ஆலமரமும் அரச பரம்பரையும் : தொடர்ச்சி :2

தொடர்ச்சி பாகம் : 2 .வீராயி:
______________________________

அகோர பேயும் பாஸ்கரை நோக்கி நகர, சுயநினைவுக்கு வந்த போது அவன் காரின் எதிரில் நின்றது. அவன் காரை சுற்றி உள்ள அனைத்தும் எரிய அவனுக்கும் அவன் காருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவன் அகோர பேயை உற்றுப்பார்க்கையில் ஆயிரம் பேரை கொடூரமாக கொலை செய்யும் வெறி தெரிந்தது. உருவமோ குடல்களாலும் இதயங்களாலும் மார்புகளாலும் கவரப்பட்டு இரத்தம் வடிய வடிய எத்தகைய வடிவம் என்றே தெரியவில்லை. துர்நாற்றம், நிசப்தம் மட்டுமே உணரப்பட்டது. தேவைப்படும் போது மட்டுமே கண்ணோ காலோ கையோ மனித உருவமாகவோ !பறப்பன ஊர்வன வடிவத்தையோ எடுத்துக்கொண்டது. ஒன்று மட்டும் உண்மை அதை அழிப்பது என்பது அசாதாரணத்தின் உச்சம் என்று புரிந்து கொண்டான் பாஸ்கர்.
              அரசனின் தலை உருண்டு வந்து அதனிடத்தில் விழுந்தது. அதை தன் கால்களால் ஓங்கி மிதித்த போது அரசனின் கண்களோ கூந்த பனை கொட்டை போல் வெடித்து சிதறியது. வெற்றியடைந்தது போல் அகோர கோவத்தில் மறைந்த போது உக்கிரமாக விடமாட்டேன் என்ற உடல்மொழியையே காட்டியது. சில நொடிகளில் அனைத்தும் மறைந்தது. இது உண்மையா பொய்யா என்று கூட உணரமுடியவில்லை. ஆனால் பயத்தில் அவன் இதயம் துடிக்கும் சத்தம் அவன் மூச்சுக்காற்றை விட பலமாக கேட்டது. அவன் ரேஷ்மியை திரும்பி பார்த்தான் அவள் படுத்துக்கொண்டே ஏதோ பேசினாள் சங்கத் தமிழில்..அவளுக்கு என்ன ஆயிற்று என்று பதறினான். ரேஷ்மி ரேஷ்மி என்று எழுப்பினான். அவள் மெதுவாக எழுந்தாள். கண்களில் கோவம் நெருப்பாக எரிந்தது. நான் உன் ரேஷ்மி அல்ல என்றாள். மறுபடியும் மயக்கமடைந்து விழுந்தாள். விக்கித்து இருந்தவன் சிறிது நீரை தெளித்தான் அவள் மீது. கண்விழித்தாள் மெதுவாக. என்னங்க என்னாச்சு. என்ன நடந்துச்சு. பயமா இருக்கு கிளம்புங்க என்றாள். ஆனால் அவனோ உண்மையா  பிரம்மையா என்ற குழப்பத்திலே இருந்தான். எங்கே அவர்கள்? எங்கே இரத்தம்? எங்கே தீ? எதற்காக இந்த சண்டை கொலை? என்ன நடந்தது என்ற யோசனையில் மிதந்தான்?

  நாம் ஏன் தாக்கப்படவில்லை? என்று யோசித்தான்? அகோரப் பேய்அருகில் வரும்போது ஒரு அமானுஸ்யம் அவன் காரில் நடந்தது. ஆம் அகோரப்பேய் அவனைப் பார்த்து முறைக்கவில்லை. ஏதோ நடந்திருக்கிறது பின் இருக்கையில் நம்மை அறியாமல் என்பதை உணர்ந்தான். நியாபக படுத்த முயற்சிக்கையில் காரின் உள்ளே தங்கநிறமாக அனைத்தும் ஜொலித்ததை உணர்ந்தான். பின் இருக்கை கனமானதை இப்போது உணர்ந்தான்..

