கனகவள்ளி - 10

       அரசுமருத்துவமனையை  செல்வாவின் ஆம்புலன்ஸ் அடைந்ததும், ஊழியர்கள் விரைவாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவரிடத்தில் கொண்டு செல்ல, அவர்கள் மூவரையும் சோதித்த இரவுநேர மருத்துவர்  ICU வில் அட்மிட் செய்ய உத்தரவிட்டார் ஊழியர்களிடம்.

     விபத்துக்குள்ளான நபர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவித்தனர் காவல்துறையினர்.

   மினி ஆம்புலன்சும், காவல்துறை ஜீப்பும் அரசுமருத்துவனை உள்ளே வர, அமரர் ஊர்தி வாகனம் மட்டும் உள்ளே வராமல் "கேட்"டுக்கு வெளியவே நின்றததைப் பார்த்த இன்ஸ்பெக்டர் மற்றும் ரகு , " ஹா ஹா ஹா " என சிரித்துவிட்டுச் சென்றனர்.

      ஆம் கர்பிணி பெண் குருஜியின் மந்திரசக்தியால் கட்டுப்படுத்தபட்டிருந்தார் அப்போது. ஏனெனில் மருத்துவமனையை அடைந்த செல்வா முதலில் குருஜிக்கு கால் செய்து நடந்த சம்பவங்களைத் தெரிவிக்க , குருஜியும் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கர்பிணிப் பெண்ணின் உடலைத்தேடி அலைய, அவளின் உடல் கிடைக்காததால்,  அந்த இடத்திலேயே கிடந்த அவளது கிழிந்த புடவையின் ஒரு பகுதியை வைத்து பூஜை செய்து அவளை கட்டுப்படுத்தியிருந்தார்.

     அவளது ஆன்மாவை தன் மந்திர சக்தியால ஒரு குடுவையில் அடைத்தவர், அதைத் தன் சீடர்களுள் ஒருவனான வாசகனை அனுப்பி தொலைதூரத்தில் யாருக்கும் தெரியாத வண்ணம் தன் மற்ற சீடர்களும் உட்பட, புதைத்து விட்டு வருமாறு சொன்னார்.

   மேலும் கூறிய குருஜி ," இன்றிலிருந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாள், அவளை கட்டுப்படுத்தினால் போதும் அவளது ஆன்மா சக்தியை இழந்து இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிடும். ஆகவே இதை பத்திரமாக மனிதன் புகா இடத்தில் புதைத்துவிடுங்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம்" என்றார்.

    முதன்மை சீடன் வாசகனும் குருஜியின் சொல்படி கேட்டு தனியாக கோவில் இருந்த திசையை நோக்கி நணந்தே சென்றார் ஏனெனில் அது அடர் வனமாக இருந்தது அப்போது. தொலைதூரம் சென்றவருக்கு பள்ளத்தில் கோவில் பார்வையில் பட, அதே நேரம் ராஜாவும் அங்கு வர, திடுக்கிட்ட வாசகன், " என்னப்பா ராஜா! நீ இங்க... இந்த நேரத்துல...." என இழுக்க..

அதற்கு ராஜாவோ," சாமி! அத ஏன் கேக்குறீங்க... ஒரு பேயி காட்டு காட்டுனு காட்டிருச்சு சாமி..அதான் பெரிய சாமிய பார்த்து ஏதாவது ஜாமா வாங்கிட்டு போலாம்னு இந்த குறுக்குவழில வந்தேன்..." என்று சொன்னவன் தொடர்ந்து," ஆமா சாமி! நீங்க...இங்க !" எனக் கேட்ட போது, அதற்கு வாசகனோ," ஒன்னுமில்லை ஒரு பூஜையாதான் வந்திருக்கேன். சீக்கிரம் முடிக்கனும்." என்ற போது , அங்கு பலமான உருமும் சத்தம் கேட்டதும் பயந்த ராஜா, " சாமி நான் போறேன் முன்னாடி...நீங்க வாங்க பின்னாடி..." என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் மனதுக்குள்,'இதுக்கு மேலயும் நம்ம பாடி தாங்கதுயா..' என்றவாறு மின்னல் வேகத்தில் மறைந்தான் அங்கிருந்து....

