கனகவள்ளி - 11

     கர்பினிப் பெண்ணின் பின்புறம் சென்ற உருவத்தைப்பார்த்து அதிர்ந்தவாறு இருந்தான் ராஜா,                " யாரது....? இந்த பேயம்மாதான் இங்க இருக்கே. அப்பறம் அது யாரு..? " என்று நினைத்தவாறு கர்பிணிப் பெண் இருந்த இடத்தை நோக்கிய போது, அவளும் அங்கிருந்து மறைந்திருந்ததைக் கண்டவன் மறுபடியம் கலக்கத்திற்குள்ளானான் என்ன நடக்கிறது என்று.

     அதே நேரம் இடது புறமும் திரும்பி பார்த்தான் தயக்கமாக,
செல்வா செல்வியின்  உடல்களாவது இருக்கின்றதா! இல்லையா! என்று பார்க்க. ஆனால் அவர்கள் உடல்களும் மறைந்திருந்தன அங்கிருந்து அப்போது.

     இதனால் சந்தேகமடைந்தவன்,
" அப்போ இங்க நடந்ததெல்லாம் பொய்யா...! இருக்காது நமக்கு மண்டைல அடிபட்டுச்சே..!, இரத்தம் வந்ததே...!, அந்த புழு... புழு.. ஆஆஆ...அதுவும் காணோம்..அப்போ இரத்தம்..?" என்று யோசித்து பின்புறமாக பார்த்த போது, அங்கே இரத்தம் உறைந்திருந்ததைக் கண்டவன் " அப்போ உண்மைதான் நாம பார்த்தது.. பேயி படம் காண்பிச்சிருக்கு நமக்கு.." என்று நினைத்தவன் மேலும் ," அதுக்கு எதுக்கு நம்ம மண்டைல இரத்தம் வர்ர அளவுக்கு அடிக்கனும். ராஜா.. பார்ராரான பார்த்திருக்க போறேன்.. அதவிட்டுட்டு.." என்று புலம்பியவன் மனதில் திடீரென்று ஒன்று தோன்றியது ," ஆகா..பேயிக்கு நம்மள புடிச்சு போச்சோ.." என்று.

      சிறிதுநேரம் அமைதியாக இருந்தவன் மனதில் இப்போது மாதவனின் நினைவுகள் குடிகொண்டது.

   " அநியாயமா மாதவனையும் கொன்னுடுச்சே.... என்ன இருந்தாலும் நம்ம பிரண்டு இல்லையா அவன்... ஆனாலும் அவன் செஞ்சதும் தப்புதான்.. ஆனாலும்...அதுக்கு கொல்றதா...." என்று அவன் மனதில் கர்பிணி பெண்ணின் மீதான கோவமும் பரிதாபமும் பயமும் மாறி மாறி உருவாகிக் கொண்டே இருந்தன......

       அதே நேரம் வாசகனும் மற்ற சீடர்களும் பூஜையை தீவிரமாக செய்துகொண்டிருந்தனர், அந்த நோயின் தாக்கத்தோடு. சிலர் மயங்கி விழுந்தனர் புழுக்களால் ஏற்பட்ட தீராத வலியால்.

       அவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட,  வாசகனோ தொடர்ந்து பூஜை செய்தவாறு இருந்தான் கர்பிணி பெண்ணின் இடத்தை அறிய குருஜிக்கு உதவியாக.  இப்போது குருஜியும்  ஆன்மாவாக மறுபடியும் ஆசிரமத்தில் தோன்றினார்.

     அப்போது அவர் தன் சீடர்களைப் பார்த்து," அவளின் இருப்பிடத்தை அறிந்தேன். அது செல்வா செல்வி தங்கியிருந்த செட்டியார் வீடுதான். ஆனால் அங்கு நான் கண்ட அந்த மூன்றாவது உருவம்...." என இழுத்தவர் மேலும் தொடர்ந்து, " அங்கு இன்னொரு சக்தியும் இருக்கிறது. அது அவளை விட சக்திவாய்ந்ததாக உள்ளது" என்றார்.