ஆம் பாஸ்கர் யூகிப்பது அனைத்தும் உண்மையே. அகோரம் அவனைப்பார்த்து முறைக்கவில்லை. அது ரேஷ்மியை பார்த்துதான் முறைத்தது. ரேஷ்மியும் கட்டுங்கடங்காத கோபத்தில் அகோரத்தை பார்த்து முறைத்தாள். அவள் கோவத்தை வெளிப்படுத்த இயலவில்லை என்ற காரணத்தில் அவள் உக்கிரத்தால் காரின் பின்புறம் கோவத்தின் கனத்தால் கீழிறங்கியது. இரண்டு டயர்களும் வெடித்தது. அவள் வேறு முடிவு எடுத்திருந்தால் பாஸ்கரின் உயிரும் பறிபோயிருக்கும் நிலைமையும் கைமீறி இருக்கும், காலமும் உகந்ததல்ல என்பதை உணர்ந்ததால் அவள் பாஸ்கரை காப்பாற்ற மட்டுமே நினைத்திருந்தாள் தற்போதைக்கு. இதற்காகத்தான் அவள் மன்னருக்கு போகவேண்டாம் என்று தடுத்து பார்த்தாள் அவனை.ஆனால் அவன் அன்பில் கட்டுப்பட்டதால் தான் பலவீனமாக இருந்தபோதும் செல்ல சம்மதித்தாள். பிரான்மலை அருகில் வரும்போது நிகழவிருந்த கோரவிபத்தை தன் சக்தியால் ஆட்டின் மீது மோதி பள்ளமாக இருந்த வயலில் விழாமல் கன நொடியில் காரிலிருந்து இறங்கி  கவிழாமல் தன் கைகளால் நிறுத்தினாள். ஆம் அகோரத்தின் சதி என்பதை அவள் அங்கு நிகழ்ந்த சம்பவத்தால் உணர்ந்தாள். ஆம் அங்கு ஆடு என்பதே ஒரு மாயை. உண்மையில் ஆடு அல்ல அது.அகோர ஆவியின் சித்து விளையாட்டு.

  அனைத்தும் உணர்ந்தவனாய், ரேஷ்மி " ரேஷ்மி அல்ல " என்பதையும் நினைத்த போது ஒரு முடிவுக்கு வந்தான். அமைதியாக வீடு திரும்புவதா? இல்லை மன்னர் ஊருக்கு செல்வதா ? என்று நினைத்தான்.

ரேஷ்மியும் "ஏங்க வாங்க போவோம்"  என்று கத்திக் கொண்டே இருந்தாள்.
அதீத பயத்தில்.

"இரண்டு டயர்களும் பஞ்சர்டி என்று கோவத்தில் வாய் வர ரேஷ்மியின் உருவம் நினைவுக்கு வந்தவனாக பஞ்சர்மா என்று பவ்யமாக பம்மினான்"  பாஸ்கர்.

அப்போ எப்டி போறது? ஏதாவது செய்ங்க என்றாள்.

யோசனை வந்தவனாக. "இறங்குனோம் நம்ம குடல் அது கழுத்துல கெடக்கும்். பேசாம அப்டியே வண்டிய பஞ்சரோட ஓட்டிகிட்டு போய்டுவோம்னு" முடிவு செய்து, இரண்டு மூன்று முறை ஸ்டார்ட் செய்து முயல நான்காவது முறை ஸ்டார்ட் ஆனது. போதுமடா சாமி என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ரிவர்ஸ்லயே ஓட்டிகொண்டு சென்றான்.  திரும்பி திரும்பி பார்க்கும்போது பாஸ்கருக்கு ரேஸ்மியின் மன்னர் தரிசனமே நியாபகத்துக்கு வந்தது. எல்லா பேய்களும் நம்மள வச்சு செய்யுதே என்று முனுமுனுத்துக்கொண்டே படபடப்புடனே  ஒரு வழியாக டீ கடை வந்து சேர்ந்தான் காருடன்.

   டீ கடையும் வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததால் காரிலிருந்து பயத்துடனே இறங்கி பார்க்கையில் டீ கடை வீட்டின் முகப்பில் கட்டப்பட்டு இருந்ததை பார்த்து மகிழ்ந்தவனாக " அண்ணே அண்ணே! டீ கடை காரர்ணே ! என்று கத்தினான். யாரோ கத்துவதை கேட்ட கடைகாரரும் கதவை திறந்த போது அதிர்ச்சி அடைந்தான் , டீ கடை காரர் முகத்தில் ஈ ஆடவில்லை. பாஸ்கருக்கோ நிம்மதியில் பெருமூச்சு விட்டான்.