    இதை அனைத்தையும் ராஜாவின் ஆன்மாவும் பார்த்துக்கொண்டிருக்க," ச்சே! இவ்ளோ மக்காவா இருந்திருக்கோம்..." என்று தன்னையே நொந்துகொண்டான்.

       அதே நேரம் பலமான காற்று அடிக்க ஆரம்பிக்க , அதனால் மண் சரிவும் ஏற்பட, மேட்டில் நின்று கொண்டிருந்த வாசகன் அதனால் தடுமாறி 'தட தட தட' வென உருண்டு சென்று அந்த பாழடைந்த கோயிலின் முகப்பை அடைந்தான்.

     ஆனாலும் குடுவைக்குள் இருந்த அவளின் சத்தம் இப்போது இன்னும் அதிகமாக ஒலிக்க ஆரம்பிக்க, வாசகனோ,' இனியும் தாமதிக்க கூடாது' என்று நினைத்தவன் அந்த குடுவையை புதைக்க இடம் தேடி கோவிலின் வெளியில் சுற்றி அலைய இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவன்," சாமி சிலைதான் இல்லையே.. அங்க குழியா இருக்கிற கருவறைக்குள்ள போட்டு மூடிவச்சிட்டா..." என்று நினைத்து அவ்வாறே செய்தான்.

    அருகிலிருந்த மண்ணையும் அள்ளி வந்து மூடி, அதன்மேல் கல்லையும் வைத்து சிதைவடைந்த இடம்போல் மாற்றி அமைத்தான் எதிர்காலத்தில் யாருக்கும் சந்தேகம் வராதவாறு.

    அனைத்தையும் சரியாக செய்தவன் குருஜி கூறிய ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டான். ஆம் " எந்தவிதமான இரத்த பலியோ அல்லது இரத்தமோ அங்கே ஏற்படாதவாறோ பார்த்துக்கொள் இல்லையெனில் நமது எந்த சக்தியும் அவளை கட்டுப்படுத்தாது"  என்றிருந்தான்.

   ஆனாலும் விதி, அவனையே அறியாமல் கற்களை நகற்றியபோது அவனது விரல்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் அந்த குடுவையின் மீதே விழுந்ததால் அந்த மந்திர சக்தியை இழந்து புனிதத்தையும் இழக்க ஆரம்பித்தது அந்த நொடியே.

     இதை எதையும் அறியாத வாசகன்,  'அதை மூடிவிட்டு அங்கிருந்து விறு விறு' என்று திரும்பி பார்க்காமல் நடையைக்கட்டினான். ஏனெனில் ' புதைத்த இடம் யாருக்கும் தெரியக்கூடாது .. ஏன் எனக்கே தெரியக்கூடாது...' என்று குருஜி கூறியிருந்ததால் அதை மனதில் நினைத்துக்கொண்டே சென்றான், " யாரிடமும் சொல்லிவிடக்கூடாது " என்று.

   ஆனாலும் அந்த மந்திர குடுவை ஓரளவுக்கு அதன் சக்தியால் அவளின் ஆன்மாவை தடுத்தி நிறுத்தியே இருந்தது அப்போதைக்ககு...

     தொலைதூரம் நடந்து வந்த வாசகன் ஆசிரமம் வந்து சேர்ந்ததும் முதன் வேலையாக குருஜியிடம் சென்று," குருவே அனைத்தும் முடிந்தது.." என்று சொன்னபோது, குருஜியோ! அவனைப்பார்த்து மர்மப் புன்னகை பூத்தார். இதற்கோ அரத்தம் புரியாமல் வாசகனும் அங்கிருந்து நகர்ந்தான்.

     இப்போது குருஜிக்கும் அழைப்பு வந்தது அவரது மொபைலுக்கு. அதைப்பார்த்த போது திடுக்கிட்டவர் பிறகு நார்மலாகி அழைப்பை ஏற்று " ஹலோ..." என்றார். எதிர்புறமோ குருஜியே பணிவோடு வணங்கும்  தெய்வம் மல்டி பெசாலிட்டி மருத்துவமனையின் தலைவரும் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் கனகன் பேச ஆரம்பித்தார், " என்ன பிரச்சனையா ?" என்றார் குருஜியிடம்.