   இதைக் கேட்டு திடுக்கிட்ட வாசகனோ," குருஜி!, இன்னொரு சக்தியா...." என்று கேட்டுவிட்டு திகைத்திருந்தான்.

    மற்ற சீடர்களும் அவ்வாறே இருந்தனர் அதைக்கேட்டுவிட்டு.

    மேலும் தொடர்ந்த குருஜி," ஆம். அந்த கர்பிணிப்பெண் மற்றும் அந்த குடுகுடுப்பைக்காரன் ராஜா... " என்றவர் சிறிது யோசித்து ," அந்த கர்பிணி பேய் ராஜாவை உபயோகித்துக் கொண்டிருக்கிறாள். ஏன் என்றுதான் தெரியவில்லை.." என்றவர் தொடர்ந்து,
" ஆனால் அந்த மூன்றாவது உருவம் யார் என அறிய முயன்ற போது மறைந்து போனது" என்றார்.

  " அவனால் ஏதோ ஒன்றை சாதிக்க நினைக்கிறாள் அவள். இதனால் ராஜாதான் அடுத்த ஆயுதம் நமக்கு" என்றார் குருஜி.

    மேலும் தொடர்ந்தவர்," அந்த மூன்றாவது உருவம்.." என யோசித்தவர் " சரி. ஆவது ஆகட்டும். நீங்கள் தொடருங்கள் பூஜையை. அது ஒன்றே நம்மை காப்பாற்றும்" என்று கூறிவிட்டு மறைந்து போனார் அங்கிருந்து.

   பூஜையும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர் சீடர்கள் அந்த நோயோடு.

     அதே நேரம் ராஜாவும்," சரி.. மொதல்ல இங்கிருந்நு கிளம்புவோம்" என்று நினைத்தவனின் பார்வை இப்போது அந்த படுக்கையின் மேல் விழுந்தது, ஆம் அங்கு ஒரு உருவம் அப்போது படுத்திருந்தது , இப்போது நியாபகத்திற்கு வந்ததால்.

       ஆனால் அந்த உருவம் இப்போதும் அங்கே இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தவன், " சரி!, சரி! அந்தம்மாதான் ரெஸ்ட் எடுக்குது போல.." என்று நினைத்தவனுக்கு மறுபடியும் சந்தேகம் வர ," சரி..அந்த போர்வைய எடுத்துதான் பார்ப்போமே"  என்று தனக்கே சொல்லிக்கொண்டவன், எழுந்து நின்று கொண்டு, தன் கையை மெதுவாக நீட்ட முயன்றபோது, அந்த உருவம் தானாக எழுந்தமர்ந்ததைக் கண்டான்.

         இப்போது அங்கே  காற்றினால் திறந்திருந்ந கதவுகளும் ஜன்னல்களும் "டம் டம் டம்" என்று தானாக பலமாக சாத்திக் கொண்டதை பார்த்ததும், சிரித்தவன்," இந்தம்மாவுக்கு நம்மள பயமுறுத்துறதே வேலை போல" என்று சொல்லிவிட்டு, அந்த போர்வையை டக் கென்று உருவியதும், சடாரென்று அடுத்த நொடியில் அவனுக்கு என்ன நடந்ததென்றே உணர இயலாமல் இருந்தான்.

    சில மைக்ரோ நொடிகளில் அவனுக்கு கழுத்து நெறிபடுவது போலவும், ஏதோ நெருப்பால் சுடுபடுவதும் போலவும், மூச்சிறைக்கும் அளவுக்கு அடி படுவதையும் உணர்ந்தவன் வலியோடு  பறப்பது போலவும் உணர்ந்து கண்ணை திறந்த போது செட்டியார் வீட்டின் பலமான கதவை உடைத்துக்கொண்டு விழுந்தான் "அம்மா" என கததிக்கொண்டே...

     அப்போது அந்த கதவின் வழியாக பார்த்தபோது, அந்த இருட்டிலிருந்து ஆண் குரல் மட்டுமே கேட்டது அவனுக்கு
" யார்ரா...உங்கம்மா.. அவளுக்கு உதவாத....!" என்று.