"ரொம்ப நன்றிண்ணா" என்றான் பாஸ்கர்

கடைகாரரோ " நீங்க எப்படி..? பாத்துட்டு வந்துட்டீகளா? ஆலமரம் போனீகளா? ஒன்னும் ஆகலையா" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டே இருந்தான்.

பிறகு யோசனை வந்தவனாக "வாங்க வாங்க உள்ள வாங்க. எனக்குதெரிஞ்சு அந்த ஆலமரத்துக்கு போய்ட்டு உயிரோடு வந்தது நீங்கதான். என் வயசுக்கு நான் அந்த பக்கம் போனவுக திரும்பி வந்து நான் பார்க்கல. ஆனா 12 மணி ஆனா ஒருவித அசாதாரணம் நிலவும் இங்க இருந்து மன்னர் ஊர் வரை. எங்க "நாயே " அடங்கி ஒடுங்கி படுத்துடும். நல்ல நேரம் 12 மணிக்குள்ள திரும்பி வந்துட்டீக இல்லனா உங்க பேர்தான் வந்திருக்கும் பேப்பர்ல" என்றான் கடைக்காரன்.

மீண்டும் தொடர்ந்தான் " உங்ளுக்கு எதுவும் ஆகலையே" என்றான் கரிசனமாக. ரேஷ்மியிடமும் " ஏமா தங்கச்சி ரொம்ப பயந்துட்டீங்க போல. முகம் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு" என்று கேட்டான்.

பாஸ்கரோ தன் மனதுக்குள் " அடேய் நான்தான்டா பயந்துபோய் கெடக்கேன். பாத்ரூம் கூட போகாமா"

என்று நினைத்துக்கொண்டே

" அண்ணே, பாத்ரூம் எங்க இருக்குனு கேட்டான்".

பாத்ரூமா? தம்பி இது கிராமம். பாருங்க இருக்குறதே ரெண்டு வீடுதான். பக்கத்துலயே குளம் இருக்கு காடு இருக்கு வயல் இருக்கு. வெளிலதான் கொள்ளை பக்கமாத்தான் போனும் என்றான் " கடைக்காரன்

வெளியிலயா. அடப்பாவி இதுக்கு நான் ஆலமரத்துலயே செத்து போயிருக்கலாம் போலயே, இங்க வந்து சாவுறதுக்கு என்று நினைத்துக்கொண்டான். சரி சரி 12 மணி ஆவுறதுக்குள்ள போய்ட்டு வந்துடுவோம்னு 

" அண்ணே கொஞ்சம் துணைக்கு வர்ரீகளா என்று தயக்கத்துடன் கேட்டான்" பாஸ்கர்.

டீ கடைகாரரோ " தம்பி ரொம்ப பயந்து போயிருக்காப்ல " என்று சிரித்தான்

பாஸ்கரே "அடேய் நீ பார்த்திருந்தா அங்கயே செத்து போயிருப்படா என்று முனுமுனுத்தான் ".

அவளும் "எனக்கு என்ன நடந்ததுனே தெரில. மயக்கம் போட்டுட்டேன் என்றாள்".

"அண்ணே போலாமா "என்றான் பாஸ்கர்.

தம்பி நானா ? நானே என் பொண்டாட்டியைத்தான் கூட்டிட்டு போவேன் நீங்க வேற.

ஏனா ஒரு தடவ இப்டித்தான் தெரியாத்தனமா போனேன். அப்போ ஒரு மாதிரியா சத்தம். பயங்கரமா கோவமா பேசுறமாதிரி. " யார்ரா அவன் இந்த நேரத்துல , உன் குடலை எடுக்கனுமானு. அன்னைக்கு மறந்தவன்தான் இன்னைக்கு வர ம்ம். போகவே இல்லையே." என்றான் கடைக்காரன்

பாஸ்கரும் " சரி சரி. நானே தனியா போய்க்கிறேன்" என்றான்.