   குருஜியோ," இல்லை! சரிபண்ணியாச்சு..." என்றதும் தலைவர் கனகனும்," ம்..." என்று பதிலளித்துவிட்டு இணைப்பை துண்டித்தார்.

    'பிரச்சனை ஏதும் இல்லை ' என்று குருஜியின் உதடுகள் சொன்னாலும், தலைவர் கனகனே கேட்டதால் ஏதோ விபரீதமாகிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தார்.

   ஏனெனில் இதுவரை எத்தனையோ கொலைகள் செய்யப்பட்ட போதும் அதன் ஆன்மாக்களை கட்டுப்படுத்தியபோதும் இதில் மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது வியப்பாகவே இருந்தது. ஆம் இதுவரை குருஜியின் ஆட்களுக்கு எந்தவித இழப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனால் குழப்பத்திலேயே இருந்தார்.

  அதேநேரம் இந்த விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்களை சாந்தப்படுத்த பூஜைகளும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன ஆசிரமத்தில். அவர்களின் உறவினர்களும் அரசு மருத்துவமனைக்கு வந்து உடல்களைப் பெற தயாராகியிருந்நனர். முருகேசனது உறவினர்களும்.

    அமரர் ஊர்திக்கருகே பயந்து பயந்து ரகுவும் ரமேசும் இல்ல, மறுபடியும் குருஜியை தொடர்புகொண்டு கேட்டபிறகே திருப்தி அடைந்து ரகுவும் ரமேசும் வண்டியை மருத்துவமனைக்குள் கொண்டுவந்தனர். இருந்தாலும் வண்டியை விட்டு இறங்கும் வரை நடுக்கத்துடனேயே இருந்தனர்.

     முருகேசன் இறந்ததால் செல்வா, ரகு உட்பட குருஜியூம் வருத்தமடைந்திருந்தனர். இதனால்தான் தலைவர் கனகனும் குருஜியிடம் பேசினார் முருகேசனது இறப்பால். இதனால் மேற்கொண்டு விபரீதம் ஏற்படாத வண்ணம் இருக்க குருஜி அனைவருக்கும் பூஜை செய்யப்பட்ட மந்திர தாயத்துகளையும், தகடுகளையும், கயிறுகளையும் கொடுத்தனுப்பினார்.

     உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அரசு மருத்துவர்," இவர்களை காப்பாற்ற இனி தலைமை மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் இல்லையெனில் தெய்வம் மல்டிபெசாலிட்டி க்கு கொண்டு செல்லுங்கள் எனக் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கூற அவர்களும் ஒத்துக்கொண்டனர்.

     அங்கிருந்த இன்ஸ்பெக்டரும் மற்ற தகவல்களைப்பெற்று FIR ஐ தயார் செய்திருந்தார்.

      இதனால் விறு விறு என்று பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு சிறிது தெம்போடு இருந்த ரகு ," என்னா ஆட்டம் இந்த பேயி. இப்போ வா பார்க்கலாம் தைரியமிருந்தா..." என்று திட்டியவாறே ஆம்புலன்சை எடுத்து தெய்வம் மருத்துவமனைக்கு சென்றான்.

       மூவரின் பெற்றோரும் அவர்களுடனே வந்தாலும், மூவரும் கோம நிலையிலேயே இருந்ததைக் கண்டு அழுது கொண்டே இருந்தனர். " ஐயோ! இப்டியா வரணும் ..." என்று புலம்பியவாறே.

       மூவரையும் ICU வில் அட்மிட் செய்த பிறகு அவர்களை சோதித்த கனகன், அதில் மூவரும் நன்றாக இருந்தும் மூளைச் சாவு அடைந்திருப்பதாக பொய்யாக அறிக்கை கொடுத்தார் அவர்களது உறவுகளுக்கு. ஆம் தெய்வம் மல்டிபெசாலிட்டி மருத்துவமனையின் மறைமுக தொழிலே உடலுறுப்புகளை விற்பதுதான். அதற்காகத்தான் இத்தனை கொலைகளும்.