    அந்த வலியிலும் எழுந்தவன் ,
"என்னது இன்னொரு பேயா! " என்று கத்திக்கொண்டே ஓடத்தொடங்கியவன் தன் கழுத்தில் நெருப்புக்காயம் இருப்பதைப்போல உணர்ந்தவன்  வயிற்றுப் பகுதியிலும் வலியை உணர்ந்ததால் அங்கு பார்த்தபோது 'விரல்களோடு கை பதிந்த இடத்தில் சட்டையும் கருகி கிழிந்திருந்தைக் கண்டு'  ," ரொம்ப கொடூரமான பேய் போலயே" என்றவாறு ஓடிக்கொண்டே இருந்தான் அந்த வலியிலும் இருளிலும். இதனால் கால்தடுமாறி விழவும் செய்தான். அந்த வழி சரியா தவறா என்று கூட நினைக்காமல் டவுசரோடு ஓடினான் அந்த இடத்தை விட்டு.

    அதே நேரம் காணாமல் போன கர்பிணிப் பெண்ணின் உடலைத் தேடி இன்ஸ்பெக்ட்டரும்,  இரு  கான்ஸ்டபிளும் அவளின் சொந்த ஊரான பொட்டக்காட்டை அடைந்து விசாரித்து வீட்டையும் கண்டுபிடித்து அங்கு சென்ற போது, அங்கு வீட்டின் திண்ணையில், இறந்த முருகேஸின் துணையாக இருந்த சுரேஸ் இருந்ததைக் கண்டு திடுக்கிட்ட இன்ஸ்பெக்ட்டர், "நீ எப்டிடா இங்க வந்த. இத முன்னாடியே சொல்லிருந்தா. நாங்க இவ்ளோ கஸ்டபட்டிருக்க மாட்டம்ல " என்ற போது கர்பிணியின் மாமனார் மாமியாரும், அவளின் தாயும்  சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்தனர்.  

        போலீசை பார்த்ததும்  அவர்கள்
"அய்யா! எங்க பொண்ண.. எங்க குடும்பத்தையே " அழிச்ச அவனுங்கள சும்மா விடவே கூடாதுயா என்று அழுதவர்களை நிறுத்திய இன்ஸ்பெக்ட்டர்," எல்லாம் கண்டுபுடிச்சிடுவோம். மொதல்ல உங்க பொண்ணோட உடல் எங்க. அதை என்ன செஞ்சீங்க. அதை மறைச்சது எவ்ளோ பெரிய குற்றம் தெரியுமா?." என்று அந்த அதிகாலையில் கேட்டபோது, ஊர் மக்களும் அங்கு குவியத்தொடங்கினர் அங்கு.

    அதற்கு பதிலளித்த அவளின் மாமனார், " ஐயா. ஆக்சிடெண்ட் ஆகி ரெண்டு நாளா நாங்களும் தேடிதான் கண்டுபுடிச்சோம். உங்களுக்கு தகவல் சொன்னா யாருமே கண்டுக்கல. அப்பறம் நாங்களும் அழுகிப்போன உடல ஊருக்குள்ள கொண்டுபோகாம, ஒரு குடுகுடுப்பைக்காரர்தான் அந்த காட்டுக்குள்ள இருக்குற கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற ஒரு இடத்துல சாமி பார்த்து  புதைக்க சொன்னாரு, அப்டி போன போது மண் சரிஞ்சி எல்லாரும் விழுந்ததால அந்த உடலும் எங்கயோ மண் சரிவுல விழுந்து மறைஞ்சு போச்சி.  எங்க பொண்ணுக்கு இறுதிமரியாதை கூட ஒழுங்கா செய்யலயா..." என்று கதறி அழுதபோது குறுக்கிட்ட இன்ஸ்பெக்ட்டர் ," சரி! சரி! அந்த இடத்த நம்மாளுங்களுக்கு காட்டுங்க. அவங்க கண்டுபிடிப்பாங்க. சரியா. இப்போ உங்க பொண்ணோட போட்டா வேணுமே. இருக்கா?" என்று கேட்டவர் சுரேசைப் பார்த்ததும், மறுபடியும் "ஏன்டா சொல்லாம வந்துட்ட. யார் அனுப்புனா" என்று இன்ஸ்பெக்டர் கேட்க,