கடைக்காரனும் அவர்கள் இருவருக்கும் ஒரு அறையை தயார் செய்து கொடுத்தான். " நீங்க இங்க படுத்துகோங்க. எதுவேணும்னாலும் கூப்டாதீக. நீங்களே எடுத்துகோங்கனு" சொல்லிவிட்டு தன் அறைக்கு நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் என்ன நினைத்தானோ ஏதோ " சரி வாங்க தம்பி போலாம்" என்றான். ஆனா 10 நிமிசம் தான் டைம் என்றான்.

பாஸ்கரும்" சரி" என்றான்.

இருவரும் கிளம்ப ஆயத்தமாக, ரேஷ்மி நீ தூங்கு வந்துடுறேன்.

சரி என்றாள்.

இருவரும் டார்ச் லைட்டுடன் கிளம்ப, பாஸ்கர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் "கத்திய தவளைகள் குரைத்த நாய்கள் மற்ற பட்சிகள் அனைத்தும் நிறுத்தின சத்தத்தை".

நிலவு கூட மறைந்து கொண்டது என்று நினைத்தான். சிறிது தூரம் நடந்து சென்றவுடன் " தம்பி அதான் நம்ம எல்லை, இங்கயே முடிச்சுகோங்க. அத தாண்டி போய்டாதிக என்று சொல்வதற்குள் பாஸ்கர் ஒரு காலை வைக்க.

" ஒரு அசரீரி சொன்னது. "வா வா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். நீ வருவாய் என்று தெரியும். உன் கடைசி சொட்டு இரத்தத்தையும் எடுத்தால்தான் நாங்கள் நிம்மதி அடைவோம்" என்றது.

பாஸ்கரோ திகிலடைந்து நிக்க. ஒரு காலை எடுக்கும் நொடியில் ஒரு பெரிய உருவம் ஒன்று அவனை பார்த்துக்கொண்டே கடந்தது. அப்போது அவளால் பிழைத்தாய் என்று என்னாதே. உனக்கான நேரம் குறிக்கப்படவில்லை. அன்று வரை பொறுத்திரு. ஆனால் உனது இனத்தின் அஸ்தமனம் முடியும் தருவாயில் உள்ளது என்றது.

கடைகாரனுக்கு இது எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு "தம்பி டைம் ஆய்டுச்சு போலாமா பேய் கீய் வந்துட போகுது" என்று கூறினான்.

பாஸ்கரோ "அட பாவி பேயி இப்பதான்டா கதை சொல்லிட்டு போது" என்றான்.

என்னப்பா ?

ஒன்னுமில்லைண்ண. வாங்க போகலாம் என்றான் பாஸ்கர்...

இரவு 12 மணி ஆக மூன்று நிமிடங்கள் இருக்கும் போது இருவரும் தம் தம் அறையை அடைந்தனர்.

பாஸ்கரும் "நிச்சயமாக ரேஷ்மிக்கும் ஏதோ தொடர்புண்டு பேயுடன்,  நம்மிடம் மறைக்கிறாளா அல்லது அவளுக்கே தான் யார் என்று தெரியவில்லையா" என்ற சிந்தனையில் உறங்க சென்றான்.

ஆழ்ந்த உறக்கத்திற்கு பாஸ்கர் சென்றவுடன் ரேஸ்மி எழுந்தாள் ஆனால் "ரேஸ்மியாக அல்ல. வீராயி ஆக" . தன் கணவனை காப்பாற்ற சில மந்திரங்களையும் சில வரைபடங்களையும் அவன் தலைமாட்டில் வரைந்து வைத்தாள்.

அப்போது அகோரப்பேய் தன்னிடம் பேசியதை அசைபோட்டாள் " என்ன வீராயி! அழைத்து வந்துவிட்டாயா உன்னவனை. இக்கணமே அழித்துவிட முடியும். ஆனால் இப்படி அல்ல. என் இனத்தை அழித்த உன் இனத்தை இன்னும் கொடூரமாக அழிப்பேன் உன் கோட்டையிலேயே. அன்று உன் இனம் கொண்டாடியது போல் நாங்களும் கொண்டாடுவோம் என்றது".