       ஆனால் இந்த கொலை செயலை கேட்டுக்கொண்டே இருந்த ஒருவன் உடலை ஆட்ட முற்பட அதை அறிந்த கனகன் மறுபடியும் மயக்க மருந்தை கொடுத்தார். இதனால் செயற்கை முடமாக்கப்பட்டான் அவன். அதனால் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது "உயிரோடையே கொல்லப்போறாங்களே. அப்பா! அம்மா ! " என அழைக்க நினைத்தாலும் அவனால் முடியாமல் போனது. இதைக்கண்ட ராஜாவின் ஆன்மாவோ அந்த பெற்றோர்களிடத்தில் சொல்லத் துடித்து முடியாமல் போனதால் மறுபடியும் அவன் கண்கள் கலங்கியது.

     அதேநேரம்  மூவரின் பெற்றோர்களிடமும்  அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற கனகனே அவர்களிடம் பேசி சம்மதத்தைப் பெற்றோர்," உங்க மகன்கள்.. எங்கயோ வாழ்ந்துகிட்டு இருப்பாங்க இதன் மூலம்..இந்த உடலுறுப்புகள் தானம் மூலம்..." என்று.

    இறுதியில் அறுவை சிகிச்சை ஆரம்பமானபோது பாதிக்கப்பட்டவனே முதலில் பலிகடா ஆனான். ஆம் உயிருடனேயே அவனுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, உடலுறுப்புகளை எடுக்க, கண்ணீருடன் விடைபெற்றது அவனது உடலின் இயக்கமும்.

     மற்ற இருவரது உடல்களும் அவ்வாறே.

  இறுதியாக அந்த உறுப்புகள் ,  பெரும் விலைக்கு வெளிநாட்டு மக்களிடம் விற்பனைக்கு டீல் செய்யப்பட்டு முடிந்தும் போனது.

இதற்கு உதவிய அனைவருக்கும் கனகனோ பணக்கட்டுகளை அள்ளி வீசினார்.

இதைப்பார்த்த ராஜா வாய அடைத்து நின்றான். இப்படி ஒரு   கொடூரமா என்று...

      இந்த மூன்று ஆன்மாக்களையும் குருஜி கட்டுப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றார்.

      இதனால்மந்திர தந்திரங்களால் காப்பாற்ற பட, கர்பிணிப்பெண்ணும் அடைபட்டுக்கிடக்க மீண்டும் விபத்துகளை ஏற்படுத்தி அபகரித்தவாறே இருந்தனர்.

   இப்போது அனைத்தையும் அறிந்த ராஜா," இவனுகள கொல்றது தப்பே இல்ல... " என்றவன் "ஆனா... இந்த கர்பிணிப்பெண் எப்படி வெளியில் வந்தது" என்று யோசித்த போதுதான் ராஜாவுக்கு அந்த நினைவுகள் வந்தது.

     ஆம் அந்த கோவிலில் புதையல் இருப்பதாகவும் அது எங்கிருக்கிறது என்பதை கண்டறிந்து எடுத்து தர ராஜாவையும் மாதவனையும் ஒருவன் அணுகியது இப்போது நியாபகம் வந்தது அவனுக்கு.

    'ஆம் அந்த கோவிலின் கருவறையை நோண்டி அந்த குடுவையை திறந்து விட்டது தான் தான்' என்பது நியாபகம் வந்ததும் விக்கித்து நின்ற ராஜாவின் ஆன்மா, இப்போது ராஜாவின் உடலுக்கே திரும்பிச் சென்றது.....

ஆம் இப்போது ராஜா கண்விழித்து பார்த்தபோது செட்டியார் வீட்டில் ரத்தம் வடிய கிடந்ததை உணர்ந்தவன்,

   அதேநேரம் நடு ஹாலில் இருந்த கர்பிணி பெண்ணை பார்த்ததும் கண்ணீரை வடித்தவன் அதன்  பின்னால் ஏதோ ஒரு உருவம் நடந்து செல்வதைப் பார்த்த போது அதிர்ந்தான் அது யாரென்று...



     

     

     

  

    

    

   

    

  

Comments

Popular posts from this blog

அய்யாவு

துரோகமா! சாபமா!

கனகவள்ளி - 3