       அதற்கு சுரேஸோ," குருஜி " என்று சொல்லிவிட்டு, "வாங்க நாம போகலாம்" என்று கான்ஸ்டபிள்ஸ்களைப் பார்த்து கூற, அவர்களும் இன்ஸ்பெக்டரிடம், " சார் நாங்க போறோம், தகவல் கிடைச்சவுடனே சொல்றோம்" என்றவர்களுடன், ஊரிலிருந்து சிலரும் மண்வெட்டி உட்பட சில ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அந்த அடர்வனத்தில் உள்ள கோவிலை நோக்கி நடந்து சென்றனர்.

    அப்போது சுரேஸோ திரும்பி இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஒரு சிரிப்பை சிரித்துவிட்டுச் சென்றார்.

    அப்போதுதான் இன்ஸ்பெக்டருக்கு புரிந்தது, " அது சுரேஸ் இல்லை. குருஜிதான் அவன ஏதோ செஞ்சி வச்சிருக்கான் போல" என்று.

  ஆம் இன்ஸ்பெக்டரோ "குருஜி ஒரு பித்தலாட்டக்காரன்" என்ற கோணத்திலேயே பார்த்து வெறுப்பை உமிழ்ந்தவாறு இருந்தான் எப்போதும்.

  இதனால் சுரேஸின் சிரிப்பும் மேலும் எரிச்சலையே உண்டாக்கியிருந்தது இன்ஸ்பெக்டருக்கு அப்போது.

     அதே நேரம் ராஜாவும் ஓடியே தனது சைக்கிள் இருந்த இடத்தை அடைந்தவன், அதை எடுத்துக்கொண்டு ஆசிரமத்திற்கு மின்னல் வேகத்தில் மறைந்தான் அவ்விடத்தை விட்டு.

     சுரேஸும் போலீசும் ஊர்க்காரர்களும் கோவிலை அடைந்து, அந்த மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தேடிக்கொண்டு இருந்தனர் கர்பிணியின் உடலை.

    இன்ஸ்பெக்ட்டரோ," யம்மா.. எங்கம்மா போட்டோ" என்று கேட்டவாறே பூட்ஸ் காலோடு வீட்டினுள் சென்றவரை தடுத்த கர்பிணியின் அம்மா," சார்..இது வீடு. சாமி மாதிரி. செருப்ப வெளில கழட்டி போடுங்க..." என்று சொன்னவளின் கன்னத்தில் மின்னல் வேகத்தில் ஒரு கை பதிந்தது,
"யாரைப்பார்த்து.... " என்ற போது இன்ஸ்பெக்ட்டரின் கழுத்திலும் ஒரு ஈட்டி இறங்கியிருந்தது....

   அதே நேரம்  ஊர்க்காரர்களும்,
"சார்..இங்க ஒரு பாடி தென்படுது சார்" என்று கத்திய போது   அங்கு சென்று ஒரு வித பதட்டத்துடனே அந்த பாடியை பார்த்தபோது சுரேஸின் உடலில் இருந்த குருஜியின் ஆத்மா ஸ்தம்பித்து நின்றது...

      ஆசிரமத்தை அடைந்த ராஜாவும் , சைக்கிளை கேட்டிலயே போட்டுவிட்டு, பூஜை நடக்கும் இடத்திற்கு ஓடினான். அங்கு நிலவிய கொடூரத்தைக் கண்டவன் ஒரு கணம் சுயநினைவு இழந்து, அங்கு கிடந்த ஒரு இரும்பு ராடை எடுத்துக்கொண்டு வாசகனின் கண்முன் எமன் போல் நின்றான்.....

தொடரும்..

    
  

    

    

    

Comments

Popular posts from this blog

அய்யாவு

துரோகமா! சாபமா!

கனகவள்ளி - 3