இதை நினைத்துக்கொண்டே இருக்கையில் ஆலமரத்தின் சத்தம் அதிகமாக கேட்க தொடங்கியது. என்னற்ற குரல்களின் ஒப்பாரி. தலை தெரிக்க ஓடும் சத்தம். எங்களை விட்டுடுங்கப்பா என்று கெஞ்சியது, என் மகளை விடுங்க என்ற தாயின் அழுகை. வெட்டுப்பட்ட கைகளும் கால்களும் தலைகளுமாக எங்கு நோக்கினும் ரத்தம். வாள்களின் சத்தமும், குதிரைகளின் சத்தமும் காதை கிழித்தது " ரேஷ்மி என்ற வீராயின் காதுகளில்.

கொடுமைக்கார அரசன் களப்பிரான்:
-------------------------------------------------------------

அதே நொடியில் பாஸ்கரின் கனவில் "அப்போது வந்தான் மன்னர் சாம்ராஜ்யத்தின் கொடுமைக்கார அரசன் " ம்ம் என்ன இது அலறலின் ஒலி குறைவாக இருக்கிறதே. இது நம் இடம். நாம் சொல்வதை கேட்கவில்லை என்ற போது ஒருவரும் பிழைக்க கூடாது. முடித்துவிடுங்கள். பிறந்த குழந்தை உட்பட என்றான். உங்களால் முடிந்தவரை கொடுமை படுத்துங்கள். ஒருவரும் அமைதியாக இறக்க கூடாது என்று ஆணையிட்டான்.

அப்போது ஒரு இரண்டு மாத கற்பினி கூட இழுத்துச் செல்லப்பட்டாள். அவளோ அரசரிடம் " அரசே நான் கற்பமாக இருக்கிறேன் விட்டுவிட சொல்லுங்கள். நாங்கள் எங்கோ சென்று பிழைத்துக் கொள்கிறோம்" என்று கெஞ்சினாள்.

அரசனோ "அப்படியா சரி. எங்கே உன் கணவன். அவனை கூப்பிடு அனுப்பிவைக்கிறேன் உன்னுடன்" என்றான்.

அவளின் கணவன் இழுத்துவரப்பட்டான் அரசன் முன் காவலர்களால்.

அரசே "இவன் தான் "என்று சொல்வதற்குள் அரசன் தன் வாளை உருவி ஒரே வீச்சில் அவன் தலையை கொய்தான்.

இப்போது இவளையும் அனுப்பி வையுங்கள் என்றான் வீரர்களிடம். முக்கியமாக அவள் குழந்தையையும் என்று கரகர குரலில் சிரித்தான். அதை பார்த்த பொழுது பாஸ்கர் திடீரென்று கனவு கலைந்து தூக்கம் கலைந்து உடல் வியர்க்க எழுந்தமர்ந்தான். ஆம் அம்மன்னன்  தான் "களப்பிரான்" முற்பிறவியில். இப்பிறவியில் பாஸ்கராக.

இதைக்கண்ட வீராயி  " அரசே என்ன ஆனது என்று கேட்கும்போது, பாஸ்கர் ரேஷ்மி என்று நினைத்து" அதுவா என்று இவளை பார்த்து சொல்லப்போக வீராயின் உருவத்தாள் " நம்மள கொல்ல இவ்ளோ சீக்கிரமா வந்துடுச்சா பேயி " என்று பயத்தில் நினைவிழந்து விழுந்தான். வீராயியும் ரேஷ்மியாக மயக்கமடைந்து விழுந்தாள்.

அதே சமயம் மன்னரில் நாய்களும் ஓநாய்களும் ஆந்தைகளும் தவளைகளும் இறவில் அலற , அவைகளின் சத்தம் ஏதோ ஒரு பெரும் அபாயத்தை உணர்த்துவது போல் இருந்தது. மன்னர் ஊரும் பலத்த காற்றுடன் அமானுஸ்ய சத்தங்களால் அலறியது. குதிரையின் சத்தம் கேட்பது போல் இருந்தது அம்மக்களுக்கு. இரவில் மன்னர் மக்கள் தூங்கி பல வருடங்கள் ஆனது. பெண்களின் சத்தமும் முதியோர் குழந்தைகளின் அழுகுரல்களின் சத்தமும் காதை பிளந்தது.

  திடீரென்று ஒரு வீட்டின் கதவு திறந்தது. அகோர உருவம் அமைதியாக உறங்கி கொண்டிருந்தவர்களை உற்று பார்த்தது.

