி பதட்டத்துடன் ஓடி கதவை திறந்தனர். அவர்கள் வீட்டை விட்டு நகர்ந்த பிறகு அந்த ஒளிவட்டம் மறைந்தது.
ஆம் ரேஸ்மியின் தாலியிலும், பாஸ்கரின் கையிலும் விசேச மந்திரங்கள் செய்து கட்டப்பட்ட புதிய தங்கத்தாலான தாயத்து, மற்றும் உருண்டையான காப்பு (அதனுள் மந்திர தகடுகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன) கட்டப்பட்டிருந்தன. இதனால்தான் அவர்கள் உயிர்பிழைத்திருந்தனர். அந்த ஒளிவட்டமும் மறைந்ததால் கடைகாரனுக்கும் ஆபத்து என உணரவில்லை.
ரேஸ்மியும் பாஸ்கரும் காருக்குள் சென்று அமர்வதற்குள் சூறாவளி காற்று அவர்களை அவ்வளவு சுலபமாக விடவில்லை காருக்கு அருகில் செல்ல. பேய்க்காற்று அது. இருவரும் கையைப்பிடித்து போகவில்லை. ஒருவரை ஒருவர்கட்டிக்கொண்டு மெதுவாக நகர்ந்தனர் காரை நோக்கி.
பேய்காற்றால் வேரோடு புடுங்கப்பட்ட மரம் அவர்கள் மேல விழபார்க்க ஆனால் விழாமல் அந்தரத்துலயே தொங்கியது. செத்தோம் என்று கண்ணை மூடிக்கொண்ட இருவரும் மெதுவாக கண்விழிக்க , ஏதும் ஆகவில்லை இருவருக்கும். மேலே அந்நாந்து பார்த்தபோது அவ்வளவு பெரிய மரம் விழுந்தால் நைந்து போவார்கள். ஆஆ என்று வாயடைத்து போயினர். அப்போதுதான் இருவரும் உணர்ந்தனர் ஏதோ நம்மை காக்கிறது என்று.
கடைகாரனோ டோனி டோனி இங்க வா. இங்க வா என்று அழைத்தான். டோனி இருட்டில் இருந்து வெளியே வந்தபோது அது பலத்த காயத்துடன் குடல் வெளியில் வந்தவாறு இருந்தது.
பதறிய கடைக்காரன் மருந்தை எடுத்து வருவதற்குள் அவன் மனைவியும் விழித்தாள். அவளும் டோனியை பார்த்து அழ, குடலை வயிற்றுக்குள் வைத்து அழுத்த டோனியும் ஈன குரலில் கத்தியது.
துர்நாற்றம் வருவதை முதலில் உணர்ந்த நாய் இருட்டை நோக்கி பலமாக குரைத்தது. அதை கேட்டு கடைக்காரனும் மருந்தோடு வர. ஒரு வாள் மட்டும் நீண்டு வந்தது.
அதைப்பார்த்த டோனி எஜமானனை காப்பாற்ற பாய்ந்து கடிக்கப்போக , வாளோ டோனியின் உடலை இருகூராக கிழித்தது. இதைப்பார்த்த கடைகாரனும் அவன் மனைவியும் டோனியின் தியாகத்தை உணர, டோனியவா திட்டினோம் என்று அழுக...அடுத்த நொடியில் ஒரே வீச்சில் இரண்டு தலைகளையும் எடுத்தது அந்த துருப்பிடித்த இரத்தம்படிந்த வாள்.
இருவரின் உடம்பும் சில நொடிகள் துள்ள, வெட்டப்பட்ட தலையில் இருந்த அவர்கள் கண்கள் பயமில்லாமல் முறைத்துக்கொண்டிருந்தது நாயை கொன்றதால் கோவத்தில்.
இரு தலைகளையும் ஒரு ஈட்டியால் குத்தி தரதர வென்று இழுத்து வர, நாயின் பொளந்த தலையையும் வாளால் வெட்டி மூன்று தலைகளையும் சாக்குப் பையில் போட்டு எடுத்துச்சென்றது அகோரம்.
பாஸ்கரோ ரேஸ்மியுடன் சிங்கம்புணரியை அடைந்திருந்தான் இவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில்.
ரேஸ்மியோ " நாம அவுகள விட்டுவந்திருக்க கூடாது. நம்மாளதான் எல்லாம்" என்று அழ.
பாஸ்கரோ "நாம என்ன பண்ண முடியும். இப்டி நடக்கும்னு யாருக்கு தெரியும் என்று பேசிவிட்டு திரும்ப திடீரென்று ஒரு உருவம் முன் தோன்றியதில் பிரேக் போட காரோ பல்டி அடித்தது காற்றில்....
தொடரும்....
Comments
Post a Comment