(ஆம் ஊரில் மக்கள் காணாமல் போவது அகோரத்தால்தான். மக்களை எந்தவித கடவுள்களும் காப்பாற்ற இயலாத அளவுக்கு சக்தியை அகோர ஆத்மா பெற்றிருந்தது.  ஏனெனில் அது பல ஆத்மாக்கள் ஒன்றினைந்த உருவாகிய பலம்பொருந்திய ஆத்மாவாக உருவெடுத்திருந்தது.) 

     துர்நாற்றம் குடும்பத்தலைவனின் மூக்கை துளைக்க என்னவென்று முழித்தான் தன் கண்களை அடுத்த நொடியில் அவன் தலையை இழந்தான் விழித்த கண்களோடு. அவன் உடலையும் இழுத்துக்கொண்டு சென்றது. இதை உணர்ந்த அவன் மனைவி எழுந்து குழந்தைகளின் வாயை பொத்தினாள். திரும்பி வந்த அகோரம் அவர்கள் அனைவரையும் தன் நகங்களாலயே கிழித்துக் கொன்றது. அவர்களின் இரத்தத்தால் தன் உடலில் பூசிக்கொண்டது. உயிரிழந்த உடல்களையும் இழுத்துச் சென்றது தன்னுடன். ஆம் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் இந்த ஊர் மக்களை பலியிடும் வழக்கம் கொண்டது. இறந்தவன் வீட்டின் நாய் அகோரனை பார்த்து குரைத்தது பலமாக. அகோரம் கோவத்தில் அதனையும் கொன்றது. பசு ஆடு கோழி என அவற்றையும் கொன்று தலைகளை வெட்டி மாலையாக அணிந்து  பிராணிகளின் ஆத்மாவை எடுத்துகொண்டு உடல்களை விட்டுச் சென்றது. அகோரத்தை கண்டு காகங்கள் ஆந்தைகள் வௌவால்கள் பலமாக பயத்தில் இரைச்சலிட்டன..இரவு முழுவதும் கத்திக்கொண்டே இருந்தன.

  ஆம் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்ததால்தான் மறைக்கப்பட்ட அரச வம்ச வாரீசான  பாஸ்கரின் தந்தையையும் அத்தையையும் அவன் தாத்தா , பௌர்ணமி அன்று மந்திரங்கள் யாகங்கள் செய்து மன்னர் ஊரின் இன்னொரு வழியை உருவாக்கினார். அதில் தப்பி வந்தவர்கள் தான் பாஸ்கரின் தந்தையும் , ரேஷ்மியின் தாயும். இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் மணம்முடித்து வைத்தால் அரச வம்சம் மறைந்து பாதுகாப்பாக அண்ணனும் தங்கையும் வாழ்வார்கள் என்று முடிவெடுத்து திருமணம் செய்து வைத்தார் தாத்தா.

ஆனால் சாபம் யாரை விடும். தாத்தாவும் விபத்தில் துர் மரணம் அடைந்தார். இதற்கிடையில் தங்களுக்கு குழந்தை பிறந்தாள்  அவர்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும் சத்தியம் செய்து கொண்டார்கள். அதைப்போலவே பாஸ்கரும் ரேஷ்மியும் மன்னர் குடும்பத்து வாரீசாக பிறந்து வளர்ந்து திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த மறுநாள் பாஸ்கரின் குடும்பமும் ரேஷ்மியின் குடும்பமும் ஒன்றாக கோவிலுக்கு சென்று திரும்பி வருகையில் நடந்த விபத்தில் பாஸ்கரின் தந்தையைந்தவிர மற்ற மூவரும் இறந்தனர்.

தந்தையும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் போராட தனது இறுதி நாளில் ரேஷ்மியை அழைத்து சாபங்கள் பற்றியும், ஓலைச்சுவடிகள் பற்றியும், அரண்மனை பற்றியும் , முக்கியமாக சமாதி பற்றியும் கூறி.. மன்னருக்கு மட்டும் எக்காரணத்தை கொண்டும் செல்ல கூடாது என்று சத்தியம் வாங்கினார் ரேஷ்மியிடம். ஆனால் அவருக்கு எவ்வாறு தெரியும் இவள் வீராயி என்று.....

தொடரும்...
       
   

Comments

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்